"பூனை கண்ணை மூடிக் கொண்டால்"?.. புதின் போட்ட ஆர்டர்.. திமிறிய ஃபேஸ்புக்.. மொத்தமாக செக் வைத்த ரஷ்யா
ரஷ்யாவில் பேஸ்புக், ட்விட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக, கடந்த சில நாள்களாகவே தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரஷ்யாவில் நிறுத்து வருகின்றன... அந்த வகையில், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களின் அணுகலை தடுத்திட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருப்பது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.. காரணம், உக்ரைனைவிட ரஷ்யா ஆயுதப்படையினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.. படை பலம் அதிகம்.
எனினும், உக்ரைனில் பெரும்பாலான ஆண்கள் ராணுவப்பயிற்சி பெற்றிருப்பதால், ரஷ்யாவை எதிர்கொண்டு வருகிறார்கள்.. இதற்கு அமெரிக்கா உதவிக் கொண்டிருக்கிறது. உக்ரைன் மீது 10-வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன்
ரஷ்யாவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வந்தாலும், தன்னுடைய போக்கை ரஷ்யா இதுவரை மாற்றி கொள்ளவும் இல்லை.. தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷ்ய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தாலும், ரஷ்ய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வருகின்றன. கடந்தவாரம், பயனர்களின் பாதுகாப்பை கண்காணிக்க, Meta Platform Inc என்ற நிறுவனத்துக்கு சொந்தமான பேஸ்புக் ஒரு சிறப்பு நடவடிக்கையை எடுத்திருந்தது..

கண்காணிப்பு
அதன்படி, இந்த ஃபேஸ்புக் உக்ரைனில் நடந்து வரும் மோதலை கண்காணிப்பதுடன், பயனர்கள் தங்கள் சுயவிவரப் படத்தை லாக் செய்யும் வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியிருந்தது. மற்றொருபக்கம், உக்ரைனில் உள்ள ட்விட்டர் பயனர்கள் தங்கள் கணக்குகளை ஹேக்கர்கள் இடமிருந்து எவ்வாறு பாதுகாக்கலாம் என்றும் ட்விட்டர் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.. ட்விட்டர் பயனர்கள் தங்கள் கணக்குகளை செயலிழக்கச் செய்யுமாறும், அவர்களின் ட்விட்டரை தனிப்பட்டதாக வைத்திருக்குமாறும் ட்விட்டர் நிறுவனம் கேட்டு கொண்டிருந்தது..

கமெண்ட்கள்
அதாவது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ரஷ்யாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்ற அனைத்தையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது ரஷ்யாவுக்கே சற்று ஷாக்தான்.. ட்விட்டர் பயனர்கள் தங்கள் கணக்குகளை எவ்வாறு செயலிழக்க செய்யலாம் என்பது குறித்த தகவலையும் அந்த நிறுவனம் ஷேர் செய்திருந்தது.. இதையடுதது, சோஷியல் மீடியாவில் டிக்டாக், ஸ்னாப்சாட், டிவிட்டர் போன்ற தளங்களில் போருக்கு எதிரான கருத்துகளை பொதுமக்கள் பதிவிடத் தொடங்கினர். இதில் பெரும்பாலும் ரஷ்யாவை தாக்கியும், விமர்சித்தும், கண்டித்தும், குற்றஞ்சொல்லியுமே கமெண்ட்கள் பதிவாகி கொண்டிருக்கின்றன..

தொழில்நுட்ப நிறுவனங்கள்
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக, கடந்த சில நாள்களாக தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ரஷ்யாவில் நிறுத்தி வருகின்றன. காரணம், ஃபேஸ்புக்கிலும், ட்விட்டர், யூடியூப் போன்றவற்றிலும், உக்ரைனில் நடத்தப்பட்டு வரும் சிறப்பு ராணுவ நடவடிக்கைகள் குறித்து ரஷ்யாவை கண்டித்துதான் கருத்துக்கள் விழுகின்றன. இதற்கு பதிலடியாக, உக்ரைன் மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் ரஷ்ய அரசு செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன...

பாகுபாடு
இதன்காரணமாக, ரஷ்யாடுடே, ஸ்புட்னிக் போன்ற ரஷ்ய அரசு ஊடகங்கள் ஐரோப்பாவில் ஒளிபரப்பாவதை பேஸ்புக் நிறுவனம் தடுத்துள்ளது.. ரஷ்யாவில் பேஸ்புக் செயலிக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்திருக்கிறது.. ரஷ்ய அரசு செய்தி நிறுவனங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியதால் ரஷ்யாவில் பேஸ்புக் செயலிக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு காரணம் தெரிவித்துள்ளது.. இதனிடையே, இப்போள்ள ஃபேஸ்புக்கை தொடர்ந்து ட்விட்டருக்கும் ரஷ்யாவில் தடை விதிக்கப்படுவதாக ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

பேஸ்புக் தடை
இதுகுறித்து ஃபேஸ்புக் நிர்வாகி நிக்கிளெக் சொல்லும்போது, "ரஷ்ய நாட்டுக்கு சொந்தமான 4 ஊடக நிறுவனங்கள் பேஸ்புக்கில் பதிவிடும் உள்ளடக்கத்தை உண்மைதன்மையை சரிபார்ப்பது மட்டுமின்றி, லேபிளிங் செய்வதை நிறுத்துமாறு ரஷ்ய அதிகாரிகள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள்.. ஆனால், நாங்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.. அதற்காகத்தான் இப்போது ரஷ்யாவில் ஃபேஸ்புக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
Recommended Video

தவறான கருத்து
மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க கூடாது என்பதற்காக, தன் நாடு பற்றி தவறான கருத்துக்களை யாரும் சொல்ல கூடாது என்பதற்காக, சொந்த நாட்டு பிரச்சாரத்தை மட்டுமே மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ரஷ்யா முயன்று கொண்டிருக்கிறது.. பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டு போகும் என்று நம்ம ஊரில் சொல்வார்களே.. அதுபோலதான் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையும்..!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications