என்னா உடல் அமைப்பு, ப்ப்பா..! பிரான்ஸ் அதிபரின் மனைவியை வர்ணித்த ட்ரம்ப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரான்ஸ் : பிரான்ஸ் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிபரின் மனைவியை பொதுஇடத்தில் வைத்து அவரது உடல் அமைப்பு குறித்து கூறிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது.

பிரான்ஸ் நாட்டு புரட்சியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14ம் தேதி சிறப்பான நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ட்ரம்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதனையடுத்து அமெரிக்க அதிகர் ட்ரம்ப், முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப்புடன் பிரான்ஸ் சென்றுள்ளார். பாரீஸில் உள்ள அருங்காட்சியம் ஒன்றில் அதிபர் மேக்ரான் மற்றும் முதல் பெண்மணி பிரிஜ்ஜிட் மேக்ரானை சந்தித்தார்.

 கவர்ச்சி கட்டமைப்பு

கவர்ச்சி கட்டமைப்பு

இந்த சந்திப்பின் போது பிரிஜ்ஜிட்டை பார்த்து ‘உங்களது உடல் கவர்ச்சி கட்டமைப்புடன் உள்ளது ' என்று கூறியுள்ளார். அதோடு நிறுத்தாமல் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை நோக்கி ‘உங்கள் மனைவி மிகவும் அழகாக இருக்கிறார்' எனப் புகழ்ந்து பேசியுள்ளார்.

சலசலப்பு

சலசலப்பு

டொனால்ட் டிரம்ப் பேசிய இவ்வார்த்தைகள் கூட்டத்தினர் மத்தியில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது. இம்மானுவேல் மேக்ரானை விட அவரது மனைவி 15 வயது மூத்தவராக உள்ளதால் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அவரது அழகை அதிபர் ட்ரம்ப் தற்போது புகழ்ந்து பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

 கவனத்தை ஈர்த்த பிரிஜ்ஜிட்

கவனத்தை ஈர்த்த பிரிஜ்ஜிட்

பிரான்ஸ் அதிபராக மேக்ரன் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவரை விட அதிக அளவில் கவனத்தை ஈர்த்தவர் அவருடைய மனைவி பிரிஜ்ஜிட். ஏனெனில் 17 வயதில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது தன்னுடைய ஆசிரியையை மணப்பதாக உறுதியளித்த மேக்ரன் அதை போலவே தன்னுடைய பள்ளி ஆசிரியையை மணந்தார்.

சர்ச்சை

சர்ச்சை

2007-ல் பிரிஜ்ஜெட்டுக்கு விவாகரத்தான பின்னர் தன்னுடைய 29 வயதில் பிரிஜ்ஜெட்டை மேக்ரன் மணந்து கொண்டார். இந்நிலையில் தலைவர்களுடனான சந்திப்பில் ஏதாவது சர்ச்சையை கிளப்பும் ட்ரம்ப் பிரான்ஸ் நாட்டின் முதல் பெண்மணியின் உடல் அமைப்கை குறித்து பேசி அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
President Trump Tells French First Lady Brigitte Macron ‘You’re in Such Good Shape’
Please Wait while comments are loading...