"இந்தியாவை 2 துண்டாக்குவோம்".. 7 வடகிழக்கு மாநிலங்களை தனியாக பிரிப்போம்! வங்கதேசம் திமிர் பேச்சு

Subscribe to Oneindia Tamil

டாக்கா: நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான், ‛‛இந்தியாவின் எதிரிகளை நாங்கள் எங்கள் நாட்டில் தங்க வைப்போம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பிரிக்க உதவுவோம்'' என்று வங்கதேசம் மீண்டும் நம் நாட்டை சீண்டி உள்ளது.

ஒரு காலத்தில் நம் நாட்டுடன் நெருக்கமாக இருந்த வங்கதேசம் தற்போது எதிரியாக மாறி உள்ளது. கடந்த ஆண்டு வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார்.

bangladesh north east states

இவர் பொறுப்பேற்றது முதல் இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் சேர்ந்து வங்கதேசம் சீண்டி வருகிறது. இதுதவிர எல்லைகளில் தேவையின்றி வங்கதேசம் பதற்றத்தை உருவாக்கி வருவதோடு, அவ்வப்போது நம் நாட்டுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. அதுமட்டுமின்றி வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களை துன்புறுத்தி வருகிறது.

அந்த வரிசையில் தற்போது மீண்டும் வங்கதேசம் நம்மை சீண்டி உள்ளது. வங்கதேசத்தில், வங்கதேச தேசிய மக்கள் கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் ஹஸ்னாத் அப்துல்லா தான் நம் நாட்டை சீண்டி உள்ளார். வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மத்திய ஷாஹீத் மினார் பொதுக்கூட்த்தில் ஹஸ்னாத் அப்துல்லா பேசியதாவது:

‛‛இந்தியாவின் எதிரிகளுக்குத் தங்கள் நாட்டில் புகலிடம் அளிப்போம்.இந்தியாவை பிரிக்க நினைக்கும் பிரிவினைவாதிகள் மற்றும் இந்திய எதிர்ப்பு கொண்ட சக்திகளுக்கு நாங்கள் ஆதரவு அளித்து தங்கவைப்போம். இந்தியாவின் ஏழு சகோதரி மாநிலங்களை'இந்தியாவில் இருந்து பிரிப்போம்'' என்று வாய்ச்சவடால் விட்டுள்ளார்.

நம் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா உள்ளிட்ட 7 மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் நாம் ‛7 சகோதரி மாநிலங்கள்' என்று அழைக்கிறோம். இதில் அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்கள் நேரடியாக வங்கதேசத்துடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன.

இந்நிலையில் 7 வடகிழக்கு மாநிலங்களையும் இந்தியாவிடம் இருந்து பிரிப்பதாக ஹஸ்னாத் அப்துல்லா திமிராக பேசியுள்ளார். மேலும் இந்த 7 மாநிலங்களை வைத்து வங்கதேசத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் இப்படி பிரிவினைவாதம் பேசுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை இப்படி கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி ஒரு காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள் மிகவும் சென்சிட்டிவான பகுதியாக இருந்தது. 1990களின் பிற்பகுதியில் இருந்து 2000ம் ஆண்டின் முற்பகுதி வரை வடகிழக்கு மாநிலங்களில் பல பயங்கரவாத அமைப்புகள், பிரிவினைவாத குழுக்கள் செயல்பட்டன. இந்த குழுவை சேர்ந்தவர்கள் வங்கதேசத்தை புகலிடமாக கொண்டதோடு, அங்கிருந்து ஆயுதங்களை வாங்கி பயன்படுத்தி நம் நாட்டுக்கு எதிராக செயல்பட்டன. ஆனால் இப்போது அந்த பயங்கரவாத அமைப்பு, பிரிவினைவாத குழுவினர் பெருமளவில் அடக்கப்பட்டுள்ளனர். இதனால் இனி வங்கதேசத்தால் நம் நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது. மீறி ஏதாவது செய்ய நினைத்தால் வங்கதேசத்தின் மூக்கு உடைவது உறுதி என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+