ஐரோப்பா மீது அடுத்த போர்? மெகா பிளான் போடும் புதின்? சட்டென நடுவே நுழைந்த அமெரிக்கா.. பரபர கருத்து
வாஷிங்டன்: ரஷ்யா உக்ரைன் போர் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இதற்கிடையே ரஷ்யா மற்ற ஐரோப்பிய நாடுகளையும் ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக அமெரிக்கத் தேசியப் புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்டு சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த 2022ல் தொடங்கிய மோதல் இன்னும் தொடர்கிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், இதுவரை மோதல் முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. குறிப்பாக அதிபர் டிரம்ப் நேரடியாக இதில் தலையிட்டுள்ளார். இருந்தபோதிலும் மோதல் முடிவுக்கு வராமல் தொடர்கிறது.

அமெரிக்கா முயற்சி
இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் ஒரு அமைதி திட்டத்தை முன்மொழிந்திருந்தார். இருப்பினும், இதை உக்ரைனும் ஐரோப்பிய நாடுகளும் ஏற்கவில்லை. உக்ரைன் சரணடைவது போல இந்த அமைதி ஒப்பந்தம் இருப்பதாக ஐரோப்பிய நாடுகள் கூறின. இதற்கிடையே உக்ரைனைத் தொடர்ந்து வேறு சில ஐரோப்பிய நாடுகள் மீதும் ரஷ்யா படையெடுக்க உள்ளதாகச் செய்திகள் வெளியானது. பல ஐரோப்பிய ஊடகங்கள் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டன.
இதற்கிடையே ரஷ்யா தொடர்பாக அமெரிக்கத் தேசியப் புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்டு கூறியுள்ள சில கருத்துகளைக் கவனம் பெற்றுள்ளது. அதாவது உக்ரைனை ஆக்கிரமித்துக் கைப்பற்றும் திறன் கூட ரஷ்யாவிற்கு இல்லாத போது ஐரோப்பா மீது அவர்களால் எப்படிப் படையெடுக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். போர் தொடர வேண்டும் என்பதற்காகச் சிலர் திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
திறன் இல்லை
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "ரஷ்யாவிற்கு உக்ரைனைக் கைப்பற்றும் திறனே இல்லை.. அப்படியிருக்கும்போது ஐரோப்பாவைப் படையெடுப்பது சாத்தியமற்றது என்பதே எங்கள் அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் ரிப்போர்ட் சொல்கிறது. போரை நியாயப்படுத்தவும் அதைத் தொடரவும் தான் இதுபோன்ற பொய்யான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பி வருகிறார்கள்.
உக்ரைன் ரஷ்யா இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் தீவிரமாக முயல்கிறார். ஆனால், அது நடந்துவிடக்கூடாது என்பதற்காகச் சில போர் வெறியர்கள் இதுபோன்ற பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள். ஐரோப்பா மற்றும் நேட்டோ நாடுகளை ஆக்கிரமிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக வரும் தகவலை நாங்கள் ஏற்கவில்லை. ரஷ்யாவுக்கு அந்தத் திறன் இல்லை" என்றார்.
ரஷ்யா மறுப்பு
உக்ரைனைப் போலவே ரஷ்யா வேறு சில ஐரோப்பியப் பகுதிகளை ஆக்கிரமிக்குமா என்ற கேள்விக்கே துளசி இதுபோன்ற கருத்துகளைக் கூறினார். ரஷ்யாவும் கூட இந்தக் கருத்துகளை நிராகரித்துள்ளது. புதின் வேறு நாடுகள் மீது போரை ஆரம்பிப்பார் என்பது பொய்யான தகவல் என்றும் அது முட்டாள்தனமானது என்றும் ரஷ்யா கூறியுள்ளது. மேலும், போரைத் தொடர விரும்பும் சிலர் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் தெரிவித்துள்ளது.
உக்ரைன் திட்டம்
மறுபுறம் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவும் பல முயற்சிகள் நடக்கிறது. இதுவரை அமெரிக்கா தான் பேச்சுவார்த்தைகளை நடத்துகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் அமெரிக்கா தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதற்கிடையே உக்ரைன் மற்றும் ரஷ்யா நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளது. உக்ரைன், அமெரிக்கா, ரஷ்யா கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையையும் ரஷ்ய அதிபர் ஜெலென்ஸ்கி முன்மொழிந்துள்ளார்.
-
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
B1/B2 Visa: காசு கொடுத்த 10 நாளில் அமெரிக்கா செல்ல விசா.. ப்ரீமியம் சேவையாம்! -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications