"200 கோடி" பேராம்! கட்டுப்பாடுகளை நீக்கியவுடன்.. வீடுகளை விட்டு வெளியேறும் சீன மக்கள்! ஏன் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் இப்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இப்போது அங்குப் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், மிகப் பெரிய ஆபத்து உலக நாடுகளுக்குக் காத்திருக்கின்றன.

சீனாவில் இத்தனை காலம் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி சீன மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

சமீப காலங்களில் சீனாவில் நடந்த மிகப் பெரிய மக்கள் போராட்டமாக இது இருந்தது. இதனால் வேறு வழியில்லாமல் ஜி ஜின்பிங் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டன. ஒரே அடியாக கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கியதால் அங்கு வைரஸ் பாதிப்பு உச்சம் தொட்டது.

சீனா

சீனா

இதனால் அங்குள்ள 140 கோடி மக்கள் இக்கட்டான சூழலில் உள்ளனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட சீனா மக்கள் தங்கள் புத்தாண்டைக் கொண்டாட உள்ளனர். "சுன் யுன்" என்று அழைக்கப்படும் இது சீன சந்திர புத்தாண்டில் முதல் நாளாகக் கருதப்படுகிறது. புத்தாண்டில் முதல் 40 நாட்கள் சீன மக்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்ப்பார்கள். கொரோனாவுக்கு முன்பு வரை இந்த 40 நாட்கள் சந்திர புத்தாண்டு பயணத்தின் உலகின் மிகப்பெரிய மக்கள் இடம்பெயர்வு என்று கூறப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், இப்போது தான் உள்நாட்டில் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கிறது.

 200 கோடி

200 கோடி

கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் சீனா நீக்கியுள்ளன. இதனால், இந்தாண்டு அதிகப்படியான மக்கள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், சீன மக்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. புத்தாண்டைக் கோளகமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். அடுத்த 40 நாட்களில் மட்டும் சுமார் 200 கோடி பயணிகள், பயணங்களை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகச் சீன போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்தாண்டை விட 99.5% அதிகமாகும். இருப்பினும், கொரோனாவுக்கு முந்தைய சூழலை ஒப்பிடும்போது இது 30% குறைவு தான்.

 என்ன பாதிப்பு

என்ன பாதிப்பு


இதற்கு இணையத்தில் கலவையான கருத்துகளே எழுந்துள்ளன. ஒரு பக்கம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊரில் புத்தாண்டைக் கொண்டாட முடிவதாகச் சீன மக்கள் தெரிவிக்கின்றனர். இரு ஆண்டுகளாக ஜீரோ கோவிட் கொள்கையால் தங்களால் சொந்த ஊருக்குக் கூட திரும்ப முடியாத சூழலே இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் இப்போது பயணங்களை மேற்கொள்வது சரியான முடிவாக இருக்காது என்று கூறி வருகின்றனர்.

 இரண்டாம்கட்ட நகரங்கள்

இரண்டாம்கட்ட நகரங்கள்

சீனாவில் இப்போது பெய்ஜிங், ஷாங்காய் போன்ற பெருநகரங்களில் கொரோனா உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினால், அது இரண்டாம் கட்ட மற்றும் சிறு நகரங்களில் கொரோனா அலையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகச் சிலர் எச்சரிக்கின்றனர். அதிலும் வயதானவர்கள் பார்க்கச் சொந்த ஊருக்குத் திரும்பினால், அதுவே அவர்களுக்குப் பெரிய ஆபத்தையும் தரலாம் என்றும் எச்சரிக்கின்றனர்.

 கட்டுப்பாடுகள் நீக்கம்

கட்டுப்பாடுகள் நீக்கம்

அதேபோல சீனா சர்வதேச பயணத்திலும் பல கட்டுப்பாடுகளை விதித்து இருந்தன. வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பினால் 15 நாட்கள் கட்டாய தனிமை தொடங்கிப் பல கட்டுப்பாடுகளை விதித்து இருந்தன. இந்த கட்டுப்பாடுகளையும் சீனா நீக்கியுள்ளன. அதேபோல ஹாங்காங் எல்லையையும் சீனா மீண்டும் தொடங்கியுள்ளன. இதனால் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உலக நாடுகளும் கூட சீனாவில் இருந்து வருவோருக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

 என்ன காரணம்

என்ன காரணம்

சீனாவில் இப்போது தீவிர வைரஸ் பாதிப்பும் பல மடங்கு அதிகரித்து உள்ளது. அங்குச் சீனாவில் உருவாக்கப்பட்ட சினோவாக் மற்றும் சினோபார்ம் வேக்சின் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டன. மேற்கத்திய வேக்சின்களுடன் ஒப்பிடும்போது, இதன் தடுப்பாற்றல் ரொம்வே குறைவு.. இதன் காரணமாகவே சீனாவில் இப்போது அதிகப்படியான தீவிர பாதிப்பு ஏற்படுவதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+