ஈரான் - யு.எஸ். உறவுகளில் புதிய திருப்பம்! 35 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி பேச்சு!!
வாஷிங்டன்: ஈரான் மற்றும் அமெரிக்க உறவுகளில் புதிய திருப்பமாக 35 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளிடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
1979ஆம் ஆண்டு ஈரானில் நிகழ்ந்த இஸ்லாமியப் புரட்சியால் மேற்கத்திய நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது. அண்மைக்காலமாக ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா கூறி நெருக்கடியையும் கொடுத்து வந்தது.

புதிய அதிபர் பதவியேற்பு
இந்நிலையில் ஈரானின் புதிய அதிபராக ஹசன் ருஹானி பதவி ஏற்றதைத் தொடர்ந்து 35 ஆண்டுகால பதற்ற உறவுகள் தணியத் தொடங்கின.

ஒபாமா- ருஹானி சந்திப்பு?
மேலும் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் உரையாற்ற இருக்கும் ஈரான அதிபர் ருஹானியும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கை கொடுத்து புதிய உறவுக்கு வித்திடுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏமாற்றம்
ஆனால் இருதரப்புமே அதிபர்களின் சந்திப்பை தவிர்த்துவிட்டனர்.

ஈரானுக்கு ஒபாமா வரவேற்பு
அதே நேரத்தில் ஐநா பொதுசபை கூட்டத்தில் நேற்று ஒபாமா பேசினார். அப்போது ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சபையில் இருந்தார். ஆனால் இஸ்ரேல் வெளிநடப்பு செய்தது. ஒபாமா தமது உரையில், அணுசக்தி குறித்த விஷயங்களிலும் புதிய அணுகுமுறைகள் பரிசீலிக்கப்படும் என்று தான் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

ஈரானுடன் பலகட்ட பேச்சுவார்த்தை
இதனிடையே அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோட்ஸ் கூறுகையில், அணுசக்தி தொடர்பான விவகாரங்களில் ஈரானுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளோம். ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில் ஈரான் நாட்டு அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும். அனைத்து பிரச்னைக்கும் உடனடியாக தீர்வு கிடைத்துவிடும் என கூற முடியாது என்றார்.

நாளை பேச்சுவார்த்தை
இந்நிலையில் இரு நாடுகளிடையேயான நேரடி பேச்சுவார்த்தை 35 ஆண்டுகளுக்குப் பின்னர் நாளை நடைபெற உள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷாரீப் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

என்ன பேசப்படும்?
இப்பேச்சுவார்த்தையில் டெஹ்ரான் அணுசக்தி ஒப்பந்தம், யுரேனியம் பங்கீடு உள்பட முக்கிய விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிகிறது.

இஸ்ரேல் எச்சரிக்கை
ஆனால் ஈரானுடனான பேச்சுவார்த்தை மற்றும் உறவை மேம்படுத்துவதில் அமெரிக்கா மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதன் நட்பு நாடான இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications