இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா.. நடுவானில் ஈரானை திணறடித்த யு.எஸ் விமானப்படை.. திக்
டெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த ஏவுகணைகளை வழிமறிக்க அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவி உள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் ஈரான் இடையே பயங்கரமான போர் மூண்டுள்ளது. இத்தனை நாள் இரண்டு நாடுகளுக்கு இடையில் புகைச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

200 ஏவுகணைகளை டிரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் மீது ஈரான் ஏவி உள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்ட ஈரானிய ஆளில்லா விமானங்கள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் இன்னும் இஸ்ரேலை அடையவில்லை. விரைவில் அவை இஸ்ரேல் மீது சென்று தாக்குதலை ஏற்படுத்தும். சில ஏவுகணைகள் தற்போதைக்கு இஸ்ரேலின் ராணுவ தளவாடங்களை தாக்கி லேசான சேதங்களை ஏற்படுத்தி உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
ஆயிரக்கணக்கான ட்ரோன் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. அவற்றை இடைமறித்து அழித்துவருகிறோம் என இஸ்ரேல் ராணுவ தலைமையகம் தகவல் வெளியிட்டு உள்ளது. இஸ்ரேலின் ராணுவ தளங்களில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலும், பெரிய அளவில் சேதம் என ஈரானும் கூறியுள்ளன. உண்மையில் சேதம் எவ்வளவு என்று தெரியவில்லை.
அமெரிக்கா வழிமறிப்பு: இந்த ஏவுகணைகளை வழிமறிக்க அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவி உள்ளதாக கூறப்படுகிறது.
ஈரான் ராக்கெட் தாக்குதல்களை சமாளிக்க இஸ்ரேல் அயர்ன் டோம் எனப்படும் ஏவுகணைகளை இடமறித்து தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது.
10க்கும் மேற்பட்ட இதுபோன்ற அயர்ன் டோம்களை இஸ்ரேல் காஸா அருகிலும், பாலஸ்தீனத்திலும் வைத்து, ஈரான் ஏவும் ராக்கெட்டுகளை எல்லாம் பூமிக்கு வரும் முன்பே வானிலே மறித்து தாக்கி விடுகிறது. கடந்த ஜனவரியில் இருந்து பாலஸ்தீனத்தில் இருந்து வந்த வந்த சுமார் 2000 ராக்கெட்டுகளை இந்த அயர்ன் டோம் இடைமறித்து தாக்கி உள்ளது. இதனால் இஸ்ரேல் பக்கம் இதுவரை பெரிய அளவில் சேதாரம் ஏற்படவில்லை. இப்போது ஈரான் ஏவுகணைகளை இடைமறித்தது இதுதான் என்று கூறப்படுகிறது.
இஸ்ரேல் மீதான தாக்குதலை அடுத்து தேசிய பாதுகாப்புக் குழுவுடன் அமெரிக்க அதிபர் பைடன் ஆலோசனை.மேற்கொண்டு வருகிறார். அதே சமயம் இஸ்ரேலிய வான்வெளிக்குள் நுழைவதற்கு முன் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் விமானப்படைகள் ஈரான் ஏவுகணைகளை நடுவானில் மறித்து அழித்ததாக கூறப்படுகிறது. இந்த மோதல் காரணமாக அண்டை நாடுகளான ஜோர்டான், ஈராக், லெபனான் தங்களது வான் பரப்பை மூடியுள்ளதாக தெரிவித்துள்ளன
ஈரானின் தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம். மத்திய கிழக்கு நாடுகள் இடையே பெரிய அளவில் மோதல் நிகழாமல் தடுக்க இரு தரப்பும் தாக்குதலை நிறுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூதரக அட்டாக் - பதிலடி: கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அங்கே ஈரான் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் அப்போது நடந்தது.
ஈரானிய இராணுவத் தளபதிகள் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரக வளாகத்திற்குள் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டுவது பாதுகாப்பானது என்று நினைத்து அங்கே கூட்டம் நடத்திக் கொண்டு இருந்தனர். , சர்வதேச விதிமுறைகளின் படி தூதரகங்களை தாக்க கூடாது. இதனால் அங்கே ஈரான் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் நடந்தது.
ஆனால் சர்வதேச யுஎன் விதிகளை மீறி தூதரக வளாகத்தின் மீது வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டது. இதில் ஏழு ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஈரானின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளின் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி கொல்லப்பட்டார். இவர் புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த தளபதி ஆவார்.
இந்த தாக்குதலுக்குத்தான் தற்போது ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. இஸ்ரேல் ஈரான் இடையே பயங்கரமான போர் மூண்டுள்ளது. இத்தனை நாள் இரண்டு நாடுகளுக்கு இடையில் புகைச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications