பாதுகாப்புத் துறையில் தனியார் நுழைந்தால் என்ன குழப்பம் நடக்கும்.. ரஷ்யா ஒரு உதாரணம்!
மாஸ்கோ: ரஷ்யாவில் தனியார் மில்லிடரியாக கருதப்படும் வாக்னர் குழு இப்போது ரஷ்ய அரசுக்கு எதிராகவே திரும்பியுள்ளது. இதனால் ரஷ்ய அதிபர் புதின் தொடங்கிப் பல டாப் தலைவர்களும் கடும் கோபத்தில் உள்ளனர்.
ரஷ்யா இப்போது மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் தள்ளப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் கடந்த ஆண்டு பிப். மாதம் தொடங்கிய உக்ரைன் போர், இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷ்ய ராணுவத்தை உக்ரைன் வலுவாக எதிர்த்து வருகிறது.

இதனால் அங்கே பல மாதங்களாகப் போர் நீட்டித்து வருகிறது. மற்றொருபுறம் இப்போது ரஷ்யாவிலேயே உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தனியார் ராணுவம் ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ ராணுவத்தை எதிர்க்கிறது. இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.
போர்: ரஷ்யாவைப் பொறுத்தவரை அங்குள்ள வாக்னர் குழு இப்போது ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளது. ரஷ்ய ராணுவம் தங்களைத் தாக்கியுள்ளதாகவும் இதற்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும் என்று வாக்னர் குழுவின் தலைவர் ப்ரிகோஜின் வெளிப்படையாகப் பேசியுள்ளார். அங்கே எல்லையில் உள்ள ரோஸ்டோவ் நகரை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில், மற்ற நகரங்களிலும் தாக்குதலை நடத்தலாம் எனக் கூறப்படுகிறது.
ரஷ்ய அரசே வளர்த்துவிட்ட வாக்னர் குழு இப்போது அவர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். வாக்னர் குழு என்பது அங்கே உள்ள தனியார் ராணுவம் ஆகும். என்னது தனியார் ராணுவமா என ஷாக் ஆக வேண்டாம். உலகெங்கும் இதுபோல தனியார் ராணுவங்கள் இருக்கிறது. அவர்கள் எந்தவொரு குறிப்பிட்ட நாட்டிற்குக் கீழும் வர மாட்டார்கள். காசு கொடுத்து யார் எந்த வேலையைச் செய்யச் சொன்னாலும் அதை கச்சிதமாகச் செய்து முடித்துவிடுவார்கள்.

தனியார் ராணுவம்: நவீன காலத்தில் தனியார் ராணுவம் என்பது 1960களில் இருந்தே இருக்கிறது. அப்போது 1965இல் முன்னாள் பிரிட்டன் ராணுவ வீரர் சர் டேவிட் ஸ்டிர்லிங் மற்றும் ஜான் வுட்ஹவுஸ் ஆகியோர் இணைந்து வாட்ச்கார்ட் இன்டர்நேஷனல் என்ற தனியார் மிலிட்டரியை ஆரம்பித்தனர். அவர்கள் ஏமன் நாட்டில் முதலில் பணியமர்த்தப்பட்டனர். ஜிம்பாவே, லிபியா நாடுகளிலும் கூட இவர்கள் வேலை செய்தனர். இந்த வாட்ச்கார்ட் இன்டர்நேஷனல் தான் முதல் தனியார் ராணுவம், அதன் பிறகு பல தனியார் ராணுவங்களைப் பலரும் ஆரம்பித்துள்ளனர்.
அப்படி ரஷ்யாவில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று தான் வாக்னர். இது ரஷ்யாவின் டிபால்ட் தனியார் ராணுவமாகப் பார்க்கப்படுகிறது. ரஷ்ய அதிபர் புதினின் நெருங்கிய நண்பரான ப்ரிகோஜின் என்பவரின் தலைமையில் இயங்கி வந்தது. இந்த தனியார் ராணுவம் ரஷ்யாவில் சட்டத்திற்கு அப்பாற்பட்டுச் செயல்படும். இதனால் வெளிநாடுகளில் பல மிஷன்களுக்கு ரஷ்யாவே இந்த தனியார் ராணுவத்தைப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

ரஷ்யாவின் தனியார் ராணுவம்: இது எப்போதும் ரஷ்ய அரசுக்காகவே இதுவரை வேலை செய்துள்ளது. இதனால் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிநவீன கருவிகள் இவர்களுக்கு வழங்கப்படும். அவர்கள் சிரியா, லிபியா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு மற்றும் மாலி எனப் பல நாடுகளில் உள்நாட்டுப் போர் சமயங்களில் இறங்கி வேலை செய்துள்ளனர். இங்கே பெரும்பாலும் ரஷ்ய அரசுடன் இணைந்து சண்டையிட்டு வருகின்றனர். வாக்னர் குழு பல போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டு இருக்கிறது.
இருப்பினும், ரஷ்யச் சட்டத்திற்கு இவர்கள் கட்டுப்பட மாட்டார்கள் என்பதால் அதிகாரப்பூர்வமற்ற மிஷன்களில் ரஷ்ய ராணுவமே பல முறை இவர்களைப் பயன்படுத்தியுள்ளது. இப்போது இதே குழு இவர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. தேவையான ஆயுதங்களும், அதிகப்படியான செல்வாக்கும் இருந்தால் தனியார் ராணுவம் எந்தளவுக்கு ஆபத்து என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம். பல காரணங்களுக்கா வாடகைக்குப் படைகளை அமர்த்திய ரஷ்யா இப்போது அதே படைகளால் பெரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications