முழு ராணுவ பலத்தை கொண்டு இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்.. பாகிஸ்தான் ராணுவ தளபதி அடாவடி பேச்சு
இஸ்லாமாபாத்: இந்தியா எடுத்து வரும் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் அச்சமடைந்துள்ள பாகிஸ்தான், உளறி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் முழு ராணுவ பலத்தை பயன்படுத்துவோம் என்று பாகிஸ்தான் தலைமை ராணுவ அதிகாரி ஆசிப் முனிர் கூறிய கருத்து பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.
பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்ரவாதிகள் நடத்திய தாக்குதலால் நாடே கொதித்து போய் உள்ளது. அப்பாவி பொதுமக்கள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கைகளை தற்போது தொடங்கியுள்ளது.

இந்தியாவின் பதிலடி நடவடிக்கையால் பாகிஸ்தான் பீதி அடைந்து இருக்கிறது. ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தான், இந்தியா தாக்கினால் நிலைமை என்ன ஆகுமோ என கதி கலங்கி வருகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைக்கு முழுமையான ஆதரவு அளிப்பதாக ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடியிடம் உறுதி அளித்துள்ளார்.
இப்படி சர்வதேச நாடுகளின் ஆதரவும் இந்தியாவுக்கு குவிந்து வருகிறது. இதனால், அச்சம் அடைந்து இருக்கும் பாகிஸ்தான், எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த சில நாட்களாக தாக்கி வருகிறது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கும் இந்தியா கடுமையான பதிலடியை கொடுத்து வருகிறது.
அதுமட்டும் இன்றி சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, விசா ரத்து, பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற்றம், ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை, பாகிஸ்தான் கப்பல்களுக்கு துறைமுகத்தில் அனுமதியில்லை என பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீரை நிறுத்தினால் அதை போராக கருதுவோம் என்று பாகிஸ்தான் அடாவடியாக பேசியது.
மேலும் தங்களிடம் அணு ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவோம் என டென்ஷனை மேலும் அதிகரிக்கும் விதமாக பேசி வருகிறது. இன்னொரு பக்கம் இந்தியாவின் கண்டனத்தை மீறி ஏவுகணை சோதைனையும் நடத்தி வருகிறது. இதனால், இந்தியாவும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட சரியான நேரத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் தலைமை ராணுவ அதிகாரி ஆசிப் முனிர் கூறிய கருத்து பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.
ஆசிம் முனிர் கூறுகையில், 'பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் முழு ராணுவ பலத்தை பயன்படுத்துவோம்' என்று கூறியுள்ளார். ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மையத்தில் பேசிய முன்னர் கூறியதாவது:- "பிராந்திய அமைதியையே பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால், ராணுவ பதற்றம் அதிகரித்தால், தங்களை தற்காத்துக்கொள்ள தயங்க மாட்டோம்" என்றார்.












Click it and Unblock the Notifications