இஸ்ரேல் உளவுப்படை அத்துப்படி! சந்தேகம் வந்தாலே கொலை! இடையில் ஹோட்டல் பாய்ஸ் வேற! யார் இந்த சின்வார்
டெல் அவிவ்: ஹமாஸ் படையின் தலைவராக இருந்த சின்வாரை இஸ்ரேல் ராணுவம் ஒரு வழியாகக் கொன்றுள்ளது. அதை இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹமாஸ் படையைத் தனது கன்ட்ரோலில் வைத்திருந்த இந்த சின்வார் யார்... இவரது பின்னணி என்ன.. இஸ்ரேலை இத்தனை ஆண்டுகள் இவரால் எப்படி ஏமாற்ற முடிந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சின்வார் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது. அவர் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் இதனால் அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

இருப்பினும், அதை யாரும் உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம் அப்போதே பல சர்வதேச ஊடகங்கள் சின்வார் உயிருடன் இருப்பதாகவே தகவல் வெளியானது.
காசா மெட்ரோ: காசா பகுதி முழுக்க சுரங்கத்தைத் தோன்றி அதில் சின்வார் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறப்பட்டது. "காசா மெட்ரோ" என்றும் அழைக்கப்படும் அளவுக்கு மிகவும் விரிவான சுரங்க கட்டமைப்பை அமைத்து, அதில் பாதுகாப்பாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இப்படி காசாவை தனது கோட்டையாக மாற்றி வைத்து இருந்த சின்வாரை தான் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இஸ்ரேல் காலி செய்துள்ளது.
அதேநேரம் இஸ்ரேலுக்கு இந்த மிஷன் அவ்வளவு ஈஸியாக எல்லாம் இல்லை. ஏனென்றால் சுமார் 22 ஆண்டுகள் இஸ்ரேல் சிறையில் இருந்த சின்வாருக்கு இஸ்ரேல் ராணுவ மற்றும் அவர்களின் பாதுகாப்பு அமைப்புகள் எப்படிச் செயல்படும் என்பது குறித்த தெளிவான புரிதல் இருந்தது. இதன் காரணமாகவே அவரால் இஸ்ரேல் ராணுவத்திடம் இருந்து மிக ஈஸியாக தப்பிக்க முடிந்தது.
யார் இந்த சின்வார்: தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் உள்ள அகதிகள் முகாமில் 1962ம் ஆண்டில் சின்வார் பிறந்தார். அவரது குழந்தைப் பருவம் முழுக்க அகதிகள் முகாமிலேயே இருந்தது. அப்போதே அவர் பாலஸ்தீன இயக்கத்தில் தீவிரமாக இருந்தார். இதன் காரணமாக 1982 முதல் பல முறை அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இதனால் அவர் மொத்தம் 22 ஆண்டுகள் சிறையிலேயே இருக்க வேண்டி இருந்தது.
சிறை: இஸ்ரேல் ராணுவம் குறித்தும் அவர்கள் செயல்படும் விதம் குறித்தும் இந்த காலகட்டத்தில் தான் சின்வார் தெரிந்துகொண்டார். மேலும், இந்த சிறைவாசமும், காசாவின் அகதிகள் முகாம்களில் இருந்த குழந்தைப் பருவமும் தான் சின்வாருக்கு பாலஸ்தீன தேசம் குறித்த எண்ணத்தை வலுவாக விதைத்தது. கடந்த 2011ம் ஆண்டு காசாவில் கடத்தப்பட்ட ஒரு இஸ்ரேல் வீரருக்காக, சின்வார் உட்பட இஸ்ரேலிய காவலில் இருந்த 1,027 கைதிகளை விடுவிக்கப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையை நடத்தியதே சிறையில் கைதிகளில் ஒருவராக இருந்த சின்வார் தான்.
இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்த போதே இஸ்ரேல் காசாவில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த அதில் பல ஆயிரம் பாலஸ்தீனியர்களின் மரணத்திற்கு வழிவகுத்தது. அதன் பிறகே ஒரு வழியாக சிறையில் இருந்து வெளியே வந்தார். ஹமாஸ் இயக்கத்தின் தலைவராக உருவெடுத்தார். அதேநேரம் ஹமாஸ் இயக்கத்தை இவர் நடத்திய விதம் பல நேரங்களில் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.
சந்தேகம் வந்தாலே கொலை: இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகச் சந்தேகித்து சுமார் 10க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை சின்வார் சித்திரவதை செய்து கொன்றார். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் சர்ச்சையானது. கான் யூனிஸின் கொலைகாரன் என்ற பெயரையும் பெற்றார். இது போன்ற கொடூர காரணங்களால் காசா மக்களில் சிலர் அவருக்கு எதிராகத் திரும்பினர். அவர்களையும் குறிவைத்து காலி செய்தார் சின்வார்.
ஹமாஸ் படையிலும் கூட அனைவரும் சின்வார் பின்னால் வரவில்லை. ஹமாஸுக்குள் கூட சின்வாரின் குழுவுக்கும் ஹோட்டல் பாய்ஸ் எனச் சொல்லப்படும் குழுவுக்கும் இடையே பிளவு இருந்தது. காசாவில் இருக்கும் இஸ்ரேல் மக்களை அகற்ற வன்முறை தான் ஒரே வழி என்று சின்வார் தலைமையிலான ஹமாஸ் பிரிவு நம்பியது.
ஹோட்டல் பாய்ஸ்: அதேநேரம், ஹனியே என்ற மற்றொரு ஹமாஸ் தலைவர் பெரியளவில் வன்முறையை ஆதரிக்கவில்லை. ஓரளவுக்கு வன்முறை ஓகே என்றாலும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வை எட்ட முடியும் என்று அவர் நம்பினார். இந்த கேங் கத்தாரின் தோஹாவில் இருந்து செயல்பட்டது. அவர்கள் ஹோட்டல்களில் வசித்ததால் இந்த கேங்கை ஹோட்டல் பாய்ஸ் என்றே சின்வார் குழு அழைத்தது. கடந்தாண்டு அக். 7ம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடந்த தாக்குதலே இந்த வன்முறைக்குக் காரணம். அந்தத் தாக்குதலைக் கூட இந்த கத்தார் பிரிவு எதிர்த்ததாகவே கூறப்படுகிறது.
முடியவில்லை: கடந்த ஜூலை மாதம் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இந்த இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட நிலையில், ஹமாஸின் மொத்த கன்ட்ரோலும் சின்வார் வசம் வந்தது. அவர் காசாவின் சுரங்கத்தைப் பயன்படுத்தியே இத்தனை காலம் இஸ்ரேலை ஏமாற்றி வந்தார். மேலும், எந்தவொரு எலக்ட்ரானிக் சாதனங்களையும் அவர் பயன்படுத்தாமல் இருந்தார். இஸ்ரேல் ராணுவம் எப்படி யோசிக்கும் என்பதை அவர் தெளிவாகத் தெரிந்து வைத்து இருந்தார்.
இருப்பினும், இத்தனை பாதுகாப்பாக இருந்தாலும் சின்வார் இருப்பிடத்தைக் கண்டறிந்து அவரையும் கொன்றுள்ளது இஸ்ரேல். இது இஸ்ரேலுக்கு பெரிய வெற்றி என்ற போதிலும் சின்வார் மரணத்தால் இஸ்ரேல் ஹமாஸ் போர் முடிவுக்கு வந்துவிடாது. அது முடிய இன்னும் கூட சில மாதங்கள் ஆகலாம் என்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications