பாகிஸ்தான் மாறவேயில்லை.. அமெரிக்க இராணுவ ஜெனரல் குற்றச்சாட்டு.. வலுக்கும் வார்த்தை போர்!
தீவிரவாதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பாகிஸ்தான் இன்னும் மாறவேயில்லை என்று அமெரிக்க இராணுவ ஜெனரல் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
Recommended Video

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் முதல் புத்தாண்டு டிவிட்டே இந்த வருடத்தில் பெரிய பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் இடம் அளிப்பதாக வெளிப்படையாக அவர் குற்றச்சாட்டு வைத்து இருந்தார்.
மேலும் நாங்கள் கஷ்டப்பட்டு ஆப்கானிஸ்தானில் பிடிக்கும் தீவிவாதிகளுக்கு பாகிஸ்தான் சந்தோசமாக இடம் தருகிறார்கள் என்றும் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். இதற்கு எதிராக பாகிஸ்தான் சம்மன் அனுப்பி இருந்தது.
தற்போது அமெரிக்க இராணுவ ஜெனரல் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். தீவிரவாதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பாகிஸ்தான் இன்னும் மாறவேயில்லை என்று அவர் கூறியுள்ளார்.

முன்பே தொடங்கிவிட்டது
சரியாக சொல்ல வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு கடந்த நவம்பர் மாதமே தொடங்கிவிட்டது. அப்போதே பாகிஸ்தானுக்கு அளிக்க இருக்கும் பொருளாதார உதவிகளை நிறுத்த போவதாக டிரம்ப் கூறியிருந்தார். மேலும் டிரம்ப் கிட்டத்தட்ட 225 மில்லியன் டாலர் உதவிகளை நிறுத்தி வைப்பார் என்றும் கணிக்கப்பட்டது.

இராணுவ தளபதி
தற்போது இதுகுறித்து அமெரிக்க இராணுவ தளபதி ஜான் நிக்கோல்சன் கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில் ''முன்பு பார்த்தது போலவே தான் பாகிஸ்தான் இப்போதும் இருக்கிறது. பாகிஸ்தானிடம் எந்த மாற்றமும் இல்லை. தீவிரவாதத்திற்கு எதிரான டிரம்ப்பின் நிலைப்பாடு பாகிஸ்தானுக்கு புரியவில்லை. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நன்மைக்காகத்தான் நாங்கள் செயல்படுகிறோம்'' என்றும் அவர் கூறியுள்ளார்.

கோபம்
இதுகுறித்து மேலும் பேசிய அவர் ''அமெரிக்க அதிபரின் டிவிட் குறித்துதான் எல்லோரும் இப்போது பேசுகிறார்கள். ஆனால் அமெரிக்காவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் எல்லோருமே பாகிஸ்தானிற்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அதிகமாக இடம் கொடுக்கிறது'' என்று கோபமாக பேசி இருக்கிறார்.

ஏற்கனவே தெரியும்
இதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குவாஜா ஆசிப், ''அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு பொதுவில் மக்கள் மத்தியில் பதில் அளிக்க நாங்கள் தயார். நாங்கள் குற்றம் செய்யவில்லை என்பதற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. அமெரிக்கா எங்களுக்கு அளிக்கும் உதவியை நிறுத்தும் என்று எங்களுக்கு முன்பே தெரியும். எனவே டிரம்ப்பின் டிவிட் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications