இந்தியாவை பார்த்து கதறும் பாகிஸ்தான்! 50% தள்ளுபடியில் அதிநவீன ஜெட்களை தரும் சீனா.. என்ன காரணம்!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் மோதல் வெடித்தது. பாகிஸ்தானிடம் சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்பு, சீன விமானங்கள் இருந்தாலும் கூட அதை மிக ஈஸியாக இந்தியா காலி செய்தது. இந்தச் சூழலில் பாகிஸ்தானுக்குத் தனது அதிநவீன 30 J-35A ரக போர் விமானங்களை மிகக் குறைந்த விலையில் விரைவாக வழங்கச் சீனா ஒப்புக்கொண்டுள்ளது. இது சீன சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்திய நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டிருந்தது. சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்பு, சீன விமானங்களைப் பாகிஸ்தான் வைத்திருந்த போதிலும் அதை மிக ஈஸியாக இந்தியா காலி செய்தது. இது சீனாவின் ஆயுதங்களின் திறன்களைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இருந்தது.

Why China s 50 Discounted J-35A Jet Sale to Pakistan that sparked Citizen Outrage

சீனா முடிவு

இதற்கிடையே பாகிஸ்தானுக்கு தனது அதிநவீன 30 J-35A ரக போர் விமானங்களை மிகக் குறைந்த விலையில் விரைவாக வழங்கச் சீனா ஒப்புக்கொண்டுள்ளது. இது சீன சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தைச் சீனா ஏற்றுமதி செய்வது இதுவே முதல் முறை என்பதால், இந்த நடவடிக்கை ஆபத்தானது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதுவும் மிகக் குறைந்த விலையில், டிஸ்கவுண்ட் எல்லாம் கொடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ஒரு ட்விஸ்ட்

வழக்கமாக இதுபோல ஒப்பந்தம் போடப்பட்டாலும் டெலிவரி தொடங்கி சில ஆண்டுகளாவது ஆகும். ஆனால் இந்த J-35A ரக போர் விமானங்களை இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதலே டெலிவரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இதில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். இந்த ஜெட் விமானங்கள் இன்னும் சோதனையில் தான் உள்ளன. முழுமையாகச் சோதனையை முடியவில்லை.

அந்த விமானம் இன்னும் சீன விமானப் படையிலேயே சேர்க்கப்படாத நிலையில், அது பாகிஸ்தானுக்கு வழங்கப்படுகிறது. உண்மையில் கள சூழல்களில் விமானம் எப்படி இயங்குகிறது என்பதைக் கண்டறியக் கூட பாகிஸ்தானுக்குச் சீனா ஜெட்களை வழங்க முடிவு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும் சீனாவில் இந்த நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இதற்கு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

சீன நெட்டிசன்கள்

சீனாவைச் சேர்ந்த நெட்டிசன் ஒருவர், "பாகிஸ்தான் நிறைய போலியான செய்திகளைப் பரப்புகிறது. அதுபோல ஒரு போலி செய்திதான் இது என நினைக்கிறேன். அவர்கள் இன்னும் J-10 ரக விமானங்களுக்கே பணம் செலுத்தவில்லை. அப்போது எப்படி இந்த விமானத்தை வாங்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே சீனாவிலிருந்து வாங்கப்பட்ட J-10C போர் விமானங்களுக்கான நிலுவைத் தொகையைப் பாகிஸ்தான் இன்னும் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் சீனாவின் அதிநவீன ஜெட் விமானங்களைப் பாகிஸ்தான் வாங்குகிறதா இல்லை என்பதில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. இதனால் நெட்டிசன்களிடையே குழப்பம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

மற்றொரு நெட்டிசன், "சீனா இன்னும் சொந்த ராணுவத்திற்கே J-35 விமானங்களை உற்பத்தி செய்யவில்லை. அதை எப்படி பாகிஸ்தானுக்கு கொடுக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். சில யூசர்கள் இதை வெளிப்படையாகவே விமர்சித்துள்ளனர்.

விமர்சனம்

விமானத்தின் தயார்நிலை ஒருபுறம் இருக்க, இந்த அறிவிப்பு வெளியான நேரமும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்த சில நாட்களில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. எல்லை தாண்டிய பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்குவதாக இந்தியாவிலும் விமர்சனம் எழுந்துள்ளது.

காரணம்

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு ஏற்பட்ட மோதலில் சீனாவின் ஆயுத அமைப்பால் இந்திய பாதுகாப்புப் படையை நிறுத்த முடியாமல் போனது. அதை மறைக்கவே இதுபோல அதிநவீன ராணுவ விமானங்களைப் பாகிஸ்தானுக்குச் சீனா வழங்குவதாகவும் கூட விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னதாக சமீபத்தில் தான் அமெரிக்காவிடமும் சென்று, இந்தியாவைச் சமாளிக்க அதிநவீன ராணுவ ஆயுதங்களை வழங்குமாறு பாகிஸ்தான் குழு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+