தாய்லாந்தை கலக்கும் பொம்மன்.. தமிழ்நாடு யானை பாகனின் கலக்கல் வீடியோ டிரெண்டிங்! வெற லெவல் சம்பவம்

தாய்லாந்து நாட்டிற்குச் சென்றுள்ள தமிழக வனத்துறை பாகன்கள்

Subscribe to Oneindia Tamil

பேங்காக்: தாய்லாந்து நாட்டிற்குச் சென்று இப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த யானை பாகன்கள் பயிற்சி பெற்று வரும் நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் மலையோரங்களில் அமைந்துள்ள கிராமங்களில் பொதுவாகக் காட்டு யானைகள் நடமாட்டம் இருக்கும். இவை விவசாய நிலங்களுக்குச் சேதம் விளைவிக்குமே தவிர.. பெரும்பாலும் மனிதர்களைத் தாக்காது.

அத்துமீறி கிராமங்களில் நுழையும் யானைகளும் கூட சீக்கிரம் விரட்டப்படும். அதற்குக் கும்கி யானைகளும் அதன் பாகன்களும் தான் முக்கிய காரணமாகும். நம்ம ஊர் பாகன்கள் சொன்னால் யானை அப்படியே அனைத்தையும் கேட்கும்.

பயிற்சி

பயிற்சி

இது தொடர்பாக இணையத்தில் நாம் பல வீடியோக்களை பார்த்திருப்போம். பாகன்கள் சொல்வதை அப்படியே யானை கேட்கும். பாகன்களை கொஞ்சும்.. அவர்களுடன் சின்ன குழந்தை போல விளையாடும்.. அந்தளவுக்கு இருவருக்கும் இடையே நெருக்கம் இருக்கும்.. நம்ம ஊர் பாகன்களும் யானைகளுக்கும் எப்படி இப்படியொரு உறவு இருக்கிறது என்பதைப் பலரும் வியப்பாகவே பார்த்து வருகிறார்கள். மேலும், தமிழக அரசு சார்பிலும் யானை பாகன்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று பயிற்சிகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.

சிறப்புப் பயிற்சி

சிறப்புப் பயிற்சி

அப்படி யானைகள் குறித்த கற்கத் தாய்லாந்து சென்ற பாகனின் வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தமிழ்நாடு வனத்துறையில் பணிபுரியும் யானைப் பாகன் மற்றும் தாய்லாந்து நாட்டின் பயிற்சியாளருக்கு இடையே நடந்த உரையாடல் வீடியோ தான் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.. இந்த வீடியோவை தமிழ்நாடு வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மொத்தம் 13 யானைப் பாகன்கள் தாய்லாந்து சென்று பயிற்சி பெற்று வருவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

பொம்பன்

பொம்பன்

அப்போது ​​தமிழ்நாட்டைச் சேர்ந்த பொம்பன் என்ற பாகன், தாய்லாந்து டிரெய்னர் சோம்சாட் என்பவருடன் ஜாலியாக உரையாடும் வீடியோ தான் இது.. பொம்பன் சோம்சாட்டிடம் இருந்து தாய் (தாய்லாந்து மொழி) மொழியில் சில வார்த்தைகளைக் கற்றுக்கொள்கிறார். அதேபோல பொம்பனிடம் இருந்து சோம்சாட்டும் தமிழில் சில வார்த்தைகளைக் கற்றுக்கொள்கிறார். இதையடுத்து இருவரும் ஜாலியாக சிரித்துக் கொள்கிறார்கள். தமிழக வனத்துறை பாகன்கள் இப்போது தாய்லாந்து யானைகள் பாதுகாப்பு மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

வீடியோ

வீடியோ

இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. முன்னதாக கடந்த நவம்பரில், சாஹு தமிழ்நாட்டில் உள்ள காப்பகங்களில் யானைகளுக்கு எப்படி காலை உணவு தயாரிக்கப்படுகிறது என்பது குறித்த வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில் பல தொழிலாளர்கள் ஒரு பெரிய மேஜையில் யானைகளைச் சாப்பிடும் பல வித பொருட்களைக் கொண்ட உருண்டையை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதைக் காட்டியிருந்தார். ராகி, வெல்லம், சாதம், சிறிது உப்பு சேர்த்து யானைகளுக்கான இந்த உணவு தயாரிக்கப்பட்டிருந்தது.

உணவு

உணவு

கால்நடை முகாமில் இருக்கும் கால்நடை மருத்துவர் தான் யானைகளுக்கான உணவைப் பரிந்துரைக்கிறார்.. யானைக்கு என்ன மாதிரியான சத்துகள் தேவை என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப இந்த டயர்ட் உணவைத் தயாரிக்கிறார்கள். இப்படிப் பல விதமான பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் உணவு பெரிய உருண்டைகளாகப் பிடிக்கப்பட்டு, காப்பகத்தில் இருக்கும் யானைகளுக்குக் கொடுக்கப்படுகின்றன.

சுப்ரியா சாஹு

சுப்ரியா சாஹு

இது தொடர்பாக சாஹு தனது ட்விட்டரில், "தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகளுக்கான காலை உணவு.. ஒவ்வொரு யானைக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட மெனு உள்ளது. இது முகாமின் கால்நடை மருத்துவரால் கவனமாக நிர்வகிக்கப்படுகிறது. ராகி, வெல்லம், சாதம், உப்பு கலந்து, வெளியில் காத்திருக்கும் யானைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+