"அவங்க பிளானே வேற.." இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சொன்ன அந்த ஒரு வார்த்தை! உற்று பார்க்கும் உலக நாடுகள்
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே சண்டை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வரும் நிலையில், போர் குறித்தும் தனது வருங்கால திட்டம் குறித்தும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. ஒரு பக்கம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், மறுபறம் இஸ்ரேலில் புகுந்தும் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றன.

இந்த தாக்குதலால் முதலில் இஸ்ரேல் ஆட்டம் கண்டாலும் கூட விரைவில் சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதலை ஆரம்பித்தது. முதலில் காசா மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல், மெல்லப் படையெடுப்பையும் ஆரம்பித்தது.
இஸ்ரேல் ஹமாஸ் போர்: இதற்கிடையே இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன்மின் நெதன்யாகு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது இந்த சண்டை ஹமாஸுக்கு எதிரானது என்று குறிப்பிட்ட அவர், இந்த சண்டையை வைத்து காசாவைக் கைப்பற்றவோ, ஆக்கிரமிக்கவோ அல்லது ஆட்சி செய்யவோ இஸ்ரேல் முயலவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால் தீவிரவாத அச்சுறுத்தல்களைத் தடுக்க பாலஸ்தீனிய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த ராணுவம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
காசா பாதுகாப்புக்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்றும் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது சரியானது இல்லை என்று சமீபத்தில் அமெரிக்கா கூறி இருந்தது. மேலும், இஸ்ரேல் ஹமாஸ் சண்டை முடிந்த பிறகும் கூட, காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் பைடன் கடந்த வாரம் தான் திட்டவட்டமாகக் கூறியிருந்தார். அதை ஆமோதிக்கும் வகையில் இப்போது இஸ்ரேலும் இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளது.
நெதன்யாகு பிளான்: இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், "நாங்கள் காசாவைக் கைப்பற்ற முயலவில்லை. காசாவை ஆக்கிரமிக்க முற்படவில்லை, காசாவை ஆள வேண்டும் என்பதும் எங்கள் திட்டமில்லை. காசாவில் ஒரு மக்கள் ஆட்சி உருவாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் திட்டம். அதற்கான நடவடிக்கைகளைத் தான் எடுத்து வருகிறோம். அதேநேரம் கடந்த அக். 7ஆம் தேதி நடந்த தாக்குதலைப் போல மற்றொரு தாக்குதல் நடந்துவிடக் கூடாது என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
எங்கள் ராணுவத்தில் ஒரு பகுதி தேவைப்பட்டால், காசாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த ரெடியாக இருக்கிறது. இதைச் செய்தால் மட்டுமே ஹமாஸ் படையை முழுமையாக அழிக்க முடியும். ஹமாஸ் மீண்டும் வராமல் தடுக்க இது மட்டுமே ஒரே வழி.. இந்த சண்டைக்குப் பிறகு காசாவை ஆக்கிரமிக்க வேண்டும் என்பது எங்கள் திட்டமில்லை. இப்போது ஹமாஸ் தான் அங்கே வீரர்களைக் குவித்துள்ளனர். அந்த நிலையை மாற்றி, காசாவை மக்கள் வாழக் கூடிய நகராக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்றார்.
போர் நிறுத்தம்: கடந்த அக். 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இரு தரப்பிற்கும் இடையே மோதல் தொடர்ந்து வந்தது. காசா மக்களுக்கு உதவும் வகையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்திய நிலையில், முதலில் அதை இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும், சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்த நிலையில், வேறு வழியின்றி மக்கள் பாதுகாப்பாக வெளியேறத் தினசரி 4 மணி நேரம் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் சம்மதம் தெரிவித்ததது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications