ரஷ்ய ராணுவத்தை கவிழ்க்கும் வாக்னர் குழு தலைவன்? யார் இந்த புதினின் ‛செல்ல’சமையல்காரர்! பகீர் தகவல்
மாஸ்கோ: உக்ரைன் போருக்கு நடுவே கொடூரமான தாக்குதலுக்கு பெயர் பெற்ற ரஷ்யாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு சொந்த நாட்டுக்கு எதிராக திரும்பி உள்ளது. ரஷ்யாவின் ராணுவத்தை கவிழ்ப்பாக முழுங்கி நடவடிக்கையை வாக்னர் குழு தொடங்கி உள்ள நிலையில் அதன் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஸ் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஷ்யா ஒரு காலத்தில் சோவியத் யூனியன் என அழைக்கப்பட்டது. அதன்பிறகு சோவியத் யூனியனில் இருந்து பல நாடுகள் பிரிந்தன. அதில் ஒன்று தான் உக்ரைன். இந்த நாடு ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் இருநாடுகள் இடையே எல்லை பிரச்சனை நீடித்து வந்தது.

இதனால் ரஷ்யாவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேர முயன்றது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தான் போர் உருவாகி உள்ளது. அதாவது கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.
ரஷ்யாவுக்கு புது பிரச்சனை: இந்த போர் தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனின் பதில் தாக்குதலால் ரஷ்யா திணறி வருகிறது. இது ஒருபுறம் இருக்க உக்ரைன் மீதான போர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதற்கிடையே தான் தற்போது ரஷ்யா இன்னொரு பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது.
வாக்னர் குழு எதிர்ப்பு: அது என்னவென்றால் ரஷ்யாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வாக்னர் குழு அந்த நாட்டுக்கு எதிராக திரும்பி உள்ளது. தனியார் ராணுவம் போல் செயல்பட்டு வரும் இந்த குழு என்பது ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுக்கு மிகவும் நெருக்கமானது. ரஷ்ய ராணுவம் செய்யமுடியாத சில சட்டவிரோத செயல்களை விளாடிமிர் புதின் இந்த குழு மூலம் நிறைவேற்றி வருவதாக கூறப்படுகிறது. இதன் ஒருபகுதியாக தான் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையில் இந்த வாக்னர் குழு ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கியது.
ராணுவ நடவடிக்கை: இதனை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மோப்பம் பிடித்தன. குறிப்பாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் புதினை வாக்னர் குழு மூலம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளதாக அந்த நாடுகள் குற்றம்சாட்டின. இது ரஷ்யாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இதையடுத்து வாக்னர் குழுவின் செயல்பாடுகளை புதின் கட்டுப்படுத்தினார். ரஷ்யாவின் ராணுவத்தின் மூலம் வாக்னர் குழுவினர் செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டன.
அடக்குமுறை: இதன் ஒருபகுதியாக வாக்னர் குழு தலைவராக உள்ள யெவ்ஜெனி ப்ரிகோஸ் மீது ரஷ்ய ராணுவம் அடக்குமுறைகளை செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனால் யெவ்ஜெனி ப்ரிகோஸ் கொதித்து எழுந்துள்ளார். மேலும் ரஷ்யாவின் ராணுவ தலைமையை கவிழ்ப்பதாக அவர் உறுதியேற்று ரஷ்ய அரசுக்கு எதிராக செயல்பட தொடங்கி உள்ளார்.
ஆடியோ: இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ஆடியோ பதிவில் ‛‛நாங்கள் 25,000 பேர் இருக்கிறோம். நாங்கள் சாவுக்கு தயாராக இருக்கிறோம். ரஷ்யாவின் ராணுவத் தலைமையை வீழ்த்துவோம். வழியில் எந்தத் தடை வந்தாலும் எங்கள் பாணியில் துவம்சம் செய்வோம். ஏற்கனவே ரஷ்ய ராணுவத்தை தாக்கியுள்ளோம். எங்கள் படைகள் ரஷ்யாவின் தெற்கே உள்ள ரோஸ்டோவ் பகுதிக்குள் நுழைந்துவிட்டது'' எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் அலர்ட்டான விளாடிமிர் புதின் ரஷ்யா தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட பல இடங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
யெவ்ஜெனி ப்ரிகோஸ்: இந்நிலையில் தான் வாக்னர் குழுவின் தலைவராக உள்ள யெவ்ஜெனி ப்ரிகோஸ் அதிபர் விளாடிமிர் புதினுக்கு மிகவும் நெருக்கமானவர் எனவும், அவரது ‛செல்ல சமையல்காரர்' என்ற பெயரை பெற்றிருந்த தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் ரஷ்யாவை அலறவிடும் யெவ்ஜெனி ப்ரிகோஸ் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:
ஒரே நகரை சேர்ந்தவர்கள்: ரஷ்யாவின் ராணுவத்துக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள யெவ்ஜெனி ப்ரிகோஸ் ரஷ்யாவில் 1961ல் பிறந்தார். இவருக்கும் அதிபர் விளாடிமிர் புதினுக்கும் 1990ல் இருந்து பழக்கம் உள்ளது. மேலும் யெவ்ஜெனி ப்ரிகோசும், புதினும் ஒரே நகரை சேர்ந்தவர். இவர்கள் 2 பேரும் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை சேர்ந்தவர். இது அவர்கள் இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரித்தது.
சிறையில் அடைப்பு: யெவ்ஜெனி ப்ரிகோஸ் கடந்த 1979 ல் தனது 18 வது வயதில் திருட்டு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். அதன்பிறகு இன்னொரு வழக்கில் 13 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். அதன்பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தவர் ஓட்டல் தொழிலை செய்ய தொடங்கினர். சொந்த நகரான பல நட்சத்திர உணவகங்களை திறந்தார். இந்த உணவகம் மூலம் அவருக்கு பெரிய பெரிய நபர்கள் பழக்கமாகின.
செல்ல சமையல்காரர்: இந்த பழக்கத்தின் காரணமாக அவர் கேட்டரிங் வணிகத்துக்குள் நுழைந்தார். கேட்டரிங் தொழிலில் ரஷ்ய அரசின் ஒப்பந்தங்களை பெற்றார். இவருக்கு அதிக ஒப்பபந்தங்கள் கிடைத்தன. இதனால் ‛விளாடிமிர் புதினின் செல்ல சமையல்காரர்' என்ற புனைப்பெயரையும் பெற்றார். தற்போது 62 வயதாகும் யெவ்ஜெனி ப்ரிகோஸ் தனியார் ராணுவம் அல்லது கூலிப்படை என அழைக்கப்படும் வாக்னர் குழுவின் தலைவராக உள்ளார். இந்த படையில் தற்போது 25 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
நடவடிக்கை ஏன்: உக்ரைன் போர் நடவடிக்கையின் யெவ்ஜெனி ப்ரிகோஸ் தலைமையிலான வாக்னர் குழு ரஷ்யாவுக்கு உதவியது. இதில் யெவ்ஜெனி ப்ரிகோஸின் புகழ் ரஷ்யாவில் அதிகரித்தது. இதையடுத்து தான் மேற்குலக நாடுகளின் குற்றச்சாட்டை காரணமாக பயன்படுத்தி விளாடிமிர் புதின் தனது ராணுவ படை மூலம் அவரை முடக்கி உள்ளதாக கூறப்படும் நிலையில் தான் தற்போது அவரது படை கொதித்து எழுந்து கிளர்ச்சியை துவங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரஷ்யாவில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications