உக்ரைன் விவகாரம்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தீர்மானம் தோல்வி
ஜெனீவா: உக்ரைன் விவகாரத்தில் மனிதாபிமான வரைவு தீர்மானம் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதமாக போர் தொடுத்து வருகிறது. இதனால் உலக அளவில் சர்வதேச சந்தையில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு உலக நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன.
ஆனாலும் தொடர்ந்து ஆக்ரோஷமாக போரிட்டு வரும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார நெருக்கடியை விதித்துள்ளது. இந்த நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மனிதாபிமான வரைவு தீர்மானத்தை ரஷ்யா கொண்டு வந்தது.

உக்ரைன் மீது ரஷ்யா போர்
இந்த தீர்மானத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிவது குறித்து குறிப்பிடாமல் தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்கள் உள்ளனர். அதில் ரஷ்யாவின் தீர்மானம் நிறைவேறுவதற்கு குறைந்தபட்சம் 9 நாடுகளின் ஆதரவு வாக்குகள் தேவைப்பட்டது.

தீர்மானம் தோல்வி
ஆனால் 13 உறுப்பினர்கள் வாக்களிக்காமல் இருந்தனர். மனிதாபிமான வரைவு தீர்மானத்தை ஆதரித்து ரஷ்யாவும் அதன் நட்பு நாடான சீனாவும் மட்டுமே ஆதரவு தெரிவித்தது. ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்திற்கு போதிய ஆதரவு கிடைக்காததால் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

15 நாடுகள்
பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தம் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அவை சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் அலேனியா, பிரேசில், கபான், கானா, இந்தியா, அயர்லாந்து, கென்யா, மெக்சிகோ, நார்வே, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் உள்ளன.

கோரிக்கை
ரஷ்யா தீர்மானத்தின் மீது இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 13 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன. அதே வேளையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் உக்ரைனில் பாதுகாக்கப்பட வேண்டும். அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக எந்த தடையுமின்றி வெளியேற்றப்பட வேண்டும். போரை நிறுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கைகளை மற்ற நாடுகள் முன் வைத்தன. கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ரஷ்யாவுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சில், ஐநா பொதுச் சபையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications