இஸ்ரேல் பிரதமரையும் நாடு புகுந்து தூக்குங்க.. டிரம்பிடம் கூறிய பாகிஸ்தான்.. ஆத்திரத்தில் நெதன்யாகு
இஸ்லாமாபாத்: ‛‛வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை போல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்கா கைது செய்ய வேண்டும்'' என்று பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார். இதனால் இஸ்ரேல் - பாகிஸ்தான் இடையே பிரச்சனை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 3ம் தேதி வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க படையினர் கைது செய்தனர். வெனிசுலா நாட்டுக்குள் நுழைந்த அமெரிக்க படையில் நிகோலஸ் மதுரோவை பெட்ரூமில் புகுந்து கைது செய்தனர். அதன்பிறகு அவரும், அவரது மனைவியும் அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டனர். நியூயார்க்கில் உள்ள சிறையில் இருவரும் தனித்தனியாக அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தான் நிகோலஸ் மதுரோவை போல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவையும் கைது செய்ய வேண்டும் என்று அமெரிக்காவிடம் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛மனிதகுலத்தில் மிக மோசமான குற்றவாளியாக நெதன்யாகு. காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் வரலாற்றில் கொடூரமானது. ஏனென்றால் கடந்த 4,000-5,000 ஆண்டுகளில் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கு செய்ததை எந்த சமூகமும் செய்ததில்லை. உலகமே இவரை போன்ற ஒரு பெரிய குற்றவாளியைக் கண்டதில்லை.
இதனால் வெனிசுலா அதிபரை கடத்தியபோல் இஸ்ரேல் பிரதமரை அமெரிக்கா கடத்த வேண்டும். அதேபோல் துருக்கியும் நாடு புகுந்து இஸ்ரேலை கடத்த வேண்டும். இதற்காக பாகிஸ்தானியர்கள் பிரார்த்திகிறார்கள்'' என்று கூறியுள்ளார். இதனால் பாகிஸ்தான் மீது இஸ்ரேல் கடும் ஆத்திரத்தில் உள்ளது.
ஏற்கனவே இருநாடுகளுக்கு இடையே நல்ல உறவு இல்லை. இஸ்ரேலை தனி நாடாக இன்று வரை பாகிஸ்தான் அங்கீகரிக்கவில்லை. இப்படியான சூழலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்கா அல்லது துருக்கி கைது செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது இருநாடுகள் இடையேயான மோதலை அதிகப்படுத்தி உள்ளது.
ஆனால் பாகிஸ்தானின் கோரிக்கையை அமெரிக்கா ஏற்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பாகிஸ்தான் - அமெரிக்கா உறவை விட அமெரிக்கா - இஸ்ரேல் உறவு அதிக நெருக்கத்துடன் உள்ளது. அடிக்கடி டொனால்ட் டிரம்ப் - பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் பேசி கொள்வதோடு, நேரில் சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பாகிஸ்தான் சுட்டிக்காட்டி காசா விவகாரத்தில் டொனால்ட் டிரம்பே, இஸ்ரேலுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் தான் உள்ளார். இதனால் அது நடக்க வாய்ப்பில்லை.
அதேவேளையில் துருக்கியாவது நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் கெஞ்சியுள்ளது. துருக்கியை எடுத்து கொண்டால் அது பாகிஸ்தானுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. துருக்கி அதிபரின் பெயர் தையிப் எர்டோகன். இஸ்லாமிய மதத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். இவருக்கும், இஸ்ரேலுக்கும் பிரச்சனை உள்ளது. நீண்டகாலமாக துருக்கி - இஸ்ரேல் மோதி வருகிறது.
காசாவின் மீதான போர் நடவடிக்கையின்போது கூட துருக்கி கட்டி கொடுத்த மருத்துவமனையை இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இடித்தது. இதனால் இருநாடுகள் இடையே பிரச்சனை நிலவி வருகிறது. இதனை சாதகமாக்கி தான் துருக்கி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
ஆனால் இஸ்ரேலுக்குள் நுழைந்து பெஞ்சமின் நெதன்யாகுவை, துருக்கியால் தூக்கி வர முடியுமா? என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் இஸ்ரேல் உளவுத்துறை, ராணுவ பலம், ஆயுத பலம் உள்ளிட்டவற்றில் சிறப்பாக உள்ளது. அதனை மீறி துருக்கியால் நாடு புகுந்து நெதன்யாகுவை தூக்குவது பெரிய கஷ்டம். இதனால் பாகிஸ்தானின் இந்த ஆசை நிறைவேறும் சான்ஸ் இல்லை.
அதேவேளையில் பாகிஸ்தான் மீது இஸ்ரேலுக்கு உள்ள பகையை இன்னும் ஆழப்படுத்தி உள்ளார் அந்த நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப். இதனால் இஸ்ரேல் விரைவில் பாகிஸ்தானை குறிவைத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபடலாம் என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.
-
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
கண் கொத்தி பாம்பாக காத்திருக்கும் CIA & மொசாட்.. கொஞ்சம் அசந்தாலும் ஈரான் மொத்தமாக சிதஞ்சிடும் -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி -
"ஜாம்பி" கப்பல்.. ஹார்முஸை கடந்து சென்ற மர்மம்.. நடுவில் சம்பந்தமே இல்லாமல் சிக்கும் இந்தியா? -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications