லடாக்கை அங்கீகரிக்க மாட்டோம்... எல்லையில் பாலங்கள் திறந்த பின்னர் மீண்டும் சீண்டும் சீனா!!

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: யூனியன் பிரதேசமான லடாக்கை அங்கீகரிக்க மாட்டோம் என்று சீனா மீண்டும் முரண்டு பிடித்துள்ளது. இதற்கு முன்பும் இதேபோன்று சீனா தெரிவித்து இருந்தது.

இந்திய எல்லையில் லடாக், அருணாசலப் பிரதேசம், சிக்கிம், இமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் எல்லையில் 44 பாலங்களை நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இதையடுத்தே, சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று இவ்வாறு தெரிவித்துள்ளது.

We wont recognize illegally occupied ladakh says china

''இரண்டு தரப்புக்கும் இடையே எல்லையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில், எல்லையில் இந்தியா நடவடிக்கைகளில் இறங்கி இருப்பது, அமைதி பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்பை குலைப்பதாக இருக்கும். அருணாசலப் பிரதேசத்தைப் போலவே, லடாக் பகுதியையும் சட்டத்திற்கு விரோதமாக இந்தியா ஆக்கிரமித்துள்ளது.

எல்லையில் இந்தியா உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு, ராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது. இதுதான் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அடிப்படை பதற்றமாக இருக்கிறது'' என்று சீனா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வடக்குப் பகுதியில் சீனா 60,000 ராணுவ வீரர்களை குவித்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்தியாவை சீனா சீண்டியுள்ளது.

இருநாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தை அடுத்து எல்லையில் கட்டமைப்புப் பணிகளை இந்தியா துரிதமாக்கி வருகிறது. இமாசலப் பிரதேசத்தில் இருக்கும் தார்ச்சா பகுதியை லடாக்குடன் இணைத்து வருகிது.

சமீபத்தில் எல்லையில் திறக்கப்பட்டு இருக்கும் அனைத்து உள்கட்டமைப்பு பணிகளும் ராணுவத்தினர் எளிதில் லடாக் பகுதியை அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் சீனாவை எரிச்சல் அடையச் செய்துள்ளது.

இதற்கிடையே இந்திய, சீன ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான ஏழாவது கட்ட பேச்சுவார்த்தை சுசூல் பகுதியில் நடந்தது. இதில் இருநாடுகளின் ராணுவ கமாண்டர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக, உறுதியானதாக இருந்தது என்று சீனா தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+