Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சே தூக்கில் தொங்கவிடப்பட வேண்டியவர்: வைகோ

Subscribe to Oneindia Tamil

மைத்ரிபால சிறிசேனா ஒரு அயோக்கியன். ரனில் ஒரு ஏமாற்றுக்காரன். ராஜபக்சே தூக்கில் இடப்படவேண்டியவன்.

நான் மோடியை ஆதரித்தேன். அவர் வெற்றி பெற்றால், ஈழப்பிரச்சினையில் வாஜ்பாய் அணுகுமுறையைப் பின்பற்றுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவரது பதவி ஏற்பு விழாவுக்குக் கொலைகாரன் ராஜபக்சேவுக்கு அழைப்பு என்றபோது, உடனே நரேந்திர மோடியைச் சந்தித்தேன். எங்கள்இருதயத்தில் ஈட்டியைக் குத்திவிட்டீர்கள். எங்கள் மக்களைக் கொன்ற கொலைகாரன் சாஞ்சிக்கு வருகிறான் என்றபோது, என் தோழர்களோடு நான்கு மாநிலங்களைக் கடந்துசென்று மத்தியப்பிரதேசத்தில் போராட்டம் நடத்தினேன். இந்தியாவில் நான்கு மாநிலங்களைக் கடந்துசென்று போராட்டம் நடத்திய வரலாறு யாருக்காவது உண்டா? எங்களுக்கு உண்டு. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. நரேந்திர மோடியிடம் சொன்னேன். நாளை மாலைக்குள் சூரியன் மறைவதற்குள் ராஜபக்சேவுக்குக் கொடுத்த அழைப்பைத் திரும்பப் பெறாவிட்டால் நீங்கள் பதவி ஏற்கும்போது நான் கருப்புக்கொடி காட்டுவேன் என்று சொன்னேன்.

Vaiko speaks on links LTTE, Prabhakaran and MGR

உங்களுக்கு எம்.பி. பதவி தரப் போகின்றார்கள், அமைச்சர் ஆக்கப் போகின்றார்கள் என்று செய்திகள் வருகின்றன, இந்த நேரத்தில் கருப்புக்கொடி காட்ட வேண்டுமா? ஒரு அறிக்கையோடு நிறுத்திக்கொண்டால் என்ன? என்று சிலர் சொன்னார்கள்.

நான் இலட்சியங்களுக்காக வாழ்பவன். கருப்புக் கொடி காட்டுவேன் என்று சொன்னேன். அதேபோல மோடி பதவி ஏற்றபோது நாங்கள் கருப்புக்கொடி காண்பித்துச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தோம். ஒரே நொடியில் மோடியைத் தூக்கி எறிந்து விட்டு வந்தேன்.

நாங்கள் எங்கள் வாழ்க்கையையே தத்தம் செய்து இருக்கின்றோம். பத்துக் காசு வெளிநாட்டில் நாங்கள் வாங்கியது இல்லை. சல்லிக்காசு வாங்கியது இல்லை. அது பாவச் செயல். ஈனச்செயல். வெளிநாட்டுத் தமிழர்களிடம் பத்துக் காசு வாங்குவது ஈனச்செயல். இயக்கத்திற்குக் கொடுங்கள். புலிகளுக்குக் கொடுங்கள். எங்களைப் போன்ற அரசியல் கட்சிகளுக்குப் பத்துச் சல்லிக்காசு கொடுக்காதீர்கள். அப்படித்தான் இன்று வரை வாழ்கிறேன். என்னுடைய செலவில்தான் விமானப் பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு வருகிறேன். என்னுடைய செலவில் தங்கிவிட்டுப்போகிறேன்.

இன்றைக்கு மனித உரிமைகள் கவுன்சிலில் நரேந்திர மோடி அரசும் துரோகம் செய்கிறது. இங்கே வந்து பல ஆண்டுகள் உரை ஆற்றிய என் தம்பி திருமுருகன் காந்தி நேர்மையானவன், உண்மையானவன். அவனைத் தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தில் அடைத்து வைத்து இருப்பது அயோக்கியத்தனம். நான் எச்சரித்து விட்டு வந்தேன். அவன் கட்சிகளைச் சாராதவன், ஓட்டுக் கேட்காதவன், மதியூகி. ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் மெரினா கடற்கரையில் அவனோடு சேர்ந்து கண்ணீர் சிந்துவோம்.இந்த ஆண்டு நான் சிறையில் இருந்ததால் போக முடியவில்லை. இங்கே நான் இந்திய அரசியல் பேச விரும்பவில்லை. ஆனால், ஈழப்பிரச்சினையில் முந்தைய அரசுகளுக்கு வேறுபட்டதல்ல நரேந்திர மோடி அரசு.

அப்படியானால் வழி என்ன? என்னிடம் எரிக் சோல்கைம் சொன்னார், இந்தியா தமிழ் ஈழ மக்களை ஆதரிக்காவிட்டால், உலகத்தில் வேறு எந்த நாடும் ஆதரிக்காது என்று. காரணம், ஏழரைக்கோடித் தமிழர்கள் இருக்கின்ற இந்தியாவே ஆதரிக்கவில்லையே? நாம் ஏன் ஆதரிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

அப்படியானால் இதற்கு என்ன வழி? கட்சி எல்லைகளைக் கடந்து போராடுவதற்கு இளைஞர்களை உருவாக்குவோம். அந்த உணர்வோடுதான் முத்துக்குமார் தீக்குளித்து மடிந்தான். 18 பேர் தீக்குளித்து மடிந்தார்கள்.

விதியே விதியே என் செய நினைத்தாய் என் தமிழச் சாதியை? என்று எழுதி வைத்து விட்டுத் தன்மேனியில் தீவைத்துக்கொண்டு மடிந்தான் முத்துக்குமார். அந்தத் தியாகம் வீண்போகாது. அப்படித்தான் இங்கே முருகதாசன் மடிந்தான். அங்கே அரண்யத்தில் எத்தனையோ இளம்பெண்கள், வீரப்பிள்ளைகள் வாழ்க்கையில் எந்த சுகத்தையும் பார்க்காமல் மடிந்து போனார்களே? ஐரோப்பாவில் வாழ்கின்ற இளந்தமிழ்ப் பிள்ளைகளே, எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கின்றது. 2001 ஆம் ஆண்டு நான் இங்கே உரையாற்றும்போது, பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தார்கள். இளம்பிள்ளைகளே சுகமான வாழ்க்கை போதும் என்று நினைக்கின்றீர்களா? நமக்கென்று ஒரு தேசம். தமிழ் ஈழம் உங்கள் தாயகம். அங்கே வேப்பமர நிழலிலே, பனைமரத்து அடியிலே கிடைக்கின்ற சுகம் இங்கே கிடைக்குமா? நீங்கள் கோடீஸ்வரர்களாகக்கூட இருக்கலாம் ஜெனீவாவிலே, பிரான்சிலே, லண்டனிலே, அமெரிக்காவிலே.

உன் மண், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உன் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டன் வாழ்ந்த மண். அது நம் உயிர் அல்லவா? அதை மீட்பதற்கு உலகெங்கும் வாழுகின்ற தமிழர்கள் நாம் ஒன்றாக இணைவோம். 65 நாடுகளில் வாழ்கின்றோம்.

ஏழு கோடித்தமிழர்கள் வாழ்கின்ற தமிழகத்தில்தான் முத்துக்குமார் தீக்குளித்தான். அங்கே போராட்ட உணர்வு இல்லை என்று கொச்சைப்படுத்தக் கூடாது. அங்கேதான் அண்ணன் நெடுமாறன், முள்ளிவாய்க்கால் முற்றத்தை அமைத்து இருக்கின்றார். நாங்கள் அங்கே ஆயத்தப்படுத்துவோம்.

இங்கே ஈருருளைகளில் பல நாடுகளைக் கடந்து வந்தார்களே, அதைப்போலப் புலம்பெயர் வாழ் தமிழர்களே, உங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் உணர்வை ஊட்டுங்கள். தமிழ்க் கல்வியைத் தாருங்கள். நான் கவலையோடு இருக்கின்றேன். வளரும் பிள்ளைகளிடம் உணர்வு இருந்தால்தான், அடுத்த ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்குள் நாம் தமிழ் ஈழத்தை அடைய முடியும்.

நான் இலங்கை அரசியலை விமர்சிக்க விரும்பவில்லை. விக்னேஸ்வரன் நியாயமாகத்தான் நடந்துகொண்டு வந்தார். அங்கே பல நெருக்கடிகள் இருக்கின்றன. அங்கே உள்ள அரசியல்வாதிகளைக் குறை சொல்ல விரும்பவில்லை. அது தியாகத்தால் சிவந்த மண். தலைவர் பிரபாகரனின் மண். அவர் வாழ்கிறார், நம்மை இயக்குகிறார். என்றைக்கும் நம்மை இயக்குவார்.அவருக்கு நிகரான தலைவன் உலகத்தில் வேறு எவரும் இல்லை. இனி பிறக்கப் போவதும் இல்லை.

ஆகவே, புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களே, உங்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம்.ஆனால் இந்த ஒரு பிரச்சினையில் அனைவரும் ஒன்றாகச் சேருங்கள். இதைச் சொல்லும் தகுதி எனக்கு உண்டு. மூவர் தூக்கு தொடர்பான நிகழ்வுகளில் எல்லோரையும் அழைத்து மேடையில் அமர வைத்தேன். நான்ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டேன். எந்தப் பதவிக்காகவும் நான் வாழவில்லை.

தமிழனுக்கு என்று ஒரு நாடு அமைய வேண்டும்.ஐ.நா. மன்றத்தில் தமிழனின்கொடி பறக்க வேண்டும். அது தமிழ் ஈழத்தின் கொடியாகப் பறக்க வேண்டும். இதோ ஜெனீவா முற்றத்தில் கொடிகள் பறந்துகொண்டு இருக்கின்றனவே, அவற்றோடு சேர்ந்து பறக்கவேண்டும். பறக்கின்ற நாள் வரும். நமது இலட்சியங்களில் நியாயம் இருக்கின்றபோது, அதை யாராலும் தடுக்க முடியாது.

மனிதஉரிமைகள் கவுன்சில் தலைவர் ஜெய்ட் ராட் அல் ஹூசைன் சொல்லி இருக்கின்றார். உலகத்தின் எந்த நாட்டிலும் சிங்களவனின் போர்க்குற்றங்களை விசாரிக்கலாம் என்று. மற்ற நாடுகளின் ஆதரவைப் பெற முயல வேண்டும். அந்தப் பணியை நீங்கள்தான் செய்ய வேண்டும். அதற்கான பரப்புரைப் பணிகளில் ஈடுபடுங்கள். அங்கங்கே உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தியுங்கள். எடுத்துச் சொல்லுங்கள். புத்தகங்களைக் கொடுத்து விளக்குங்கள்.அப்படித்தான் புலிகள் செய்தார்கள். ஆதாரங்களைக் காட்டுங்கள். நமது கண்ணீரும்,வேதனையும், உலகதின் செவிட்டுக் காதுகளில் விழவில்லை,

நான் பதினாறு ஆண்டுகளுக்குப்பிறகு இங்கே வந்து இருக்கின்றேன். இன்றைக்கு உங்கள் முன்னால் பேசுவேன் என்று நினைக்கவில்லை. மீண்டும் வருவேன். இனி எனக்குத் தடை இருக்காது என்று கருதுகிறேன்.

அரசியலுக்காக அல்ல. தமிழகத்தில் எந்தப் பதவியையும் எதிர்பார்த்து நான் இல்லை. நான் இங்கே வந்து பேசுவதற்கு முன்பு மடிந்த மாவீரர்களை நினைத்துக் கொண்டேன். அவர்களோடு காட்டுக்குள் கரம் கோர்த்து இருந்த நாள்களை எண்ணிக்கொண்டேன். எனக்குப் பேசும் சக்தியைக் கொடுங்கள் என்றுகேட்டுக் கொண்டேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+