போருக்கு தயாராக இருக்கிறோம்.. ஈரான் பரபரப்பு அறிவிப்பு.. இஸ்ரேலுக்கு பறந்து சென்ற வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். நாங்கள் மோதலை விரும்பவில்லை.. யாருடனும் சண்டை போட விரும்பவில்லை.

ஆனால் எங்கள் அமைதியை சோதிக்க வேண்டாம். இஸ்ரேல் எங்களை தாக்க செய்தால்.. காக்கட்டும்.. நாங்கள் எதற்கும் அஞ்சவில்லை.. நாங்கள் போருக்கு முழுமையாக தயாராக உள்ளோம், என்று ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.

israel palestine israel palestine war international

இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, ஈரானிய உள்கட்டமைப்புகள் மீதான எந்தவொரு தாக்குதலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஈரானை தாக்கினால் அதற்கு விரைவான மற்றும் வலுவான பதிலை அளிப்போம். எங்கள் கொள்கை போர் அல்ல.. தொடர்ச்சியான பதற்றம் அல்ல. ஆனால் நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம். எங்களை தாக்கினால் நாங்கள் கண்டிப்பாக திரும்ப தாக்குவோம். போர் செய்ய தயாராக இருக்கிறோம், என்று செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்தார்.

கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

இஸ்ரேல் ரெடி: சமீபத்தில் ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நாட்டின் பதிலடி மோசமாகவும் மற்றும் அதிர்ச்சி அளிக்கும் விதமாகவும் இருக்கும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்து உள்ளார்.

இஸ்ரேலை ஈரான் தாக்கி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க முடிவு செய்து உள்ளோம். எங்கள் தாக்குதல் ஆபத்தானதாகவும், துல்லியமாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக ஆச்சரியமாகவும் இருக்கும். என்ன, எப்படி நடந்தது என்று அவர்களுக்குப் புரியாது.

அணு ஆயுத சோதனை: இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தியதாக செய்திகள் வந்தன. ஈரானின் பாலைவனத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கடுமையான விவாதங்கள் ஏற்பட்டு உள்ளது. ஈரான் அணுகுண்டு சோதனை செய்துள்ளதோ என்ற ஊகங்களை இந்த நிலநடுக்கம் தூண்டி உள்ளது.

ஈரான் அடிக்கடி பூகம்பத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடு, ஆனால் அக்டோபர் 5 அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் இயல்பான நிலநடுக்கம் கிடையாது.. அது இயற்கையான நிலநடுக்கம் கிடையாது என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அங்கே ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது ஈரானிடம் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. முன்பு 200 கிலோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இருந்த ஒப்பந்தம் நீக்கப்பட்ட நிலையில் அணு ஆயுதம் செய்ய தயாரான தரத்தில் இருக்கும் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது.

ஈரான் இப்போது யுரேனியத்தை 60-70 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். இது அதிகாரபூர்வ விவரம்தான். உண்மையில் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஈரான் அணுவை செறிவூட்டி இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதன் மூலம் ஈரான் அணு ஆயுதத்தை சோதனை செய்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

ஈரான் யோசிக்க முடியாத வகையில்.. யோசிக்க முடியாத இடத்தில் அவர்களை அடிப்போம். அவர்கள் முடிவுகளைப் பார்த்து ஆச்சர்யம் அடைவார்கள்.. அதிர்ச்சி அடைவார்கள், என்று இஸ்ரேல் படை வீரர்களுக்கு ஆற்றிய உரையின் போது கேலண்ட் கூறி உள்ளார்.

எங்களைத் தாக்குபவர்கள் பாதிக்கப்படுவார்கள் மற்றும் அதற்குரிய விலையைக் கொடுப்பார்கள் என்று உலகத்திற்கு தெரிய வேண்டும். அதை தெரியப்படுத்தும் விதமாக இந்த தாக்குதலை நடத்துவோம், என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்து உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+