துபாயில் நடந்த வேவ் ரெசொனன்ஸ் இவென்ட்ஸின் 8வது ஆண்டு விழா
துபாய்: வேவ் ரெசொனன்ஸ் இவென்ட்ஸின்(Wave resonance events)எட்டாவது ஆண்டு நிறைவு விழா கடந்த 5ம் தேதி அன்று மாலை துபாயில் நடைபெற்றது.
துபாயில் உள்ள இந்தியன் உயர்நிலைப் பள்ளியின் ஷேக் ராஷீத் கலையரங்கில் விழா சிறப்பாக நடந்தது. மாலை 6.30 மணியளவில் கடவுள் வாழ்த்துடன் தொடங்கிய விழா இரவு 10.30 மணி வரை உற்சாகம் கரை புரள, கலையாத பெருந்திரளுடன் விமரிசையாக நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக திரைப் பிரபலங்கள் தீபம் ஜெயசுதா, ரஜினி, நாரா ரோஹித் மற்றும் குச்சிப்புடி நாட்டியக் கலைஞர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களின் முன்னிலையில் துளசி தாஸ் பஜன், ஜகன் நாத காரகா, தரானா, நடனம், குழந்தைகளின் மீன் நடனம் ஆகியவை வெகு சிறப்பாக நடைபெற்றன.

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் இசைப் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம்பெற்று விழா பார்வையாளர்களின் தொடர் கரவொலியுடன் நடந்தது. விழாவிற்கான அனுசரணை செய்து உதவியவர்கள் சிறப்பு செய்து கவுரவிக்கப்பட்டனர்.

சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. விருந்தினர்கள் தமது சிறப்புரைகளில் வேவ் ரெசொனன்ஸ் இவென்ட்ஸ் மென்மேலும் வளர்ந்து பல வெற்றிகள் அடைய வாழ்த்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாக இயக்குனர் ரமேஷ் பாபு, எம்.டி. கீதா ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் கவனித்துக் கொண்டனர். கராமா பிரபாஸ் உணவகம் இரவு உணவு உபசரிப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications