கத்தாரில் குண்டுபோட்ட இஸ்ரேல்.. டார்க்கெட் இவர் தான்.. யார் இந்த கலில் அல் ஹயா ? பரபரப்பு தகவல்
தோஹா: இஸ்ரேல் இன்று திடீரென்று கத்தார் தலைநகர் தோஹா மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இதனை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் தலைவரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேல் குறிவைத்த கலில் அல் ஹயா யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினரை அழிக்கும் வகையில் இந்த போரை இஸ்ரேல் முன்னெடுத்து வருகிறது. இந்த போர் நிறுத்தம் தொடர்பாக அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் போர் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று திடீரென்று கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் தனது விமானப்படை விமானங்கள் மூலமாக கத்தார் தலைநகர் தோஹாவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் தோஹாவில் இஸ்ரேல் யாரை குறிவைத்தது என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த கலில் அல் ஹயா (Khalil Al-Hayya) தான். இவர் ஹமாசின் சீனியர் அதிகாரியாக உள்ளார். இவர் காசாவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்.
இப்போது தோஹோவில் இருந்து செயல்பட்டு வருகிறார். தற்போது இவருக்கு ஹமாஸ் அமைப்பில் ஆதரவு பெருகி வருகிறது. இதனால் அவர் வருங்காலத்தில் ஹமாசின் அடுத்த தலைவராக உயரலாம் என கூறப்படுகிறது.
ஹமாஸ் அமைப்பின் தலைவராக செயல்பட்ட இஸ்மாயில் ஹனியே மற்றும் யாக்யா சின்வார் ஆகியோரை கடந்த ஆண்டு இஸ்ரேல் படை தீர்த்து கட்டியது. அந்த வரிசையில் கலில் அல் ஹயாவை போட்டுத்தள்ள இஸ்ரேல் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கலில் அல் ஹயா இந்த தாக்குதலில் தப்பித்துள்ளார்.
இவருடன் மேலும் சிலர் இருந்துள்ளனர். அதில் 6 பேர் இறந்துள்ளனர். அதன்படி கலில் அல் ஹயாவின் மகன் ஹமாம் அல் ஹயா, அவரது அலுவலக இயக்குநராக செயல்பட்டு வந்த ஜிகாத் லுபத், 3 பாதுகாவலர்கள், ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரி உள்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் உறுப்பினரான சுகைல் அல் ஹிந்தி உறுதி செய்துள்ளார். மேலும் இவர்கள் அனைவரும் காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்கா முன்வைத்த பரிந்துரைகள் பற்றி ஆலோசித்து வந்தபோது இஸ்ரேல் தாக்குதலில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே தான் இந்த தாக்குதலுக்கு கத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல் கோழைத்தனமானது. சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறையை மீறும் வகையில் இந்த தாக்குதல் உள்ளது என கத்தார் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications