உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?
தெஹ்ரான்: மத்திய கிழக்கு மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அது முடங்கினால் சர்வதேச அளவில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். இது ஒரு பக்கம் இருக்க சர்வதேச அளவில் சரக்கு கப்பல் போக்குவரத்து எப்படி நடக்கிறது. சத்தமின்றி திரைமறைவில் இயங்கும் நிழல் கப்பல்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
உலகெங்கும் சுமார் 1,100 நிழல் கப்பல்கள் இயங்குவதாக கடல்சார் புலனாய்வு நிறுவனமான விண்ட்வார்டு தெரிவித்துள்ளது.. கச்சா எண்ணெய் போன்றவற்றை ஏற்றிச் செல்லும் மொத்த டேங்கர்களில் இது 17-18 சதவீதம் ஆகும். அதாவது இப்போது இங்கும் கச்சா எண்ணெய் கப்பல்களில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒன்று இதுபோன்ற நிழல் கப்பல் (Shadow Fleet) கப்பலாகும்.

நிழல் கப்பல்கள்
இந்த நவீன ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் ரோட்டில் எல்லாமே கண்காணிக்கப்படும். போலீசார் நினைத்தால்.. விதிகளைக் கடுமையாக்கினால் பல சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும். ஆனால், கடல்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அந்தளவுக்குக் கண்டிப்பானது அல்ல.. பெரும்பாலும் விதிகளை நாம் விருப்பப்பட்டால் மட்டுமே பின்பற்றுவோம். இதுவே "நிழல் கப்பல்கள்" கப்பல்கள் பெருக முக்கிய காரணமாகிறது.
ஒரு கப்பலின் இருப்பிடத்தைக் காட்டும் டிரான்ஸ்பாண்டர்களில் (Global Positioning System Locator) தங்கள் கப்பல் எங்கே இருக்கிறது, கப்பலின் அடையாளம், வேகம், இருப்பிடம், அடுத்த துறைமுகம் எங்கே என்பதைக் கப்பல் ஊழியர்கள் தான் டைப் செய்வார்கள். டிரான்ஸ்பாண்டர்களை நிச்சயம் வைக்க வேண்டும் எனக் கடலில் உயிர் பாதுகாப்பிற்கான சர்வதேச மாநாடு விதிகளில் தெரிவிக்கப்பட்டாலும், அதை ஆஃப் செய்ய வழிமுறை இல்லை. ஒரு முறை அந்த டிரான்ஸ்பாண்டர்கள் ஆஃப் செய்யப்பட்டால் அது கப்பல் வரைபடத்திலிருந்து மறைந்துவிடும். எங்கு இருக்கிறது என்றே தெரியாது.
கப்பலும் கொடியும்
அதேபோல பல சமயங்களில் கப்பல்கள் மீது கொடிகளை நாம் பார்த்து இருப்போம். அந்த கப்பல் அந்த நாட்டின் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றே நாம் நினைப்போம். ஆனால், அது அந்தளவுக்கு எளிமையானது இல்லை. ஒரு கப்பலில் இருக்கும் கொடிக்கும் அது எந்த நாட்டில் ஆபரேட் செய்கிறது என்பதற்கும் தொடர்பு இல்லை. கப்பல் பதிவு என்பது வெறும் பேப்பரில் மட்டுமே இருக்கும். பெரும்பாலான நிறுவனங்கள் கடுமையான விதிகளில் இருந்து எஸ்கேப் ஆக சம்பந்தமே இல்லாத நாடுகளில் தங்கள் கப்பலைப் பதிவு செய்து கொள்ளும்.
உதாரணமாகத் துபாயில் ஷெல் நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல் கேமரூன், பலாவ், லைபீரியா அல்லது மங்கோலியா போன்ற நாடுகளில் பதிவு செய்து கொண்டு, ஆபரேட் செய்யும். பெரியளவில் எந்த நாடுகளில் கட்டுப்பாடு இருக்காதோ அந்த நாடுகளில் கப்பல்களை இயக்கவே பெரும்பாலான நிறுவனங்கள் விரும்பும். ஒருவேளை விசாரணை சிக்கலில் மாட்டினாலும் கூட ஆன்லைனிலேயே வேறு நாட்டின் கீழ் பதிவு செய்ய முடியும்.
எப்படி செயல்படும்
அதாவது அமெரிக்காவில் கப்பலுக்கான ரூல்ஸ் அதிகம். இதனால் அமெரிக்க நிறுவனம் ஷெல் நிறுவனம் மூலம் கேமரூன் நாட்டின் கீழ் பதிவு செய்து கப்பலை இயக்கலாம். கேமரூனில் பெரியளவு ரூல்ஸ் இருக்காது. அதையும் தாண்டி எதாவது மேட்டரில் சிக்கி, கேமரூன் அரசு விசாரணையைத் தொடங்கினால், சட்டென கேமரூனில் இருந்து மங்கோலியா நாட்டிற்கு மாற்றிக் கொள்வார்கள். அப்படி மாற்றினால், அந்த கப்பலை கேமரூன் அதிகாரிகளால் விசாரிக்க முடியாது. இதுபோன்ற ரூல்ஸ்களே சட்டவிரோத செயல்களுக்கு உறுதுணையாக இருக்கிறது.
இன்சூரன்ஸ் ஆவணங்கள்
அதேபோல பெரிய துறைமுகங்களில் நுழைய இன்சூரன்ஸ் ஆவணங்கள் தேவைப்படும். இதுபோல ஷெல் நிறுவனம் மூலம் இயங்கும் கப்பல்கள் 'அடையாளம் தெரியாத' அல்லது போலி காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இதுபோன்ற பேப்பரை ரெடி செய்து கொடுக்கும். இப்படி கப்பல் போக்குவரத்தில் பல குளறுபடிகள் இருக்கிறது. இது உலக நாடுகளுக்குத் தெரிந்தாலும் பெரிதாகக் கண்டு கொள்ள மாட்டார்கள்.
நிழல் கப்பல்கள் தேவை
இந்தளவுக்கு சிக்கலான ஒரு சிஸ்டம் சிறப்பாகச் செயல்பட ஒரு முக்கிய பொருளாதாரக் காரணமும் உண்டு. வழக்கமான சூழல்களில் அனைத்து ரூல்ஸ்களையும் பின்பற்றுவதே செலவைக் குறைக்கும். ஆனால், உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் வரும்போது ஆட்டம் மொத்தமாக மாறிவிடும். உதாரணமாக, ஈரான் விவகாரத்தில்.. அதன் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு முக்கிய நிறுவனங்களும் ஈரான் கச்சா எண்ணெயை சப்ளை செய்யாது. ஆனால், இந்த நிழல் கப்பல்கள் அதை சப்ளை செய்யும். இப்போதும் கூட ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஏகப்பட்ட நிழல் கப்பல்கள் இருக்கவே செய்கிறது.
-
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
மீண்டும் வெடிக்கும் போர்..? ஈரானின் பதில் தாக்குதலில் ஷாக்கான அமெரிக்கா.. சிக்கிய F-35 பைட்டர் ஜெட்! -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications