கிம் ஜோங் பற்றி எதுவும் சொல்ல முடியாது.. மருத்துவர்களை அனுப்பிய சீனா.. கருத்து கூற மறுப்பு.. மர்மம்!
பெய்ஜிங்: வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் தொடர்பாக கருத்து தெரிவிக்க எந்த தகவலும் இல்லை, இப்போது எதுவும் எங்களால் சொல்ல முடியாது என்று சீனா தெரிவித்துள்ளது.
Recommended Video
வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மிக மோசமான உடல்நிலையுடன் இருப்பதாக அமெரிக்கா செய்தி ஊடகமான சிஎன்என் கடந்த வாரம் செய்தி வெளியிட்டு இருந்தது. அவரின் உடல்நிலை மோசமடைந்து இருக்கிறது, இதய அறுவை சிகிச்சை ஒன்றின் காரணமாக அவரின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது என்று செய்தி வெளியிட்டு இருந்தது.
கிம் ஜோங் உன்னுக்கு கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவர் வெளியே எங்கும் வரவில்லை. இதனால்தான் இந்த சந்தேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

சீனா அனுப்பியது
இந்த நிலையில் சீனா இவரின் உடல்நிலையை தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளது. கிம் ஜோங் உன்னிற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் மிகவும் நெருக்கம். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் சீனா தனது நாட்டு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களை வடகொரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. கிம் ஜோங்கிற்கு சிகிச்சை அளிக்கும் விதமாக சீனா அதிகாரிகளை அனுப்பி உள்ளது. கிம் ஜோங் உன்னின் உடல்நிலை மோசமாகி வருவதாக வெளியாகும் தகவல்களால் சீனா இப்படி மருத்துவ குழுவை அனுப்பியது.

விஷயம் இல்லை
இந்த நிலையில் இது தொடர்பாக வெளியே சொல்ல விஷயம் எதுவும் இல்லை என்று சீனா கூறியுள்ளது. அதன்படி சீனாவின் வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் கேங் ஷாங் கருத்து தெரிவித்துள்ளார். அதில், எங்களுக்கு இது தொடர்பாக கருத்து தெரிவிக்க எந்த தகவலும் இல்லை. இப்போது எதுவும் எங்களால் சொல்ல முடியாது என்று சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் மருத்துவ குழு குழு வடகொரியாவில் என்ன செய்கிறது.

சீனா மறுப்பு
அங்கே கிம் ஜோங்கிற்கு சீனா என்ன மாதிரியான மருந்துகளை, சிகிச்சையை கொடுக்கிறது என்று சீன அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் இதற்கும் சீனா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. சீனாவின் மருத்துவ குழு கிம் ஜோங்கிற்கு தீவிரமான மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதாக அமெரிக்க ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

என்ன ரகசியம்
ஆனால் வடகொரியாவை தொடர்ந்து சீனாவும் இதில் ரகசியம் காக்க தொடங்கி உள்ளது. வடகொரியா வரை மருத்துவர்களை அனுப்பிவிட்டு ஏன் அனுப்பினோம் என்று கருத்து தெரிவிக்காமல் சீனா அமைதி காக்கிறது. சீனாவின் இந்த அமைதி பெரிய கேள்விகளை எழுப்பி உள்ளது. ஏற்கனவே வடகொரியாவின் அரசு கிம் ஜோங் குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications