For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் படிக்க ஆர்வம் காட்டும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்திய மாணவர்களின் அமெரிக்க கல்வி மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

ஆனால், நம் அண்டை நாடான சீன மாணவர்களோ அமெரிக்க கல்வியை பற்றியே நினைக்க கூட மறந்து வருகின்றனர்.

இந்த ஆண்டில் மட்டும் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் அமெரிக்க கல்விக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அதிகரிக்கும் எண்ணிக்கை:

அதிகரிக்கும் எண்ணிக்கை:

அமெரிக்க கல்லூரிகளில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

சீனர்களின் எண்ணிக்கை குறைவு:

சீனர்களின் எண்ணிக்கை குறைவு:

அதேசமயம், சீன மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இதுபற்றிய 2013 ஆம் ஆண்டு கணக்குப் பட்டியல் தகவலை அமெரிக்க பட்டதாரி பள்ளிகள் கவுன்சிலின் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சர்வதேச அளவில் அதிகரிப்பு:

சர்வதேச அளவில் அதிகரிப்பு:

இந்த தகவலின்படி இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 32 சதவீதம் உயர்ந்துள்ள வேளையில், மொத்தமாக சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையும் 18 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் சீன மாணவர்ளின் எண்ணிக்கை 1 சதவீதம் குறைந்துள்ளது.

குவியும் விண்ணப்பங்கள்:

குவியும் விண்ணப்பங்கள்:

மொத்த சர்வதேச மாணவர்களில் சீனாவிலிருந்துதான் மூன்றில் ஒரு பங்குப் பேர் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றம் அதிகம்:

மாற்றம் அதிகம்:

இந்த ஆண்டு அமெரிக்க கல்லூரிகளில் படிக்க விரும்பி விண்ணப்பித்த சர்வதேச மாணவர்ளின் எண்ணிக்கை இதுவரை 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் 2013 ஆம் ஆண்டு 2 சதவீத உயர்வையே பெற்றிருந்தது.

வருகை அதிகரிப்பு:

வருகை அதிகரிப்பு:

2006 ஆம் ஆண்டுக்கும் 2012 ஆம் ஆண்டுக்கும் இடையிலான கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் தற்போதுதான் சர்வதேச மாணவர்களின் வருகை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

டாப் 5வில் இந்தியா:

டாப் 5வில் இந்தியா:

அமெரிக்காவில் படிக்க வரும் சர்வதேச மாணவர்களில் சீனா, இந்தியா, தென் கொரியா, தைவான், கனடாவைச் சேர்ந்த மாணவர்கள்தான் " டாப் 5" இடத்தில் உள்ளனர்.

மாணவர்கள் விருப்பம்:

மாணவர்கள் விருப்பம்:

அதேபோல மெக்சிகோ, பிரேசில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களும் கணிசமாக கல்வி கற்க அமெரிக்காவிற்கு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Applications from prospective Indian students to US graduate schools surged dramatically while those from China slowed down a bit in 2013, according to a new report from the council of graduate schools (CGS).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X