இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பிய ராட்சசன்.. களமிறக்கப்பட்ட "THAAD" சிஸ்டம்.. ஈரானுக்கு பெரிய சிக்கல்!
டெஹ்ரான்: ஈரானுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்கா சார்பாக இஸ்ரேலுக்கு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு வழங்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்பு அமைப்பான THAAD அமைப்பை வழங்கி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பென்டகன் வெளியிட்டு உள்ளது.
பென்டகன் தலைவர் லாயிட் ஆஸ்டின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இஸ்ரேல் நாட்டின் வான் பாதுகாப்பை அதிகரிக்க உதவும் டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் (THAAD) அந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டு உள்ளது. THAADயை இயக்கம் பேட்டரி உள்ளிட்ட உபகரணங்கள் அதனுடன் தொடர்புடைய அமெரிக்க ராணுவ வீரர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இதற்கான அங்கீகாரத்தை அமெரிக்க பாதுகாப்புத் துறை அளித்துள்ளது.

THAAD ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு இஸ்ரேலின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை அதிகரிக்கும். இந்த நடவடிக்கை, இஸ்ரேலை பாதுகாப்பதற்கும், இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்களை ஈரானின் எதிர்கால பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கும் THAAD உதவும் என்று பென்டகன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் THAAD அமைப்பு இஸ்ரேலுக்கு எப்போது செல்லும்.. எப்போது களத்தில் பயன்படுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. THAAD அமைப்புடன் சுமார் 100 படை வீரர்கள் அதை இயக்குவதற்காக அமெரிக்காவில் இருந்து இஸ்ரேல் நாட்டிற்கு செல்வார்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ஈரானிய வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி அமெரிக்காவின் இந்த முடிவை கடுமையாக விமர்சனம் செய்தார். அமெரிக்க ஏவுகணை அமைப்புகளை இஸ்ரேலில் இயக்குவதன் மூலம் ஈரானுக்கும், இந்த பிராந்தியத்திற்கும் பாதுகாப்பு ரீதியான குறைபாடுகள், சிக்கல்கள் ஏற்படும்.
போர் உச்சம்; இஸ்ரேல் - ஈரான் இடையே நடக்கும் மோதலில் அடுத்த 1 வாரம் மிக முக்கியமான வாரமாக மாறி உள்ளது. இரண்டு தரப்பு மோதலில் அடுத்த 1 வாரம் பல்வேறு சுவாரசியமான, அதிர்ச்சி அளிக்கும் மாற்றங்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன.
சமீபத்தில் நடந்த ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனால் இந்த போர் விவகாரமான நிலைமையை எட்டும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த வாரம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் உள்ளன.
ஈரான் நடத்திய வான்வெளி தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளது இஸ்ரேல். தங்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தால் மோசமான வலுவான தாக்குதலை கொடுப்போம் என்று ஈரான் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் அதற்கு அஞ்சாமல் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் முடிவை எடுத்துள்ளது.
ஏற்கனவே ஈரான் - லெபனான் - இஸ்ரேல் போர் உச்சம் அடைந்து உள்ளது. இது கண்டிப்பாக உலகபோராக மாறும் அபாயம் உள்ளது. முக்கியமாக இந்த போர் நடக்கும் பட்சத்தில் அது அணு ஆயுத போராக நடக்கும் அபாயமும் உள்ளது. முக்கியமாக ஈரானின் பாலைவனத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கடுமையான விவாதங்கள் ஏற்பட்டு உள்ளது. ஈரான் அணுகுண்டு சோதனை செய்துள்ளதோ என்ற ஊகங்களை இந்த நிலநடுக்கம் தூண்டி உள்ளது.
ஈரான் அடிக்கடி பூகம்பத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடு, ஆனால் அக்டோபர் 5 அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் இயல்பான நிலநடுக்கம் கிடையாது.. அது இயற்கையான நிலநடுக்கம் கிடையாது என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன
-
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications