சுதந்திர தமிழீழத்தின் கொடி ஐ.நா. மன்றத்திலே பறக்கும்: வைகோ நம்பிக்கை
மழை பெய்யுமோ? கருமேகங்கள் திரண்டு இருக்கின்றதே என்று நினைத்தேன். மழை பெய்தால்தான் என்ன? கொட்டுகின்ற மழையிலும், தகுந்த உடைகள் இன்றி, ஒருவேளை உணவும் இன்றி, எத்தனை நாள்கள், வாரங்கள், மாதங்கள் புலிகள் வாடினார்கள், புலிப்பெண்கள் வாடினார்கள். இங்கே ஒருபொழுதுமழை பெய்து நாம் நனைந்தால் என்ன ஆகி விடும்?
பச்சிளம்பிள்ளை பாலச்சந்திரன் மார்பில் ஐந்து குண்டுகள் பாய்ந்தனவே? அவன் கண் முன்னாலேயே அவனது ஐந்து மெய்க்காப்பாளர்களையும் சுட்டுக்கொன்றார்களே? அந்தக் கண்களில் பயம் தெரிகின்றதா? அவன் கண்களில் அச்சம் தெரிகின்றதா? அந்த விழிகளில் பீதி தெரிகின்றதா? இல்லை. என் தலைவனின் வீரப்பிள்ளை அல்லவா?

தலைவர் பிரபாகரன் நம் நெஞ்சுக்குள் இருக்கின்றார், நம்மை இயக்குகிறார், இயக்கிக்கொண்டே இருப்பார்.
ஒன்றை இங்கே நினைவூட்டுகிறேன். காட்டுக்குள் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தேன். தம்பி, சுதந்திரத் தமிழ் ஈழம் மலரப் போகின்றது. எனக்கு ஒரு ஆசை இருக்கின்றது செய்வீர்களா?
என்ன அண்ணா, சொல்லுங்கள் என்றார்.
தமிழ் ஈழ தேசத்தின் சிறப்புக் குடிமகனாக, ஸ்பெசல் சிட்டிசனாக என்னை அங்கீகரித்து, ஐ.நா. பொதுச்சபையில், சுதந்திரத் தமிழ் ஈழத்தின் முதல் பிரதிநிதியாக என்னைப் பங்கேற்கச் செய்வீர்களா?பேச வாய்ப்புத் தருவீர்களா? என்று கேட்டேன்.
என்னண்ணா, நீங்கள் வேறு ஏதோ பெரிதாகக் கேட்கப் போகின்றீர்களே என்று நினைத்தேன். இதைக்கூட நாங்கள் செய்ய மாட்டோமா? என்று சொன்னார். அவ்வளவு ஆசைக்கனவுகளை என் மனதிற்குள் வளர்த்துக் கொண்டு இருப்பவன் நான். தமிழ் ஈழத்தின் முதல் குரலாக என் குரல் ஒலிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
தமிழ் ஈழம் மலரும். உலகத்தில் நமக்கு நிகரான இனம் வேறு எதுவும்இல்லை. உலகத்தின் பூர்வ குடிகளே நாம்தான். அத்தனை இனங்களுக்கும் பூர்வ இனமே தமிழ்தான். எத்தனையோ ஆதாரங்களை எடுத்துக்காட்டி என்னால் அதை நிறுவ முடியும்.
உங்களைப் பார்க்கப் பிரபாகரன் வருகிறாரா? அப்பொழுது அவரைச் சுட்டுக்கொன்று விடு என்று தீட்சித் சொன்னார். இது என் ஆணை அல்ல. மேலிடத்து உத்தரவு என்றும் சொன்னார்.
அப்படிப்பட்ட நம்பிக்கைத் துரோகத்தை இந்திய இராணுவம் ஒருபோதும் செய்யாது என்று சொன்னதாக,
இந்திய இராணுவத் தளபதி ஹர்கிரத்சிங் எழுதிய புத்தகத்தில் இதை எழுதி இருக்கின்றார். அந்தப் புத்தகம் இன்னமும் தடை செய்யப்படவில்லை. இதைத் தளபதி தீபேந்தர் சிங்கிடம் சொன்னபோது, அவரும் சபாஷ் நீ சரியாகத்தான் சொல்லி இருக்கின்றாய் என்று பாராட்டினாராம்.
ஆகவே, விடுதலைப்புலிகள் மீது எந்தத் தவறும் இல்லை. அவர்கள் ஒழுக்கசீலர்கள். மது கிடையாது, விபச்சாரம் கிடையாது. திருடு கிடையாது, களவு கிடையாது, ஒரு தப்பும் கிடையாது.இன்றைக்குத் தமிழ் ஈழத்தில் மது, விபச்சாரம் எல்லாம் நடந்துகொண்டு இருக்கின்றது. நம் இனத்தின் கலாச்சாரத்தை அழித்துவிடத் திட்டமிடுகிறான். ஊரடவரசயட பநnடிஉனைந, ளவசரஉவரசயட பநnடிஉனைந எல்லாம் திட்டமிட்டுச் செய்து வருகிறான். சிங்கள இராணுவத்தினரை நமது குடும்பங்களுக்கு நடுவே கொண்டு வந்து குடி அமர்த்தி விட்டான்.
நமது மக்கள்தொகை குறைந்துகொண்டே வருகின்றது. நேற்று பிரபாகரன் என்ற தம்பி எனக்குக் கார் ஓட்டிக்கொண்டு வந்தார். திருமணம் ஆகிவிட்டதா? என்று கேட்டேன். இல்லண்ணா என்றார். பின்னால் இருந்த தம்பியிடம் கேட்டேன்.அவரும் திருமணம் ஆகவில்லை என்று சொன்னார். இப்படி எத்தனையோ இளைஞர்கள் திருமணம் ஆகாமல் இருக்கின்றார்கள். நம் இனத்தின் ஜனத்தொகை குறைந்துகொண்டே போகின்றது. அவன் பெருகிக் கொண்டே போகிறான். ஆனால், சத்தியமும், அறமும் நம் பக்கம்இருப்பதால் உலகத்தின் கவனத்தை நம் பக்கம் திருப்ப முடியும். தமிழகத்தில் செத்துப்போன உணர்வுகளைத் தட்டி எழுப்புகின்ற பணியை என்னைப் போன்றவர்கள் செய்வோம்.
அன்பிற்கு உரியவர்களே, இவ்வளவு நேரம் என் உரையைச் செவிமடுத்ததற்கு நன்றி.
விரைவில் சுதந்திரத் தமிழ் ஈழத்தின் கொடி ஐ.நா. மன்றத்தில் பறக்கும். இதோ இந்த மனித உரிமைகள் கவுன்சில் முன்பும் பறக்கும்.
இவ்வாறு வைகோ உரையாற்றினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications