உள்ளாடையை கழற்றி வேலியில் தொங்கவிடும் பெண்கள்! நியூசிலாந்தில் வினோத பழக்கம்.. என்ன காரணம் தெரியுமா
வெலிங்டன்: நியூசிலாந்தின் சென்ட்ரல் ஒடாகோவில் அமைந்துள்ள கார்டோனா பகுதியில் பெண்கள் தங்களின் உள்ளாடைகளை கழற்றி வேலியில் விட்டு செல்வதை பழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அந்த வேலி முழுவதும் பெண்களின் உள்ளாடைகளாக இருக்கும் நிலையில் அதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு நாடுகளிலும் வசிக்கும் மக்கள் வெவ்வேறு வகையான பழக்க வழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். நம் நாட்டை எடுத்து கொண்டாலும் கூட காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு மாநிலங்கள் மட்டுமின்றி மாவட்ட வாரியாக பொதுமக்களின் கலாசாரம், பண்பாடு, விழா கொண்டாடும் முறைகளில் பல மாற்றங்கள் என்பது இருந்து வருகிறது.

அந்த வகையில் நியூசிலாந்து நாட்டிலும் ஒரு வினோத பழக்கத்தை பெண்கள் பின்பற்றி வருகின்றனர். அதாவது அங்கு நியூசிலாந்தின் சென்ட்ரல் ஒடாகோவின் அருகே உள்ள கார்டோனா பகுதியில் செல்லும் பெண்கள் தங்களின் உள்ளாடையை (Bra) கழற்றி அங்குள்ள வேலியில் விட்டு செல்லும் பழக்கம் உள்ளது.
வெடிக்கும் 3ம் உலகப்போர்? அணுகுண்டு வீச இடம் குறித்த ரஷ்யா! நடுங்கும் உக்ரைன் - அமெரிக்கா
அந்த பகுதியில் செல்லும் சாலையையொட்டி இந்த வேலி அமைந்துள்ளதால் தினம் தினம் அங்கு விட்டு செல்லப்படும் உள்ளாடைகளின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது அந்த வேலி என்பது பிரா வேலி என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அதிகமான பெண்கள் அங்கு சென்று வருவதால் அது சுற்றுலாதலமாக மாறிப்போய் உள்ளது.
இதனால் முன்பை விட இப்போது அதிகமானவர்கள் அங்கு சென்று வருகின்றனர். மேலும் அந்த வேலியில் தற்போது Welcome to Bra Draona என போர்டு வைத்து பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இப்போது நம் அனைவருக்கும் ஒரு கேள்வி எழலாம். எதற்காக பெண்கள் தங்களின் உள்ளாடைகளை கழற்றி வேலியில் தொங்கவிட்டு செல்கின்றனர்? என்பது தான் அந்த கேள்வியாக இருக்கலாம். இதற்கு விடையை காண வேண்டும் என்றால் நாம் 26 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.
இஸ்ரேலுக்கு எதிராக கிளம்பும் இஸ்லாமிய நாடுகள்? அமெரிக்காவுக்கும் ஸ்கெட்ச்.. ஈரானின் மாஸ்டர் பிளான்
அதாவது கடந்த 1998ம் ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் 1999ம் ஆண்டு புத்தாண்டு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நாட்களில் இந்த கரோடோனா வேலியில் பெண்களின் 4 உள்ளாடைகள் என்பது இருந்தது. இதனை பார்த்த மேலும் சில பெண்கள் அந்த வேலியில் தங்களின் உள்ளாடைகளை விட்டு சென்றனர். இதனை பார்த்த பிற பெண்களும் அடுத்தடுத்து உள்ளாடைகளை அங்கு விட்டு சென்றனர்.
இதனால் வேலியில் உள்ளாடைகளின் எண்ணிக்கை என்பது அதிகரிக்க தொடங்கியது. இதற்கிடையே ஒரு தகவலும் பரவ தொடங்கியது. கரோடானா வேலியில் உள்ளாடைகளை விட்டு செல்லும் பெண்களுக்கு தீங்கு நடக்காது. மனதில் நினைத்த விஷயங்கள் நடக்கும். விருப்பமான ஒருவர் கணவராக அமைவார் என்ற தகவலும் கட்டுக்கதையாக பரவ தொடங்கியது. இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து அங்கு சென்ற பெண்கள் உள்ளாடையை வேலியில் விட்டு சென்றனர்.

தற்போது இந்த இடம் மிகவும் பிரபலமாகி உள்ளது. தினமும் பெண்கள் அங்கு சென்று வருகின்றனர். தற்போது இதனை ‛தி நியூசிலாந்து மார்பக புற்றுநோய் அறக்கட்டளை’ எனும் தொண்டு நிறுவனம் பயன்படுத்த தொடங்கி உள்ளது. அந்த தொண்டு நிறுவனம் சார்பில் கரோடானா பிரா வேலியின் அருகே டொனேஷன் பாக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் அதில் நன்கொடையை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் அடுத்த சக்சஸ்.. ஹிஸ்புல்லா முக்கிய தளபதி கொலை.. அட இவர் அமெரிக்காவையே அலற வைத்தவராச்சே!
அங்கு வரும் பெண்களும் தங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். இதனால் ஆண்டுக்கு பெரும்தொகை நன்கொடையாக கிடைக்கிறது. அதன்மூலம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பார்த்தால் என்ன காரணம் என்றே தெரியாமல் தொடங்கிய கரோடோனா பிரா வேலி என்பது தற்போது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் இடமாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications