அமெரிக்கா: செயின்ட் லூயிஸில் அப்துல் கலாமின் இலட்சியகனவு விதைப்பு கூட்டம்!
செயின்ட் லூயிஸ் (மிசௌரி): அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் டாக்டர் அப்துல்கலாமின் இலட்சியகனவு விதைப்பு கூட்டம் நடந்தது.

பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் மிசெளரி மாநிலம் செயின்ட் லூயிஸ் மாநகரில் கடந்த வெள்ளிகிழமை (ஜூலை 31, 2015) இரவு இந்தியர்கள் ஒன்று கூடி "அப்துல்கலாமின் இலட்சிய கனவு விதைப்புக் கூட்டத்துக்கு" ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் மாமேதை கலாம் அவர்களுக்கு புகழாஞ்சலி செலுத்தப்பட்டது. பெற்றோர்களும், குழந்தைகளும் கண்ணீர் மல்க கூட்டத்தில் அமர்ந்திருந்தனர். ஒரு நிமிடம் மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது. ஒவ்வொருவரும் டாக்டர் கலாம் அவர்களுடன் தாங்கள் சந்தித்த மகிழ்ச்சியான தருணங்களை, அவருடைய எளிமையான வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டனர்.

கூட்டத்தில் டாக்டர் கலாமின், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான 10 கட்டளைகளை உறுதிமொழியாக எடுத்து கொண்டனர். மெழுகுவர்த்தி ஏற்றி அனைவரும் அஞ்சலி செலுத்தினர். ஒவ்வொருவரும் தங்கள் வருகையை டாக்டர் கலாம் அவர்களின் அஞ்சலி சுவற்றில் பதிவிட்டு கண்ணீர் மல்க கலைந்து சென்றனர்.

இக்கூட்டத்தை செயின்ட் லூயிஸ் மாநகர இந்தியர்கள்கூட்டமைப்பின் தலைவர் சரத் ராவ் ஏற்பாடுசெய்திருந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சங்கங்கள் இணைந்து நடத்தினர்.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications