For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ப்ளீஸ், தாங்க்ஸ், சாரி.... இது காதலர்களுக்கு போப் பிரான்சிஸின் அட்வைஸ்

Google Oneindia Tamil News

வாடிகன் சிட்டி: இனிமையான திருமண பந்தத்தை நீடிப்பதற்கு ‘ப்ளீஸ், சாரி, தாங்க்ஸ்' ஆகிய வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துங்கள் என இளம் ஜோடிகளுக்கு காதலர் தின அறிவுரை வழங்கியுள்ளார் போப் பிரான்சிஸ்.

நேற்று முந்தினம் உலகளவில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி வாடிகன் சிட்டி, புனித பீட்டர் சதுக்கத்தில் திருமணம் நிச்சயிக்கப் பட்ட இளம் ஜோடிகளுக்கு போப்ஜான் பால் சிறப்பு தரிசனம் அளித்தார்.

இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில், கிட்டத்தட்ட 30 நாடுகளில் இருந்தும் சுமார் 25 மணமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் போப் வருங்காலத்தில் தம்பதிகளாகப் போகிற அவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாட்களின் முடிவு....

நாட்களின் முடிவு....

ஒவ்வொரு நாளின் இறுதியிலும் மனதில் அமைதியை ஏற்படுத்தாமல் படுக்கைக்குச் செல்லாதீர்கள். மனதில் அமைதியை ஏற்படுத்தாமல் அன்றைய தினத்தை நீங்கள் முடித்தால், மன இறுக்கமும், தளார்வும் ஏற்படும். அடுத்த நாளும் உங்கள் மனதில் அமைதியை ஏற்படுத்த முடியாமல் போய்விடும்.

தாரக மந்திரம்...

தாரக மந்திரம்...

திருமண வாழ்க்கை வெற்றி பெறவும், உறவு நீடிக்கவும் ப்ளீஸ், சாரி, தேங்க்ஸ் ஆகிய எளிய வார்த்தைகளை அதிகம் பயன் படுத்துங்கள். இதுவே உங்கள் திருமணத்திற்கான சரியான சந்தர்ப்பம்.

குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை....

குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை....

குற்றம் காண முடியாத குடும்பம் எங்கும் இல்லை. அதேபோல், குற்றம் காண முடியாத கணவனோ-மனைவியோ இல்லை. ஏன், குற்றம் காண முடியாத மாமியாரும் இல்லை' எனத் தெரிவித்தார்.

அமோக வரவேற்பு...

அமோக வரவேற்பு...

இந்த சிறப்பு நிகழ்ச்சி முதலில் உள் அரங்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டதாகவும், பின்னர் போப் அழைப்புக்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்பைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சி புனித பீட்டர் சதுக்கத்தில் நடத்தப் பட்டதாகவும் வாட்டிகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Pope Francis has a Valentine’s Day message for all of his young followers: It’s time to put a ring on it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X