எழுந்து நின்று வரவேற்ற எம்.பி.க்கள்! "விடமாட்டோம்" ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கர்ஜித்த உக்ரைன் அதிபர்
கீவ் : எங்களை யாராலும் தகர்க்க முடியாது, நாங்கள் வலிமையானவர்கள் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் 6-வது நாளாக நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. ஆனாலும் உக்ரைனின் பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. முக்கிய நகரங்களில் குண்டு மழை பொழிந்து வருகிறது ரஷ்யா.

ஐரோப்பா நாடாளுமன்றம்
இந்நிலையில், ஐரோப்பா நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அவரது பேச்சுக்கு அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று பாராட்டியுள்ளனர். முன்னதாக, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவர் ராபர்ட்டா மெட்சோலா இன்று தன்னுடைய ட்விட்டரில் ''உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பு'' என்ற தலைப்பில் விவாதம் ஐரோப்பா நாடாளுமன்றத்தில் நடக்கும் என்றும், அதைத்தொடர்ந்து ரஷ்யா போர் தாக்குதல் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதையடுத்து உக்ரைன் அதிபர் ஐரோப்பிய நாடாளுமன்றம் சென்று உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

வலிமை
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசுகையில், ''எங்கள் நாட்டுக்காக போராடுகிறோம். எங்கள் நாட்டில் பல நகரங்கள் துண்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் சுதந்திரத்துக்காக போராடுவோம். எங்களை யாராலும் தகர்க்க முடியாது, நாங்கள் வலிமையானவர்கள். உக்ரைன் கொடி அணிந்து இங்கு பலரும் வந்துள்ளார்கள். அதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. உக்ரைனுக்கு பலர் ஆதரவாக இருக்கிறார்கள். உக்ரைன் தொடர்ந்து போராடும்'' என்று பேசியுள்ளார்.

போர்
போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன்- ரஷ்யா இடையே நேற்று பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்த உயர்மட்ட தூதுக்குழு அதிகாரிகள் மட்டத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, போரை உடனடியாக நிறுத்திவிட்டு ராணுவத்தை வெளியேற்றும்படி ரஷ்யா தரப்புக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்தது. இதனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

மீண்டும் பேச்சுவார்த்தை
போர் தாக்குதலை குறைத்திருந்த ரஷ்யா, தற்போது தீவிரமாக தாக்கி வருகிறது.
உக்ரைனில் இருக்கும் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில், 2-வது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், ராக்கெட் மூலம் கார்கீவ் நகரை ரஷ்யா தாக்கி வருகிறது. குடியிருப்புகள் மீது ராக்கெட் குண்டு வீச்சு மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்யா மீது குற்றம் சாட்டியுள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications