15 நிமிடம் தான் டைம்.. சொல்வதை கேட்காவிட்டால் கொன்றுவிடுவோம்.. வெனிசுலா அதிபரை மிரட்டிய டிரம்ப்?
கராகஸ்: வெனிசுலா நாட்டில் அமெரிக்கப் படைகள் இறங்கிய போது தங்களுக்கு 15 நிமிடங்கள் மட்டுமே காலவகாசம் வழங்கப்பட்டதாக வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இணங்காவிட்டால் தங்களைச் சுட்டுக் கொன்றுவிடுவதாக அமெரிக்கப் படைகள் மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா நாட்டில் கடந்த மாதம் அமெரிக்கப் படைகள் அதிரடியாக இறங்கியது. அந்நாட்டின் அதிபர் மதுரோவையும் கைது செய்தது. இதற்கிடையே மதுரோவை அமெரிக்கப் படைகள் கைது செய்தபோது என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களை வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் பகிர்ந்துள்ளார்.

15 நிமிடம் தான் டைம்
நிக்கோலஸ் மதுரோ பிடிபட்டபோது, அமெரிக்கப் படைகள் வெனிசுலா கேபினட்டை மிரட்டியுள்ளது. அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கொல்லப்படுவீர்கள் எனச் சொல்லியுள்ளார். இது குறித்து 15 நிமிடங்களுக்குள் முடிவெடுக்கக் காலக்கெடு விதித்ததாக அவர் பகீர் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும், "எங்கள் அதிபரை (மதுரோ) கடத்திய உடனேயே இந்த அச்சுறுத்தல்கள் தொடங்கின. உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கப்பெல்லோ, எனது சகோதரரும் நாடாளுமன்றத் தலைவருமான ஜார்ஜ் ரோட்ரிகஸ் ஆகியோருடன் என்னையும் தொடர்பு கொண்டனர். அவர்கள் டிமாண்ட்டை வைத்து, அதில் முடிவெடுக்க 15 நிமிடங்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. இல்லையென்றால் எங்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள்" என்று தெரிவித்தார்.
வெனிசுலா அரசியல்
அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஏழு நாட்களுக்குப் பின், வெனிசுலாவில் நடந்த 2 மணிநேரக் கூட்டம் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. அதில் தான் அவர் இந்தக் கருத்துகளைக் கூறியிருக்கிறார். அரசியல் அதிகாரத்தைப் பாதுகாப்பதே தனது முன்னுரிமையாக இருந்ததாகவும் ரோட்ரிகஸ் அதில் கூறியிருக்கிறார். மேலும், இப்படியொரு சூழலில் அதிபராகப் பொறுப்பேற்பது மனதுக்கு வேதனை தருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், மதுரோவும், அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டதாகவே அமெரிக்கப் படைகள் தன்னிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.
மிரட்டல்
அவர் மேலும் கூறுகையில், "எங்களையும் கூட கொன்றுவிடுங்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றே சொன்னோம். வெனிசுலாவில் அமைதியைப் பாதுகாக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். அமெரிக்காவிடம் இருந்து வந்த தொடர் மிரட்டல் காரணமாகவே வேறு வழியில்லாமல் எங்கள் முடிவை மாற்றிக் கொண்டோம்" என்றார். முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது கோரிக்கைகளுக்கு இணங்கியதற்காக ரோட்ரிகஸைப் பாராட்டினார். ஆனால், தொடர் மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் பயந்தே அமெரிக்காவின் கோரிக்கைக்கு இணங்கியதாக ரோட்ரிகஸ் விளக்கமளித்தார்.
பொய்யாக இருக்கலாம்
ரோட்ரிகஸ் இப்படிக் கூறினாலும் கூட அது உண்மையாக இருக்க வாய்ப்பு குறைவு என்கிறார் அரசியல் ஆய்வாளர் மார்கரிட்டா லோபஸ் மாயா.. இது தொடர்பாக அவர் 'தி கார்டியன்' இதழிடம் கூறுகையில், "வெனிசுலா மக்களின் ஆதரவைப் பெற ரோட்ரிகஸ் இதுபோல கூறியிருக்கலாம். ஆனால், உண்மையில் உள்நாட்டில் முக்கிய ஆதரவு இல்லாமல் மதுரோவை நீக்குவது சாத்தியமில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
மதுரோ பிடிபட்டதிலிருந்து, ரோட்ரிக்ஸ் தலைமையிலான வெனிசுலா அரசு அமெரிக்காவிற்கு எதிராகப் பேசினாலும், ட்ரம்பின் அனைத்துக் கோரிக்கைகளுக்கும் இணங்கியே செயல்பட்டது. மதுரோவுக்குப் பிறகு துணை அதிபர் ரோட்ரிகஸ் அதிபரானார். வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா பயன்படுத்தவும் ரோட்ரிகஸ் அரசு அனுமதி அளித்திருந்தது. அதன் பிறகு டிரம்ப் கூட ரோட்ரிகஸை பாராட்டினார். அவரது தலைமையை மிக வலிமையானது என்றும் வெனிசுலாவின் கச்சா எண்ணெய்யில் ஒரு பங்கை அமெரிக்கா பெறுவதால் வெனிசுலா இன்னும் பணக்கார நாடாக மாறும் என்றும் டிரம்ப் வெளிப்படையாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
மூழ்கடிக்கப்படும் ரூ.63,000 கோடி.. கடலுக்கு அடியில் அமையும் 73,000 டன் பிரம்மாண்டம்! என்ன மேட்டர் -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications