3 வயது சிறுவன் சுட்டதில் தந்தையின் இடுப்பை துளைத்து கர்ப்பிணி தாய் மீது பாய்ந்த குண்டு
அல்புகெர்கு: அமெரிக்காவில் கைத்துப்பாக்கியை வைத்து விளையாடியபோது 3 வயது சிறுவன் தற்செயலாக சுட்டதில் அவரின் தந்தை மற்றும் கர்ப்பமாக உள்ள தாய் மீது குண்டு பாய்ந்தது.
அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ மாநிலத்தில் தம்பதிகள் தங்களின் 3 வயது மகன், 2 வயது மகளுடன் ஹோட்டலில் தங்கியுள்ளனர். அல்புகெர்கு நகரில் உள்ள அந்த ஹோட்டலில் தங்கியபோது சிறுவன் தனது தாயின் கைப்பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து தற்செயலாக சுட்டதில் சிறுவனின் தந்தையின் இடுப்பில் பாய்ந்த குண்டு அவரின் உடலை துளைத்து அருகில் இருந்த அவரின் கர்ப்பமான மனைவியின் வலது தோள்பட்டையில் பாய்ந்தது.

இதையடுத்து சிறுவனின் பெற்றோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறுவனின் தந்தை சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். சிறுவனின் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக கடந்த மாதம் 21ம் தேதி புளோரிடா மாநிலத்தில் தனது தந்தையின் துப்பாக்கியை வைத்து விளையாடியபோது குண்டு பாய்ந்து 2 வயது சிறுவன் பலியானான். அதற்கும் முன்பு மிசௌரியில் 5 வயது சிறுவன் சுட்டதில் அவரின் 9 மாத தம்பி பாப்பா பரிதாபமாக பலியானது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் துப்பாக்கியை வைத்து விளையாடி சிறுவர்கள் பிறரை சுடும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications