இதுதான் இஸ்ரேல் ஸ்டைல்.. துப்பாக்கி இல்லை, ஏவுகணை இல்லை.. ஆனாலும் ஈரானுக்கு விழுந்த அடி! அது எப்படி?
தெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தி சில வாரங்கள் கூட ஆகாத நிலையில், அதற்கு யாருமே எதிர்பார்க்காத வகையில் சைபர் தாக்குதல் மூலம் இஸ்ரேல் பதிலடி கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கேலண்ட் சில நாட்களுக்கு முன்பு கூறிய கருத்துகள் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. கடந்தாண்டு இஸ்ரேல்- ஹமாஸ் இடையே தொடங்கிய இந்த போர் இப்போது ஓராண்டில் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுத்தது. ஹமாஸ் மீதான தாக்குதலைக் கண்டித்து ஹிஸ்புல்லா அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. பொறுத்துப் பார்த்த இஸ்ரேல் ஒரு கட்டத்தில் ஹிஸ்புல்லா மீதும் தாக்குதலைத் தொடங்கியது. லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா மீதான தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
இது ஈரானுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இஸ்ரேல் மீது கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணை வீசி தாக்கியுள்ளது. இதில் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்ற போதிலும், இது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்தது. ஏனென்றால் ஈரான் தாக்குதலுக்குப் பழிவாங்குவோம் என இஸ்ரேலும் கூறியிருந்தது.
ஆடிப்போன ஈரான்! அசந்த நேரம் பார்த்து அடித்த இஸ்ரேல்! "சைபர் தாக்குதல்.." எந்த இடங்கள் டார்கெட்
அமெரிக்கா: இந்தத் தகவலைக் கேட்ட உடனேயே அமெரிக்க அதிபர் பைடன் நேரடியாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு கால் செய்தார். இரு தரப்புக்கும் இடையே சமரசம் செய்யும் முயற்சியிலும் இறங்கினார். ஏனென்றால் ஈரான் முக்கியமான எண்ணெய் வளம் கொண்ட நாடு. ஈரான் நாட்டின் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், கச்சா எண்ணெய் விலை உயரும். இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து அத்தியாவசிய பொருட்கள் விலையே உச்சம் தொடும். அதேபோல ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டு போட்டால் அது நிச்சயம் உலக போரை தொடங்கிவிடும்.
இதனால் இஸ்ரேல் பதிலடி கொடுக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா மிகக் கவனமாக இருந்தது. ஆனால், மீண்டும் ஒரு முறை அமெரிக்கா கோரிக்கைக்கு நேர்மாறான முடிவை இஸ்ரேல் எடுத்துள்ளது. அதாவது இன்று ஈரான் மீது சைபர் தாக்குதல் நடந்துள்ளது. ஈரானின் நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிர்வாகம் ஆகிய மூன்றையும் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
ஈரானை திக்கி திணறவைத்த இஸ்ரேல்.. நாடு முழுக்க சைபர் அட்டாக்.. அணு உலைகளுக்கும் குறி.. பதற்றம்
சைபர் தாக்குதல்: இந்த சைபர் தாக்குதலை ஈரானின் உச்ச கவுன்சில் ஆஃப் சைபர்ஸ்பேஸின் முன்னாள் செயலாளர் ஃபிரூசாபாடி உறுதி செய்துள்ளார். எரிபொருள் விநியோக உள்கட்டமைப்பு, நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து நெட்வொர்க், துறைமுகங்கள் ஆகியவை இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன் அணுசக்தி மையங்கள் கூட இந்த சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சைபர் தக்குதல் ஈரான் திணறிவிட்டது என்பதே உண்மை.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்: இஸ்ரேல் வெளிப்படையாக இந்தத் தாக்குதலை நடத்தியது தாங்கள் தான் எனச் சொல்லவில்லை என்ற போதிலும். பலரும் இஸ்ரேல் தான் இதை நடத்தியதாகக் கூறி வருகிறார்கள். இதற்கிடையே இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கேலண்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறிய தகவல்கள் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ஈரான் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்போம் என்று உறுதியளித்த கேலண்ட், "எங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். எங்கள் பதிலடி ஆபத்தானதாகவும் அதேநேரம் துல்லியமானதாகவும் இருக்கும். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் தாக்குதலை நடத்தி முடித்துவிடுவோம். அவர்கள் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளும் முன்பே பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கும்" என்றார்.
சரியாக அவர் சொல்லி சில நாட்களில் இந்த சைபர் தாக்குதல் நடந்துள்ளது. இப்படிச் சொல்லி அடிப்பது தான் இஸ்ரேல் ஸ்டைல் என்றும் இஸ்ரேல் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.
-
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications