"வாக்னர்" கூலிப்படை சீனாவுக்கு பாடம்? புதின் கூட மிரண்டுபோனாரே.. அப்போ ஜி ஜின்பிங் என்ன செய்வார்
பெய்ஜிங்: ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக வாக்னர் குழு புரட்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதில் இருந்து சீனா என்ன மாதிரியான பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
ஒரு பக்கம் உக்ரைன் நாட்டில் போர் தொடர்ந்து வரும் நிலையில், மறுபுறம் சீனா ரஷ்யா மற்றும் புதின் உடன் ஒரு சமநிலையைக் கையாண்டு வருகிறது. ரஷ்யாவில் உறுதியற்ற சூழல் உருவாகாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த வாரம் ரஷ்யாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி என்பது சீனாவுக்கு இப்போது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் சீனா மற்றும் ரஷ்யா உறவு வல்லுநரான ஜோசப் டோரிஜியன் இது குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
என்ன நிலை: ரஷ்ய நிகழ்வுகள் குறித்து சீனா என்ன நினைக்கும் என்பது குறித்து ஜோசப் டோரிஜியன் கூறுகையில், "சீனா உண்மையில் என்ன நினைக்கிறது என்பதை யூகிப்பது கடினம்.. இந்த விவகாரத்தில் சீனா அதிகாரப்பூர்வமாக எதையும் சொல்லவில்லை. இதனால் சீனாவின் நிலைப்பாடு என்ன என உறுதியாக நம்மால் சொல்ல முடியாது. வரலாற்று ரீதியாகச் சீனா ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை ரஷ்யா கூர்ந்து கவனிக்கும்.
இருப்பினும், சீனா ஊடகங்கள் அந்நாட்டின் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் வெளிப்படையாக எந்தவொரு தகவலும் நமக்கு இல்லை. அதேநேரம் சீனா இந்த விவகாரத்தில் கவலை கொள்ளவில்லை என உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் மறைமுகமாக அவர்கள் பல கருத்துகளைச் சொல்லி வருகின்றனர். சீனாவின் குளோபல் டைம்ஸ் வாக்னர் கிளர்ச்சி குறித்து சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
சீனா என்ன நினைக்கிறது: சீனாவின் அரசியல் விமர்சகர் ஹு ஜிஜின் தனது ட்விட்டரில், ரஷ்யாவின் ஆயுத கிளர்ச்சி, அங்கிருந்த அரசியல் சூழல் கையை மீறிச் செல்வதைக் காட்டுகிறது. இந்த கிளர்ச்சி எப்படி முடிந்தாலும் ரஷ்யா மீண்டும் பழைய நிலைக்குச் செல்லாது" என்று பதிவிட்டிருந்தார். இருப்பினும், அதைக் கொஞ்ச நேரத்தில் டெலிட் செய்துவிட்டார். ரஷ்யா சொந்த நாட்டில் அமைதியைக் கொண்டு வர வேண்டும் என்பதைச் சீனா விரும்புகிறது என்பதையே இது காட்டுகிறது..
அதேநேரம் தற்போதைய சூழலில் ரஷ்யாவைக் கட்டுக்குள் வைத்திருக்க புதின் தான் சரியான நபராக இருப்பார் எனச் சீனா கருதுகிறது. இதனால் அவர்கள் இன்னுமே புதினுக்கு ஆதரவாகவே உள்ளனர் சில சீன ஊடகங்கள் புதின் வாக்னர் புரட்சியை வெற்றிகரமாகக் கையாண்டார் என்பது குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளது. வாக்னர் குழு நடவடிக்கை தர்மசங்கடத்தை ஏற்படுத்தினாலும் கூட இன்னும் பல மேற்குலக நாடுகளும் புதின் தான் சரியான நபர் என்றே கருதுகிறது.
ஒற்றுமை இருக்கிறது: வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பதை வைத்து சீனா தங்கள் சொந்த நாடு குறித்த முடிவுகளை எடுக்கிறது என்று சொல்ல முடியாது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிறப்பு, கலாச்சாரப் புரட்சி, 1970களின் பிற்பகுதியிலிருந்து பொருளாதார சீர்திருத்தங்கள், இன சிறுபான்மையினருக்கான கொள்கை என சில ஒற்றுமைகள் இருக்கிறது. ஆனால், ரஷ்யாவில் இருந்தே சீனா இதை எடுத்தது என நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது.
ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இருவரும் பழமைவாதிகள் தான். இருவரும் எப்போதும் மேற்குலக நாடுகளைச் சந்தேகத்துடனேயே அணுகுவார்கள். குறிப்பிட்ட நாடுகளின் தலைவர்களுடன் தான் நல்ல உறவை வைத்துள்ளனர். அதேநேரம் சீன அதிபர் ஜிங்பிங் ஊழலை ஒழிக்கத் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளார். ரஷ்யாவில் இதற்கு நேர்மாறான சூழல் இருக்கிறது.
சீனாவில் ராணுவ புரட்சி: மேலும், சீன ராணுவம் முழுக்க முழுக்க அந்நாட்டின் அதிபர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்களின் அனுமதி இல்லாமல் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே, சீனாவில் வாக்னர் புரட்சி போன்ற ஒன்று நடக்கும் வாய்ப்பு மிக மிகக் கடினம். அதேநேரம் சற்று எச்சரிக்கையுடன் நாம் இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications