பாகிஸ்தானை பந்தாடும் இந்தியா.. உதவாமல் ஒதுங்கி நிற்கும் சீனா.. ஏன் தெரியுமா? டிரம்ப் போட்ட போடு

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடியை நம் நாடு கொடுத்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் நிலைக்குலைந்து போய் உள்ளது. பாகிஸ்தான் நம்மிடம் இப்படி அடி வாங்கினாலும் கூட அந்த நாட்டின் நெருங்கிய நட்பு நாடான சீனா இன்னும் உதவிக்கு செல்லவில்லை. இது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன் கிழமை பாகிஸ்தானில் உள்ள பயங்கராத அமைப்புகளின் 9 முகாம்களை ஏவுகணை வீசி நாம் அழித்தோம். அதன்பிறகு நம்மை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் சீண்டி வருகிறது.

why-china-did-not-help-to-pakistan-against-india-full-details-here

ஏவுகணை, ட்ரோன், போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சிக்கிறது. இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு நம் ராணுவம் பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது.

பாகிஸ்தானை புரட்டியெடுக்கும் இந்தியா

இதன் தொடர்ச்சியாக இன்று பாகிஸ்தானின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் 3 விமானப்படை தளங்கள், ரேடார் அமைப்புகள், வான்வெளி பாதுகாப்புக்கான சிஸ்டம் உள்ளிட்டவற்றை ஏவுகணை, ட்ரோன் மூலம் அடித்து நொறுக்கி உள்ளது நம் நாடு.

நம் நாட்டை தாக்க முயலும்போது அதனை நம் பாதுகாப்பு துறை உபகரணங்கள் சரியாக கண்டுபிடித்து வானிலேயே அழிப்பது ஒரு பக்கம், மறுபக்கம் பதிலடியாக பாகிஸ்தானில் ஏவுகணை, ட்ரோனை வைத்த அடிப்பது உள்ளிட்டவற்றால் பாகிஸ்தான் நிலை குலைந்து போய் உள்ளது.

உதவிக்கு வராத சீனா

இப்படி பாகிஸ்தான் நம்மிடம் அடி வாங்கினாலும் கூட அதன் நெருங்கிய நட்பு நாடான சீனா இன்னும் உதவிக்கு செல்லவில்லை. குறிப்பாக பாகிஸ்தானும், சீனாவும் ராணுவம், வர்த்தகம் உள்பட பல துறைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால் பாகிஸ்தான் தான் சீனாவிடம் இருந்து அதிகப்படியான ராணுவ தளவாடங்களை வாங்கி வருகிறது. பாகிஸ்தானில் பயன்படுத்தப்படும் ராணுவ தளவாடங்களில் சுமார் 80 சதவீதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இதில் போர் விமானங்கள், வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம், நீர்மூழ்கி கப்பல்கள், பீரங்கிகள், ஏவுகணைகள் உள்ளிட்டவை அடங்கும்.

அதுமட்டுமின்றி சீனாவும், பாகிஸ்தானும் சேர்ந்து ஜேஎப் - 17 தண்டர் ரக போர் விமானம், கே 8 காரகோரூம் அட்வான்ஸ்ட்ஸ் பயிற்சி விமானம் மற்றும் போர்க்கப்பல்களை இணைந்து தயாரித்து வருகிறது. இதுதவிர விண்வெளி தொழில்நுட்பம், சேட்டிலைட் நேவிகேஷன், ஏவுகணை பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில் இருநாடுகளும் சேர்ந்து செயல்பட்டு வருகின்றன. இப்படி ராணுவ துறையில் பிரிக்க முடியாத வகையில் பாகிஸ்தானும், சீனாவும் ஒன்றிணைந்துள்ளது. ஆனால் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் நம்மிடம் சம்மட்டி அடி வாங்கி வரும் நிலையில் சீனா இன்னும் உதவிக்கு செல்லவில்லை.

காரணம் என்ன?

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சீனா பாகிஸ்தானுக்கு விற்ற ய ஏவுகணைகள், வான்வெளி தடுப்பு சிஸ்டம்களை நம் நாடு துவம்சம் செய்து பாகிஸ்தான் அட்டாக் செய்து வருகிறது. ஆனாலும் சீனா இன்னும் மவுனம் காக்கிறது.

இது பலருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் இந்தியா தாக்கும் நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செல்லவில்லை என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

டிரம்ப் தான் காரணம்

இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான். அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு அதிகப்படியான வரிகளை விதித்தார். பல கட்டங்களாக 145 சதவீதம் வரை சீனாவின் பொருட்களுக்கு டொனால்ட் டிரம்ப் வரி விதித்தார். இதற்கு போட்டியாக சீனா அமெரிக்காவின் பொருட்களுக்கு 125 சதவீத வரியை விதித்தது.

இதனால் இருநாடுகள் இடையே கடும் வர்த்தக போர் ஏற்பட்டது. இதனால் அமெரிக்காவில் சீனா தனது பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பிரச்சனையை எதிர்கொண்டது. இது சீனாவின் வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளது.

இந்திய மார்க்கெட்டுக்கு குறி

இந்த சமயத்தில் சீனாவுக்கு நம் நாடு மிகவும் முக்கியம். அமெரிக்காவுக்கு பதில் நம் நாட்டில் பொருட்களை சீனாவால் எளிதாக விற்க முடியும். இதனால் தான் டொனால்ட் டிரம்ப் வந்ததில் இருந்து சீனா மோதலை மறந்து நம் நாட்டுடன் கொஞ்சம் காட்டி வருகிறது. இப்படியான சூழலில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தால் அது நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையே இன்னும் பிரச்சனையை அதிகப்படுத்தும்.

அதுமட்டுமின்றி சீனாவின் பொருட்களுக்கு நம் நாடு தடை விதிக்கும் சூழல் நேரலாம் என்பது மட்டுமின்றி அமெரிக்காவுக்கு மாற்றாக இந்திய மார்க்கெட்டை பிடிக்க முடியாத சூழல் ஏற்படும். இதனால் மனதில் வைத்து தான் சீனா, இன்னும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கவில்லை.

டிரம்ப் வரி குறைத்தால்?

மாறாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் கவலையளிக்கிறது. இருநாடுகளும் மோதலை கைவிட்டு பேச்சுவார்த்தையில் தீர்வு காண வேண்டும் என்று மட்டுமே சீனா சொல்லி வருகிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கவில்லை. இப்போது சிலருக்கு ஒரு சந்தேகம் வரலால். டொனல்ட் டிரம்ப் தான் சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரியை 145 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக குறைப்பதாக கூறியுள்ளாரே. இந்த வரியை குறைத்தால் சீனா பாகிஸ்தானுக்கு உதவி செல்லுமே என்ற கேள்வி உதிக்கலாம்.

ஆனால் உண்மை என்னவென்றால் டொனால்ட் டிரம்பை நம்ப முடியாது. அவர் எப்போது எந்த முடிவை எடுக்கிறார் என்பது புரியாத விஷயமாகும். அதேவேளையில் சீனா என்றாலே டொனால்ட் டிரம்ப்புக்கு பிடிக்காத நிலை தான் உள்ளது. அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா நம்பர் ஒன் இடத்துக்கு வர துடிக்கிறது. இது டிரம்புக்கு பிடிக்கவில்லை. இதனை சீனாவும் உணர்ந்து வைத்துள்ளது. இதனால் சீனாவும், அமெரிக்காவை முழுவதுமாக நம்பாது. இப்போது வரியை குறைக்கும் அமெரிக்கா அடுத்து எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம் என்பதால் சீனா நம் இந்திய மார்க்கெட்டை மிகவும் முக்கியமாக பார்க்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

துருக்கி - அஜர்பைஜான் மட்டுமே

இதனால் சீனா கைவிட்ட நிலையில் பாகிஸ்தான் இனி தனது நெருங்கிய நட்பு நாடுகளான துருக்கி மற்றும் அஜர்பைஜானை நம்பி தான் நம்மை சீண்ட வேண்டும். அந்த 2 நாடுகளும் பாகிஸ்தானில் இருந்து அதிக தூரத்தில் உள்ளதால் நேரடியாக உடனடியாக உதவி செய்ய முடியாது. இதனால் நம் நாட்டின் தாக்குதல் என்பது இன்னும் பாகிஸ்தானுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களை போட்டு வெளுத்து வாங்கலாம் என்பதில் ஐயமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+