என்ன சொல்றீங்க.. நைட் 10 மணிக்கு மேல் பாத்ரூம் கூட போகக் கூடாதா! இதெல்லாம் ரொம்ப தான் ஓவர்! வினோதம்
சுவிட்சர்லாந்து: உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பல வினோதமான விதிகள் இருக்கும். ஆனால், இப்படியொரு வித்தியாசமான ரூல்ஸை நீங்கள் பார்த்திருக்க முடியாது.
நம்ம ஊரில் சாதாரணமாக இருக்கும் விதிகளையே இங்குப் பலரும் முறையாகப் பின்பற்ற மாட்டார்கள். அதைக் கேட்டால் பக்கம் பக்கமாக வசனம் மட்டுமே பேசுவார்கள்.
ஆனால் பல்வேறு உலக நாடுகளிலும் பல வினோதமான விதிமுறைகள் இருக்கத் தான் செய்கிறது. அதையும் அவர்கள் முறையாகவே பின்பற்றுகிறார்கள்.

சுவிட்சர்லாந்து
அதிலும் சில நாடுகளில் இருக்கும் ரூல்ஸைகளை கேட்டால் நமக்கு ஒரு நொடி தலையே சுற்றிவிடும். அப்படிப்பட்ட விதிகளை எல்லாம் அவர்கள் வைத்திருப்பார்கள். அப்படியொரு விதியை தான் சுவிட்சர்லாந்து கொண்டுள்ளது. சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்று சுவிட்சர்லாந்து. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அங்குப் படையெடுத்து வருகிறார்கள்.

வினோதம்
இருப்பினும், அங்கு இருக்கும் சில விதிகள் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். அப்படி இருக்கும் ஒரு வினோத விதி தான் டாய்லெட் ரூல்ஸ். எந்தவொரு நாட்டிலும் டாய்டெல்லை பயன்படுத்த எந்தவொரு கட்டுப்பாடும் இருக்காது என்றே நம்மில் பலரும் நினைத்திருப்போம். நள்ளிரவு நேரமானாலும் சரி.. அதிகாலை நேரமானாலும் சரி. இதற்கெல்லாம் கட்டுப்பாடு இருக்காது என்றே நினைத்திருப்பீர்கள்.

டாய்லெட்
ஆனால், உண்மையில் சுவிட்சர்லாந்தில் டாய்லெட்டை யூஸ் செய்யவும் கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது அங்கு இரவு 10 மணிக்கு மேல் யாரும் டாய்லெட் ப்ளஷ் செய்ய கூடாதாம். அங்கு இரு வீடுகளுக்கும் இடையேயான சுவர்கள் மெல்லியதாக இருக்கும் என்பதால் டாய்லெட் ப்ளஷ் செய்யும் சத்தத்தால் அருகில் இருப்பவர்களின் தூக்கம் கலையலாம் என்பதால் இந்த விதி. காலை 7 மணி வரை கூட அங்கு டாய்லெட் ப்ளஷ் செய்யக் கூடாது.

குளிக்கவும் கூடாதாம்
டாய்லெட் மட்டுமின்றி இரவு நேரங்களில் அங்குள்ளவர்கள் குளிப்பதையும் தவிர்த்துவிடுவார்கள். நமக்குத் தான் இது மிகவும் வினோதமாக இருக்கும். ஆனால், அங்குள்ள மக்கள் அனைவருமே இதை முறையாகப் பின்பற்றுகிறார்கள். சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கும் எல்லா பகுதிகளிலும் அவர்கள் இந்த விதியை பின்பற்றுகிறார்கள். சுற்றுலாப் பயணிகளுக்குத் தான் இது ரொம்பவே புதிதாக இருக்கும்.

அரசு விதி இல்லை
இந்த ரூல்ஸ் அரசு அமல்படுத்திய விதி இல்லை. அதாவது அங்கு டாய்லெட்டை நள்ளிரவு நேரத்தில் பயன்படுத்தினால், யாரும் உங்களை வந்து கைது செய்துவிட்டு எல்லாம் செல்ல மாட்டார்கள். அந்நாட்டு மக்களே அருகில் உள்ளவர்களின் தூக்கத்தைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக இந்த ரூல்ஸ் பின்பற்றுகிறார்கள். நீங்கள் போய் அங்கு இரவில் டாய்லெட்டை பயன்படுத்தலாம். ஆனால் இதை அங்குள்ளவர்கள் மிகவும் வினோதமாகவே பார்ப்பார்கள்.

வினோதம்
சுவிட்சர்லாந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் கூட இப்படி ஏகப்பட்ட வினோதமான ரூல்ஸ் ஏகப்பட்டது இருக்கிறது. தாய்லாந்து நாட்டில் சட்டையில்லாமல் காரை ஓட்டக் கூடாது. நியூசிலாந்து போன்ற நாடுகளில் விலங்குகளிடம் இருந்து பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுவதால் அதற்காகவும் கூட தனியாக வரியை விதிக்கிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications