Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரக்குலையே நடுங்க செய்யும் துப்பாக்கி சத்தம்.. காபூல் ஏர்போர்ட்டில் ஒரே பரபரப்பு.. பீதியில் மக்கள்.!

காபூல் விமான நிலையத்தில் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், தலிபான்கள் வசம் வந்துள்ள நிலையில் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது... அந்த நாட்டு மக்கள் காபூல் ஏர்போர்ட்டில் திரண்டு கொண்டிருக்கிறார்கள்.. இது சம்பந்தமான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Recommended Video

    ஈரக்குலையே நடுங்க செய்யும் துப்பாக்கி சத்தம்.. காபூல் ஏர்போர்ட்டில் ஒரே பரபரப்பு.. பீதியில் மக்கள்.!

    ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும், தாலிபன்களுக்கும் இடையே உள்நாட்டு போர் சமீப காலமாகவே நடந்து வந்தது..

    இதற்காகவே கிட்டத்தட்ட 20 வருஷமாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு வந்தது அமெரிக்க படைகள்.. அதனாலேயே இதுவரை அமைதி காத்து வந்த தாலிபன்கள் இப்போது, அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறி வருவதை தொடர்ந்து மறுபடியும் அந்நாட்டை குறி வைத்து முன்னேறினர்.

     தாலிபன்கள்

    தாலிபன்கள்

    அமெரிக்க படைகளின் கண்காணிப்பு, ஆப்கானிஸ்தானில் பலமாக இருந்து வந்ததால் தாலிபன்கள் இத்தனை வருஷமாக பதுங்கி கிடந்தனர்.. ஆனால், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆப்கானில் முகாமிட்டு வந்த படைகளை அங்கிருந்து திரும்ப பெறுவதாக சமீபத்தில் அறிவித்துவிடவும், அமெரிக்க படைகளும் வெளியேறி விட்டன. இதையடுத்து தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் பாய ரெடியாகி விட்டனர்.

     காபூல்

    காபூல்

    மிகக் குறுகிய காலத்தில் ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தலிபான்கள், தலைநகர் காபூலையும் நேற்றைய தினம் அதிரடியாக கைப்பற்றிவிட்டனர்.. ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, காபூலில் இருந்து மொத்தமாக வெளியேறி விட்டதாகவும், தலிபான்கள் தரப்பில் இடைக்கால அதிபராக அலி அகமது ஜலாலி நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் பரபரத்தன.

    அச்சம்

    அச்சம்

    இப்போது விஷயம் என்னவென்றால், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ள சூழலில், எங்கே மறுபடியும் நாட்டில் பழமைவாதம் தலைதூக்கிவிடுமோ என்று மக்களுக்கு கலக்கம் சூழ்ந்துவிட்டது.. அதனால், வெளிநாடுகளில் அவர்கள் தஞ்சமடைய துவங்கியுள்ளனர்... வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆப்கனை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள்.

     அச்சுறுத்தல்

    அச்சுறுத்தல்

    ஆனால், ஆட்சி மாறினாலும் பொது மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படாது.. எங்களை பார்த்து பயப்படாதீங்க என்று தலிபன்கள் அறிக்கை விட்டும் மக்கள் அதை நம்ப தயாராக இல்லை.. காரணம், கடந்த காலங்களில் அந்த அளவுக்கு அட்டகாசத்தை தாலிபன்கள் செய்து வைத்துள்ளனர்.. நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் ஏர்போர்ட்டில் மக்கள் குவிந்து கொண்டே இருக்கிறார்கள்.. அதன் வீடியோ காட்சிகள்தான் தற்போது சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி கொண்டிருக்கின்றன.

    வீடியோ

    வீடியோ

    தலைநகரின் பல இடங்களில் "டம்.. டம்".. என்று துப்பாக்கி சத்தம் கேட்கிறதாம்.. இதை அந்த மக்களே நடுநடுங்கி போய் சொல்கிறார்கள்... காபூல் ஏர்போட்டில் தலிபான் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க தூதரகமும் தெரிவித்துள்ளது... காபூல் விமான நிலையம், அமெரிக்க தூதரத்திற்கு அமெரிக்கர்கள் யாரும் வரவேண்டாம், இப்போ எங்கே இருக்கீங்களோ, அங்கேயே பாதுகாப்பாக இருங்கள் என்று அமெரிக்கர்களுக்கு அந்த நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.. நேற்று முதல் ஆப்கானிஸ்தானில் பதற்றம் நிலவுவதால், அதன் பக்கத்து நாடான பாகிஸ்தான், உடனே தன்னுடைய எல்லைகளை மூடிவிட்டது.

     ஏர்போர்ட்

    ஏர்போர்ட்

    இதனிடையே, காபூல் விமான நிலையத்தின் முக்கிய பகுதிகளில் அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது... அதுமட்டுமல்ல, 300 பேர்கள் மட்டுமே பயணிக்க பயன்படுத்தப்படும் ஒரு ஃபிளைட்டில் சுமார் 1000 பேர்கள் புறப்பட முயன்று வருவதாகவும் இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது..

     வாக்குவாதம்

    வாக்குவாதம்

    அதேசமயம், இனி பயணிகள் விமானங்கள் காபூல் ஏர்போட்டில் இருந்து புறப்பட வாய்ப்பில்லை என்றும், ராணுவ ஹெலிகொப்டர் மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.. இந்த விஷயம் கேட்ட மக்களோ, உடனே ஃபிளைட்டை இயக்குங்கள் என்று கூச்சலிட்டு கொண்டிருக்கிறார்கள்.. துருக்கிக்கு ஒரு ஃபிளைட் கிளம்ப ரெடியாக இருந்ததாம்.. ஆனால், அதையும் கடைசி நேரத்தில் கேன்சல் செய்துவிடவும், ஆத்திரமடைந்த பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொடுங்கோல்

    கொடுங்கோல்

    தாலிபான் தீவிரவாத அமைப்பின் கைகளில் ஆப்கானிஸ்தான் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தீவிரவாத அமைப்பின் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறி வருவதை யாராலும் இப்போதைக்கு நிறுத்த முடியவில்லை.. மக்களுக்கும் எந்தவித அமைதியும் மனதில் ஏற்படவில்லை.. அந்த அளவுக்கு பாதிப்புகளை இவர்கள் கடந்த காலங்களில் சந்தித்துள்ளனர்.. அதிலும் இளம் பெண்கள்தான் தாலிபன்களிடம் படாதபாடு பட்டனர்...

     பரபரப்பு

    பரபரப்பு

    தங்கள் கட்டுபாட்டில் வந்த பகுதிகளில் வசிக்கும் இளம்பெண்களுக்கு ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டு நெருக்கடியும், அழுத்தமும் தந்ததை, பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னும் மறக்கவே இல்லை.. ஒரு இளம் பெண், குடும்பத்தில் ஆணின் துணையில்லாமல் வெளியே வந்ததாலேயே சுட்டுக்கொன்ற கொடியவர்களை எந்த காலத்திலும் இவர்கள் நம்ப தயாராகவும் இல்லை.. கொஞ்சம் கொஞ்சமாக படித்து, சுய நம்பிக்கையில் அந்த நாட்டு பெண்கள் போராடி மெல்ல மெல்ல மேலே வந்து கொண்டிருந்த நிலையில், அடுத்து என்னாகுமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. பார்ப்போம்..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+