சிவனும் - சக்தியும் சேர்ந்தாச்சு.. ஜி ஜின்பிங் சந்திப்பில் மோடி சொன்ன மேட்டர்! கவனிக்கும் டிரம்ப்
பெய்ஜிங்: 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக சீனா சென்றுள்ளார். இன்று தொடங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு முன்னதாக அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி, ‛‛எல்லையில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லை மேலாண்மைக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கு இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. பரஸ்பர நம்பிக்கை, மரியாதை அடிப்படையில் எங்கள் உறவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்'' என்று கூறியுள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி முதல் முதலாக சீனா சென்றுள்ளார். 2018 ம் ஆண்டு சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு மோடி சீனா சென்றார். அதன்பிறகு 2020 கல்வான் பள்ளத்தாக்கில் இருநாடுகள் இடையே எல்லை பிரச்சனை ஏற்பட்டு மோதல் நடந்தது. இதையடுத்து இருநாடுகள் இடையேயான உறவு மோசமானது.

இந்நிலையில் தான் தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும், நாளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மநாட்டுக்காக பிரதமர் மோடி நேற்று ஜப்பானில் இருந்து சீனா சென்றார். சீனா சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை வரை பிரதமர் மோடி அங்கு இருப்பார்.
ஜி ஜின்பிங் - மோடி சந்திப்பு
சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதல் நிகழ்ச்சியாக பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இது இருநாடுகளின் உறவில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இருநாடுகள் இடையேயான எல்லை பிரச்சனைக்கு தீர்வு கண்டு உறவை மேம்படுத்துவது தொடர்பாக அவர்கள் இருவரும் ஆலோசித்தனர். இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:
ஜி ஜின்பிங்கிற்கு மோடி நன்றி
‛‛ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு தலைமையேற்று இருக்கும் சீனாவுக்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். சீனாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்ததற்கும், இன்றைய சந்திப்புக்கும் நன்றி கூறுகிறேன். கடந்த ஆண்டு ரஷ்யாவின் கசானில் நடந்த சந்திப்பு இருநாடுகளுக்கு இடையேயான. உறவில் நேர்மறை எண்ணத்தை உருவாக்கியது. இது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
எல்லையில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லை மேலாண்மை தொடர்பாக எங்கள் சிறப்பு பிரதிநிதிகளிடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அதேபோல் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
சேர்ந்து செயல்பட வேண்டும்
இரு நாடுகளையும் சேர்ந்த 2.8 பில்லியன் மக்களின் நலன்கள் தான் எங்களின் ஒத்துழைப்பை இணைத்துள்ளது. இது மக்களின் நலனுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. பரஸ்பர நம்பிக்கை, மரியாதை அடிப்படையில் எங்கள் உறவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்'' என்றார்.
அதாவது சிவனும், சக்தியும் சேர்ந்தா மாஸ்டா என்ற வகையில் இருநாடுகளும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். சீனாவுக்கு இந்தியாவை வைத்து செக் வைக்க வேண்டும் என்று அமெரிக்க வியூகம் வகுத்து இருந்தது.
அமெரிக்காவுக்கு சிக்கல்
ஆனால் தற்போது டிரம்பின் வரி விதிப்பு என்பது இந்தியா - அமெரிக்கா உறவை சல்லி சல்லியாக உடைத்து விட்டது. இதனால் இந்தியாவும், சீனாவும் கைகோர்த்துள்ளது. இது அமெரிக்காவுக்கு பெரும் சிக்கலாக பார்க்கப்படுகிறது. ஆசியாவில் சீனாவும், இந்தியாவும் சக்திவாய்ந்த நாடுகளாக உள்ளது. இப்படி இருக்கும்போது இருநாடுகளையம் பகைத்து கொள்வது ஆசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கை சரிய வைக்கும்.
அதுமட்டுமின்றி இனி சீனாவையோ, இந்தியாவையோ அமெரிக்கா சீண்டினால் இருநாடுகளும் சேர்ந்து பதிலடி கொடுக்கும் இதுவும் அமெரிக்காவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். இதனால் இந்த ஷாங்காய் மாநாட்டின் ஒவ்வொரு விஷயங்கத்தையும், அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளையம் டிரம்ப் முதல் அமெரிக்காவின் தலைவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications