"பேய்" விமானம்.. அதுவும் சரியா காலை 5.55 மணிக்கு! ஆஸ்திரேலியாவை அலறவிடும் கத்தார் ஏர்வேஸ்! என்னாச்சு
மெல்போர்ன்: தினமும் அதிகாலை சரியாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு இரு ஆஸ்திரேலியா நகரங்களுக்கு இடையே காலியாக ஒரு கோஸ்ட் விமானம் இயக்கப்படுகிறது. அதற்கான காரணம் என்ன தெரியுமா.. வாங்கப் பார்க்கலாம்.
சர்வதேச அளவில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் மிட்டில் கிளாஸ் மக்கள் வருமானம், குறையும் விமான கட்டணம் என இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

அதிலும் குறிப்பாக Low cost ஏர்லைன் எனப்படும் குறைந்த விலையில் இயங்கும் விமானங்கள் வந்தவுடன் சர்வதேச விமானங்களில் பணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இப்போதெல்லாம் விமானங்களில் டவுன் பஸ்களை போல அதிகபட்ச பயணிகளையே ஏற்றிச் செல்கிறார்கள்.
பேய் விமானங்கள்: நிலைமை இப்படி இருக்க ஆஸ்திரேலியாவில் தினசரி காலை 5.55 மணிக்கு மெல்போர்ன் நகரில் இருந்து கத்தார் ஏர்வேஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று கிட்டதட்ட காலியாக அடிலெய்டு நகருக்குச் செல்கிறது. 354 சீட் கொண்ட இந்த விமானத்தில் எப்போதும் 4, 5 பேர் மட்டுமே இருப்பார்கள்.
பொதுவாக இப்படி ஆட்களே இல்லாமல் காலியாக இயக்கப்படும் விமானங்களைப் பேய் விமானங்கள் அதாவது ghost fligts என்று அழைப்பார்கள். ஆனால், கத்தார் ஏர்வேஸ் விமானம் எதற்காக காலியாக விமானங்களை இயக்குகிறது.. அதுவும் ஆஸ்திரேலியாவில் என்ற குழப்பம் வரலாம்
என்ன காரணம்: சொந்த நாட்டில் காலியாக இயக்கினால் கூட ஏதோ அரசு விதிமுறைகளால் இப்படிச் செய்கிறார்கள் எனப் புரிந்து கொள்ளலாம். ஆனால், ஆஸ்திரேலியாவில் ஏன் கத்தார் ஏர்வேஸ் இப்படி செய்கிறார்கள் என்று புரியாமல் இருக்கலாம். இப்படி காலியாக இயக்குவதால் கத்தார் ஏர்வேஸுக்கு நஷ்டம் எல்லாம் இல்லை.. சொல்லப்போனால் பல கோடி ரூபாய் லாபம் தான். சட்டத்தில் இருக்கும் சின்ன ஓட்டையைப் பயன்படுத்தி காலியாக விமானத்தை இயக்கியும் பல கோடியை அள்ளுகிறார்கள். அது எப்படி எனக் கேட்கிறீர்களா.. வாங்கப் பார்க்கலாம்.
பொதுவாக இரண்டு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகே விமானச் சேவையை ஆரம்பிக்க முடியும். இரு நாடுகளும் தங்கள் நாட்டு நிறுவனங்கள் லாபம் பெற வேண்டும் என்பதை மனதில் வைத்தே ஒப்பந்தங்களைப் போடும். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே விமானச் சேவையைத் தொடர்பாகப் போடப்புடம் ஒப்பந்தத்தில் பல கட்டுப்பாடுகள் இருக்கும். அப்படித்தான் ஆஸ்திரேலியா மற்றும் கத்தார் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் பல கட்டுப்பாடுகள் இருந்தன.
அதிகபட்சம் 28 தான்: இந்த ஒப்பந்தத்தின்படி ஆஸ்திரேலியாவின் 4 முக்கிய நகரங்களுக்கு கத்தாரில் இருந்து வாரம் 28 விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. ஆஸ்திரேலியா விமானங்களையும் பயணிகள் பயன்படுத்த வேண்டும் என்பதாலேயே இந்த விதி. பிரிஸ்பேன், சிட்னி, மெல்போர்ன், பெர்த் ஆகிய 4 முக்கிய நகரங்களுக்கு இந்த கட்டுப்பாடு உள்ளது. ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை இந்த 4 முக்கிய நகரங்களில் மட்டுமே பெரும்பாலான மக்கள் வசிக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் மற்ற நகரங்களில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால், அங்கே விமானங்களை இயக்கினால் அது நஷ்டத்திலேயே முடியும். அதேநேரம் இந்த லிஸ்டில் உள்ள 4 நகரங்களுக்குச் செல்லும் கத்தார் ஏர்வேஸின் 28 விமானங்களும் எப்போதும் ஹவுஸ்புல் ஆகிவிடும். எவ்வளவு தேவை இருந்தாலும் கூடுதல் விமானங்களை இயக்க முடியாது. இதன் காரணமாகவே கத்தார் ஏர்வேஸ் இந்த யுக்தியைக் கையில் எடுத்துள்ளது.
இதுதான் விஷயமே: அதாவது இந்த 28 விமான கட்டுப்பாடு என்பது 4 நகரங்களுக்கு மட்டுமே. மற்ற நகரங்களுக்கு எவ்வளவு விமானங்களை வேண்டுமானாலும் இயக்கிக் கொள்ளலாம். இதன் காரணமாகவே கத்தார் ஏர்வேஸ் கத்தாரின் தோஹா ஏர்போர்ட்டில் இருந்து மெல்போர்ன் வழியாக அடிலெய்டு செல்கிறது. இதில் பயணிக்கும் 95% பயணிகள் மெல்போர்ன் செல்லும் பயணிகளாகவே இருப்பார்கள். இருப்பினும், இது இறுதியாகச் சென்று சேரும் இடம் அடிலெய்டு என்பதால் இது 28 விமான வரம்பிற்குள் வராது.
மேலும், தோஹா டூ அடிலெய்டு யாரும் புக் செய்யாமல் இருக்க கத்தார் ரேட்டை அதிகரிப்பது தொடங்கிப் பல விஷயங்களைச் செய்வார்கள். இதன் காரணமாகவே தினசரி இந்த விமானம் காலியாக செல்கிறது. என்னதான் மெல்போர்ன் டூ அடிலெய்டு விமானத்தை காலியாக இயக்கினாலும் கூட, தோஹா டூ மெல்போர்னில் கத்தார் ஏர்வேஸ் மொத்தமாகப் பணத்தை அள்ளிவிடும். விதிகளை மீறாமலேயே கத்தார் ஏர்வேஸ் பணத்தை அள்ளிவிடுகிறது.
அலறும் ஆஸ்திரேலியா: இதன் காரணமாகவே கத்தார் ஏர்வேஸ் தினசரி ஆஸ்திரேலியாவில் பேய் விமானங்கள் அதாவது கோஸ்ட் விமானங்களை இயக்குகிறது. அதேநேரம் கத்தார் ஏர்வேஸின் இந்த விமானச் சேவை ஆஸ்திரேலியா விமானங்களின் வருவாயைப் பாதிப்பதாக அங்கே எதிர்ப்புக் குரல்களும் கிளம்பியுள்ளது. மேலும், கத்தார் ஏர்வேஸ் என்றில்லை உலகெங்கும் இருக்கும் பல ஏர்வேஸ் நிறுவனங்கள் சட்டத்தில் இருக்கும் ஓட்டையைப் பயன்படுத்தி இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையான ஒன்றாகவே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications