ஆபீஸ் டாய்லெட்டில் குழந்தையை பெற்று பிளாஸ்டிக் பையில் போட்டு கொன்ற பெண்
மிஷிகன்: அமெரிக்காவில் 26 வயது பெண் ஒருவர் அலுவலக கழிவறையில் ஆண் குழந்தையை பெற்று அதை பிளாஸ்டிக் பையில் போட்டு மூடியதில் குழந்தை பலியானது.
அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் உள்ள வெயின் கவுன்ட்டியைச் சேர்ந்தவர் கிம்பர்லி பப்பாஸ்(26). அவர் கடந்த மார்ச் மாதம் அலுவலகத்திற்கு சென்ற இடத்தில் பிரசவ வலி வந்துள்ளது. இதையடுத்து அவர் கழிவறைக்கு சென்று ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் அறுத்து குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு சீல் வைத்துவிட்டார். அந்த பையை அவர் தனது மேஜையில் உள்ள அறைக்குள் வைத்துவிட்டார். இந்நிலையில் அதே நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் கழிவறைக்கு சென்றுள்ளனர். கழிவறையில் ஒரே ரத்தமாக கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து விசாரணை செய்தபோது கிம்பர்லியின் மேஜையில் பிளாஸ்டிக் பையில் குழந்தை இருந்ததை கண்டுபிடித்தனர். தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். பிரேத பரிசோதனையில் குழந்தை மூச்சுத் திணறி பலியானது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கிம்பர்லியை கைது செய்தனர். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவருக்கு 9 முதல் 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.
இந்த வழக்கை விசாரித்த வெயின் கவுன்ட்டி நீதிமன்றம் வரும் 26ம் தேதி தீர்ப்பு அளிக்க உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications