வாக்னர் குழு ரஷ்ய ராணுவத்தில் இணையலாம்.. அல்லது.. கிளர்ச்சிக்கு பிறகு வார்னிங் கொடுத்த புதின்!
மாஸ்கோ: ரஷ்யாவில் கலகத்தில் ஈடுபட்ட வாக்னர் குழுவினர் ராணுவத்தில் இணையலாம் அல்லது விரும்பினால் பெலாரஸ் செல்லலாம் என்று புதின் தெரிவித்துள்ளார். வாக்னர் குழு கலகத்தில் ஈடுபட்டதற்கு பிறகு முதல் முறையாக பேசிய புதின் இவ்வாறு கூறினார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்னர் குழு என்னும் தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை நின்றது. ஆனால், திடீரென ரஷ்யாவுக்கு எதிராகவே இந்தக் குழு திரும்பியது. ரஷ்யாவின் ராணுவ தலைமையை மாற்றுவோம் என்ற அரைகூவலோடு மாஸ்கோ நகரை நோக்கி முன்னேறியது. ரஷ்யாவுக்கு எதிராக வாக்னர் குழு மேற்கொண்ட இந்த கிளர்ச்சி சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

ரஷ்யாவில் பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், பெலராஸ் அதிபர் தலையீட்டால் வாக்னர் குழு கலகத்தை முடித்துக் கொண்டது. பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ முயற்சியில் நடந்த இந்த சமரச ஏற்பாட்டில், தனியார் படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. அவர் பெலாரஸ் செல்ல ரஷ்யா அனுமதி அளித்தது.
அதேபோல, வாக்னர் குழு வீரர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என ரஷ்யா அறிவித்தது. இதையடுத்து பிரிகோஜின் தனது வீரர்களை முகாம்களுக்கு திரும்ப உத்தரவிட்டார். இதனால் கடந்த சனிக்கிழமை கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. வெறும் 24 மணி நேரத்தில் இந்த கிளர்ச்சி முடிவுக்கு வந்தது புதினுக்கு பெரும் நிம்மதியை கொடுத்தது.
தற்போது ரஷ்யாவில் இயல்பு நிலை திரும்பியிருக்கும் நிலையில், கலகத்திற்கு பிறகும் அது தொடர்பாக ஏற்பட்ட உடன்பாடு குறித்தோ எந்த ஒரு கருத்தையும் புதின் தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில், திடீரென நாட்டு மக்களுக்கு புதின் உரையாற்றினார். அதில், வாக்னர் குழுவினர் விரும்பினால் ரஷ்ய ராணுவத்தில் இணையலாம். அல்லது பிற சட்ட அமலாக்க ஏஜென்சிகளில் பணி செய்யலாம். பெலாரஸ் செல்ல விரும்புவர்கள் செல்லலாம்.
நான் அளித்த உறுதியை நிறைவேற்றுவேன். மீண்டும் சொல்கிறேன்.. உங்கள் விருப்பம்தான்" என்றார். ஆனால் தனது உரையில் வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் பற்றி எதுவும் சொல்லவில்லை. மேலும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசிய புதின், "ரஷ்யாவை பிளாக்மெயில் செய்யவோ நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றாலோ அது தோல்விதான் அடையும். ரஷ்யர்கள் ஒருவொருக்கொருவர் அடித்துக் கொண்டு சாக வேண்டும் என மேற்கு நாடுகள் விரும்புகின்றன" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications