"இல்லை புரில.." அப்பாக்கள் வாடகைக்கு..! பிடித்தவரை செலக்ட் செய்யலாமாம்.. சீனாவில் வந்த புது ஆஃபர்
பெய்ஜிங்: சீனாவில் புதிது புதிதாகப் பல விஷயங்களைக் கண்டுபிடிப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இப்போது அவர்கள் கண்டுபிடித்த ஒரு விஷயம் பலருக்கும் ஆச்சரியத்தைத் தருவதாக அமைந்துள்ளது.
இப்போது உலகம் அனைத்திலும் மின்னல் வேகத்தில் மாறி வருகிறது. குறிப்பாக குடும்ப முறையில் சொல்லலாம். கடந்த 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குடும்ப முறையுடன் ஒப்பிடும் போது முற்றிலும் வேறாக இருக்கிறது. அதிலும் இந்தியாவைக் காட்டிலும் உலக நாடுகளில் இது இன்னுமே வேகமாக மாறி வருகிறது.

குறிப்பாக சிங்கிள் பெற்றோர் முறை அதிகரித்து வருகிறது. ஆண் துணையின்றி பெண்கள் குழந்தையை வளர்க்கும் முறை உலக நாடுகளில் பரவலாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே சீனாவில் அப்படி ஒரு வினோதமான பிஸ்னஸ் மாடலை தான் ஆரம்பித்துள்ளனர்.
வாடகை தந்தை: இன்றைய வேகமான உலகில், வசதிக்காகப் பலரும் வாடகை முறைக்கே நடந்து வருகின்றனர். முன்பு வீடுகள் மட்டுமே வாடகைக்கு இருக்கும். ஆனால், இப்போது வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் கார், பைக் என அனைத்துமே வாடகைக்குக் கிடைக்கிறது. ஆனால், சீனா இந்த வாடகை என்ற கான்செப்ட்டை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுவிட்டது.
அதாவது அவர்கள் அப்பாக்களை வாடைக்கு விடுவதாக அறிவித்துள்ளனர். ஆம், அப்பாக்களை தான். சிங்கிள் தாயாகக் குழந்தைகளை வளர்க்கும் பெண்களுக்கு உதவும் வகையில் அவர்கள் இந்த சேவையைக் கொண்டு வந்துள்ளனர். சிங்கிள் பெற்றோராக இருந்தால் 24 * 7 குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் இருந்து அவர்கள் கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொள்ள இந்த வாடகை தந்தை முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் அம்மாக்கள் தங்களுக்குப் பிடித்த விஷயத்தில் சற்று கவனம் செலுத்தலாம்.

பாத் ஹவுஸ்: சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஷென்யாங் என்ற இடத்தில் தான் இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ஏரியா இங்குள்ள பாத் ஹவுஸ்களுக்கு ரொம்பவே புகழ்பெற்றவை. பாத் ஹவுஸ் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக இருக்கும். சூடான நீச்சல் குளத்தில் அவர்கள் குளிக்க முடியும். இப்படி தனித்தனியாக இருப்பதால், பெண்கள் இருக்கும் இடத்திற்கு ஆண் குழந்தைகளைத் தாய்மார்களால் அழைத்து வர முடியாது.
இதற்குத் தீர்வாகவே ஆண் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள இந்த வாடகை தந்தை முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த பாத் ரூம்களில் குளிக்கும் போது ஆண்கள் தனியாக இருக்க வேண்டும் என்பதால் ஏற்படும் அசவுகரியத்தைப் போக்க ஆண் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளத் தாய்மார்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அச்சம்: இந்த சேவையைப் பெறச் சிறுவர்களுக்குக் குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச வயது என்னவாக இருக்க வேண்டும் என எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதேநேரம் வாடகை தந்தைகளாக வருவோர் எதாவது பயிற்சி பெற்றுள்ளனரா என்பது குறித்த தகவல்களும் இல்லை. அங்கே பெரும்பாலானோர் இதை வரவேற்றுள்ளனர்.
சிங்கிள் தாய்மார்கள் கொஞ்ச நேரம் தனிமையில் இருக்கவும் பிடித்தபடி நேரத்தை போக்கவும் இந்த திட்டம் மிகப் பெரியளவில் உதவியாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மற்றொரு தரப்பினர் இது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். யார் என்றே தெரியாத நபர்களை நம்பி எப்படி குழந்தைகளை விட்டுச் செல்ல முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications