"ஹெலிகாப்டர் விபத்து!" ஈரான் அதிபர் ரைசி கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி எது! மலை பகுதிக்கு சென்றது ஏன்?
தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவர் கடைசியாக கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி எது.. அவர் எதற்காக கிழக்கு அஜர்பைஜான் பகுதிக்குச் சென்றார் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நாடு என்றால் அது ஈரான் தான். இந்த நாட்டின் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.

முதலில் அவர் சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மோசமாகத் தரையிறங்கியதாகத் தகவல் வெளியானது. அதன் பின்னரே அவரது ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்தில் சிக்கியதாகக் கூறப்பட்டது.
மீட்புப் பணிகள்: விபத்து குறித்த தகவல் கிடைத்த உடன் மீட்புப் படையினர் அங்கு விரைந்தனர். அங்குப் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் முதலில் விமானம் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து மீட்புப் படையினர் அனைவரும் நடந்து சென்றே மீட்புப் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். பல மணி நேரமாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.
இந்தச் சூழலில் இன்று காலை தான் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்தில் சிக்கியதும் அதில் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டது. மேலும், அவரது உடலையும் மீட்புப் படையினர் மீட்டனர். அந்த ஹெலிகாப்டரில் பயணித்த அனைவருமே விபத்தில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
உள்ளே இருந்தது யார்: அந்த ஹெலிகாப்டரில் ஈரான் அதிபர் ரைசி உடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி, கிழக்கு அஜர்பைஜானுக்கான சுப்ரீம் லீடரின் பிரதிநிதி அயதுல்லா முகமது அலி அலே-ஹஷேம் ஆகியோரும் ஹெலிகாப்டரில் இருந்த நிலையில், அவர்களும் விபத்தில் கொல்லப்பட்டனர்.
கடைசி நிகழ்ச்சி: இதற்கிடையே ரைசி கடைசியாகக் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி எது.. எதற்காக அவர் கிழக்கு அஜர்பைஜான் பகுதிக்குச் சென்றார் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.. அதாவது ஈரான் அண்டை நாடான அஜர்பைஜானுக்கு இப்ராஹிம் ரைசி சென்று திரும்பும் போது தான் விபத்து நடந்துள்ளது. இரு நாடுகள் வழியாகச் செல்லும் அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்காகவே ரைசி அங்குச் சென்றிருந்தார்.
ஏற்கனவே அரஸ் ஆற்றில் இரு நாடுகளும் இணைந்து 2 அணைகளைக் கட்டியுள்ள நிலையில், 3ஆவது அணையின் திறப்பு விழா நேற்று நடந்தது. அதில் கலந்து கொள்ளத் தான் ரைசி அஜர்பைஜான் சென்றார். இந்த அணை திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டது தான் அவரது கடைசி பொது நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர் ஈரான் நாட்டிற்கு ஹெலிகாப்டர் மூலம் திரும்பியுள்ளார்.
எங்கே விபத்து: அப்போது அஜர்பைஜான் எல்லையில் உள்ள மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது. பனி அதிகமாக இருந்ததால் இந்த விபத்து நடந்து இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், ஹெலிகாப்டர் விபத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஈரான்- அஜர்பைஜான் எல்லையில் சுங்குன் என்ற பகுதியில் தான் விபத்து நடந்துள்ளது. இது ஈரான் நாட்டிற்கு உட்பட்ட கிழக்கு அஜர்பைஜான் என்ற மாகாணத்தில் அமைந்துள்ள பகுதியாகும். ஹெலிகாப்டர் இந்த பகுதியில் சென்ற போது தான் அது விபத்தில் சிக்கியுள்ளது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications