For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உயிரை உறைய வைக்கும் குளிர்... நிலத்திற்கு அடியில் வாழும் உக்ரைன் மக்கள்!

Google Oneindia Tamil News

கீவ்: உக்ரைன் நாட்டில் கடுங்குளிரில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மக்கள் நிலத்திற்கு அடியில் குடியிருப்பை அமைத்து வாழ்ந்து வருகிறார்கள்.

ரஷ்யாவின் அண்டை நாடு உக்ரைன். அண்டை நாடு மட்டுமல்ல, கடுமையான போர்ச் சூழலில் இருந்து வரும் நாடும் கூட.

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆதரவுப் புரட்சிப் படையினர் உக்ரைன் அரசுக்கு எதிராக நீண்ட காலமாக போரிட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்க உக்ரைன் அரசு திணறி வருகிறது. இத்தாக்குதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 298 பயணிகளுடன் சென்ற மலேசிய விமானம் ஒன்று கிழக்கு உக்ரைனில் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில், அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

பக் ஏவுகணைத் தாக்குதல்..

பக் ஏவுகணைத் தாக்குதல்..

இந்த தாக்குதல் பக் ஏவுகணை மூலம் ரஷ்ய புரட்சிப்படை நடத்தியதாக அமெரிக்கா உறுதி படுத்தியது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலேசிய விமானத்தை உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான போர் விமானம் தாக்கியதாகக் கூறி அதற்கான ஆதாரப் புகைப்படங்களும் அந்நாட்டு ஊடகங்களில் வெளியானது.

போரைத் தாங்கலாம்.. குளிரை முடியாது

போரைத் தாங்கலாம்.. குளிரை முடியாது

இது ஒருபுறம் இருக்க, இந்தப் போர் வெப்பத்தைக் கூட உக்ரைன் நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள முடிகிறது. ஆனால் அங்கு நிலவும் கடுமையான குளிரைத்தான் அங்குள்ள மக்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

கடுங்குளிர்...

கடுங்குளிர்...

ஐரோப்பிய நாடான உக்ரைனில் தற்போது கடுங்குளிர் காலம் நிலவி வருகிறது. இதனால் இங்கு வாழும் பலரது உடலின் வெப்பநிலை கணிசமாக குறைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அளவிற்கு சூழ்நிலை நிலவுகிறது.

அபாயகரமானது...

அபாயகரமானது...

அடிக்கும் குளிருக்கு மக்கள் உறைந்து போய் விடும் அளவுக்கு அபாயகரமானதாக குளிர் வீசுகிறது. கடந்த ஆண்டுகளில் கடுங்குளிரில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நிலத்தடி குடியிருப்பு...

நிலத்தடி குடியிருப்பு...

எனவே, முன்னெச்சரிக்கையாக இந்தாண்டு கிழக்கு உக்ரைனில் கடும் குளிர் வீசி வரும் பகுதியான டோனெட்ஸில் வாழ்ந்து வரும் பலர் தங்களது குடியிருப்புகளை நிலத்திற்கு அடியில் மாற்றிக் கொண்டுள்ளனர்.

குட்டி வீடு...

குட்டி வீடு...

உண்மையில் இந்த அன்டர்கிரவுண்ட் குடியிருப்பானது புரட்சிப் படையினருக்கும், உக்ரைன் படையினருக்கும் இடையிலான மோதலிலிருந்து தப்புவதற்காக அமைக்கப்பட்டதாகும். குட்டி வீடு போல இது உள்ளது.

குடும்பத்துடன்...

குடும்பத்துடன்...

இந்த ஷெல்டரைத்தான் தற்போது குளிரிலிருந்து தப்புவதற்கும் இவர்கள் பயன்படுத்துகிறார்கள். சின்னதாக இருக்கும் இந்த ஷெல்டர்களில் குடும்பத்துடன் தங்கி வருகிறார்கள் உக்ரைனியர்கள்.

தேவை பட்டால் மட்டும்...

தேவை பட்டால் மட்டும்...

இங்கேயே சமைத்துச் சாப்பிட்டு, தூங்கி வருகிறார்கள். தேவை ஏற்பட்டால் மட்டுமே வெளியே வருகிறார்களாம்.

English summary
People living in underground shelters to hide from near-daily shelling in the hard-hit areas of eastern Ukraine's city of Donetsk now face the onset of a harsh winter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X