"இந்தியாவின் எதிரி".. வங்கதேச அரசியலையே புரட்டி போட்ட ஷபிகுர் ரஹ்மான்.. யார் இவர்?
டாக்கா: வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கட்சி வெற்றி பெற்றுள்ளது. தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தான் இந்தியாவின் எதிரியாகவும், பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்ததை எதிர்த்த கட்சியாக இருக்கும் ஜமாத் இ இஸ்லாமி எனும் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய வெற்றியை பெற்றுள்ளது. கருத்து கணிப்புகளில் பிஎன்பி கட்சிக்கு ‛டஃப் பைட்' கொடுத்த ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் தலைவர் ஷபிகுர் ரஹ்மான் பற்றிய முக்கிய விவரங்கள் வருமாறு:

அண்டை நாடான வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் ேஷக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இதனால் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கட்சியும், ஷபிஹூர் ரஹ்மானின் ஜேஇஐ எனும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிகள் இடையே தான் போட்டி நிலவியது. இதில் தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கட்சி அமோக வெற்றி பெற்றது.
வங்கதேச தேர்தல் ரிசல்ட்
மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. 151 தொகுதிகளில் ஒரு கட்சி வெற்றி பெற்றால் மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கலாம். ஆனால் ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்தார். இதனால் 299 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கட்சி 208 தொகுதிகளிலும், அவரது கூட்டணி கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன.
ஜமாத் இ இஸ்லாமி
அதேவேளையில் ஜமாத் இ இஸ்லாமி மற்றும் அதன் கூட்டணி மொத்தம் 77 இடங்களில் வெற்றி பெற்றன. இதில் ஜமாத் இ இஸ்லாமி 53 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் பெரும்பான்மை பலத்துடன் பிஎன்பி கட்சியின் தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் தான் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் தலைவர் ஷபிகுர் ரஹ்மான் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
வயது 68 - டாக்டர்
* ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் தலைவர் ஷபிகுர் ரஹ்மானுக்கு இப்போது 68 வயது ஆகிறது. இவர் அடிப்படையில் டாக்டர்.
* 1971-ல் இந்தியா உதவியுடன் வங்கதேசம் பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெற்றபோது அதனை ஜமாத் இ இஸ்லாமி எதிர்த்தது. இதனால் தொடக்க காலத்தில் தடை செய்யப்பட்டது. பிறகு தடை நீக்கப்பட்ட அரசியல் கட்சியாக மாறியது.
நம் நாட்டுக்கு எதிராக..
* ஷபிகுர் ரஹ்மானின் ஜமாத் இ இஸ்லாமி நம் நாட்டை கடுமையாக விமர்சனம் செய்து வந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் தனியாக பிரிந்தபோது அதனை எதிர்த்தது. இதனால் அந்த கட்சி ஒரு காலத்தில் "ரஷாக்கர்கள்" என முத்திரை குத்தப்பட்டது. 1971 வங்கதேச விடுதலை போரின்போது பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து செயல்பட்டதால் "ரஷாக்கர்" என்று அழைக்கப்பட்டனர். இது பாகிஸ்தான் ராணுவ ஆதரவாளர்களை குறிக்கும் சொல்லாகும்.
* ஷபிகுர் ரஹ்மான், 1984-ல் ஜமாத் இ இஸ்லாமி கட்சியில் சேர்ந்தார். 2019 நவம்பரில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் 8 வது அமீராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு 2022, 2025 ஆண்டுகளில் மீண்டும் அமீராக தேர்வு செய்யப்பட்டார்.
பிஎன்பி உடன் கூட்டணி
* ஜமாத் இ இஸ்லாமி கட்சி ேஷக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை கடுமையாக எதிர்த்து வந்தது. இப்போது பிரதமராகபோகும் தாரிக் ரஹ்மானின் தாய் மறைந்த பிரதமர் கலிதா ஜியாவின் பிஎன்பி கட்சியும் ஹசீனாவின் கட்சியை கடுமையாக எதிர்த்தது. இதனால் ஒரு காலத்தில் பிஎன்பி கட்சியுன் ஜமாத் இ இஸ்லாமி கூட்டணியில் இருந்தது. இப்போது பிஎன்பி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி தனித்தனியாக கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளன. இதில் ஜமாத் இ இஸ்லாமி எதிர்க்கட்சியாகி உள்ளது.
4 மடங்கு வரை அதிகரிப்பு
* இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ஷபிகுர் ரஹ்மான் நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் தேர்தல் குறித்த சந்தேகத்தை அவர் எழுப்பி உள்ளார். அதேவேளையில் நாடாளுமன்றத்தில் தங்களின் கட்சிக்கான பிரதிநிதித்துவம் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளதால் அவர் ஹேப்பியாகி உள்ளார்.
* ஜமாத் இ இஸ்லாமி வங்கதேச வரலாற்றில் இப்படியான வெற்றியை பெற்றது இல்லை. முதல் முறையாக 50 + இடங்களில் அந்த கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஷபிகுர் ரஹ்மான் மகிழ்ச்சியாகி உள்ளார். வங்கதேசத்தின் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படும் என்று அவர் கூறியுள்ளார்.
கொள்கையில் மாற்றம்
*ஷபிகுர் ரஹ்மானின் கட்சிக்கு நாடு முழுவதும் பரந்த செல்வாக்கு கிடையாது. குறிப்பிட்ட இடங்களில் அவரது கட்சிக்கு கூடுதல் ஆதரவு உள்ளது. குறிப்பாக நம் நாட்டின் மேற்கு வங்க எல்லையோர பகுதிகளில் அவரது கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது.
* தேர்தல் பிரசாரத்தின்போது தனது கட்சியின் பழைமைவாத கொள்கைகளை ஷபிகுர் ரஹ்மான் கைவிட்டார். இளைஞர்களை கவரும் வகையிலும் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். இது தேர்தலில் பிளஸ் பாயிண்ட்டாக அமைந்தது. மேலும் வங்கதேசம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு இல்லை. இங்கு இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இதனால் தொழில்நுட்பம் சார்ந்த விவசாயம், உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது பற்றி விளக்கி பேசினார். 2040-க்குள் வங்கதேச பொருளாதாரத்தை 2 டிரில்லியன் டாலர் பொருளாதார மாற்றுவோம் என்று நம்பிக்கை அளித்தார்.இது பலரையும் கவர்ந்தது.
இந்தியா பற்றிய நிலைப்பாடு
* இதன்மூலம் தற்போது ஷபிகுர் ரஹ்மான் வழியாக ஜமாத் இ இஸ்லாமி வங்கதேச அரசியலில் புதிய மாற்று சக்தியாக மாறி உள்ளது. இவரிடம் தேர்தலுக்கு முன்பு அதிகாரத்துக்கு வந்தால் இந்தியாவுடனா உறவு எப்படி இருக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு ஷபிகுர் ரஹ்மான், ‛கலர்புல்' ஆக இருக்கும் என்று கூறினார். அதேவேளையில் ேஷக் ஹசீனாவை நாடு கடத்துவது, எல்லை தாண்டிய நதி நீர் பங்கீடு உள்ளிட்ட பிரச்சனைகளில் தீர்வு காண இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
* "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுடனான உறவு பரஸ்பர மரியாதை அடிப்படையில் அமையும். மக்கள் வசிப்பிடத்தை மாற்றலாம் அண்டை நாட்டவரை மாற்ற முடியாது. எங்கள் அண்டை நாட்டை மதிக்க வேண்டும், அதே மரியாதையை எதிர்பார்க்கிறோம். இந்தியா, வங்கதேசத்தை விட 26 மடங்கு பெரிய நாடாகும். எங்கள் சிறிய நிலப்பரப்பு மற்றும் அதன் சுமார் 180 மில்லியன் மக்களின் இருப்பையும் அவர்கள் மதிக்க வேண்டும். இது எங்கள் கோரிக்கை. இது நடந்தால், இரு நாடுகளும் உலக அரங்கில் பரஸ்பர மரியாதையையும் கொண்டு வரும்" என்று கூறினார்.
பாகிஸ்தான் ஆதரவில்?
* அதேவேளையில் தேசிய பாதுகாப்பு கொள்கை மற்றும் புதிய இராணுவ கோட்பாடு உள்ளிட்டவை குறித்த அவரது நிலைப்பாடு நம் நாட்டுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தற்போது ஜமாத் இ இஸ்லாமி பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளதாக வங்கதேசத்தில் ஒரு தரப்பு மக்களிடம் அச்சம் உள்ளது.
* மேலும் நம் நாடு அனைவருடன் நட்பு பாராட்டி வருகிறது. இதனால் மத்திய அரசும் ஷபிகுர் ரஹ்மானை அரவணைக்க தொடங்கி உள்ளது. டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. மாறாக துணைத் தலைவர் மியா குலாம் பர்வரை அனுப்பி வைத்தார். இந்நிலையில் தான் தற்போது ஷபிகுர் ரஹ்மானின் ஜமாத் இ இஸ்லாமி எதிர்க்கட்சியாக செயல்பட உள்ளது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications