"இது ரொம்ப புதுசா இருக்கே.." வாயை திறக்க மறுக்கும் புதின்! கிளர்ச்சி முயற்சியில் இதை நோட் பண்ணீங்களா
மாஸ்கோ: புதினின் 25 ஆண்டுக்கால தலைமை பதவிக்குச் சவால் விடுக்கும் வகையில் நடந்த ஆயுதமேந்திய கிளர்ச்சி ரஷ்யாவில் முடிவுக்கு வந்துள்ள நிலையில், புதின் இந்த விஷயத்தை கையாண்ட விதம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ரஷ்யாவில் கடந்த வாரம் யாருமே எதிர்பார்க்காத வகையில் சில ஷாக் சம்பவங்கள் அரங்கேறின. அங்குள்ள தனியார் ராணுவமான வாக்னர் குழு அந்நாட்டின் ராணுவ தலைமைக்கு எதிராகத் திரும்பியது. இதனால் அங்கே ஒருவித பதற்றம் ஏற்பட்டது.

அங்குள்ள வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக வெளிப்படையாகவே கருத்துகளைக் கூறியிருந்தார். தங்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் பிரிகோஜின் கூறியிருந்தார்.
ரஷ்யா: மேலும், ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள ரோஸ்டோவ் நகரையும் அவர்கள் முற்றுகையிட்டனர். அங்குள்ள பிராந்திய ராணுவ தலைமையிடத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன. இதனால் அங்கே ஒருவித பதற்றமான சூழலே நிலவியது. முதலில் இது ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிரான நடவடிக்கை இல்லை என்றும் ரஷ்ய ராணுவத்திற்கு எதிரான நடவடிக்கை என்றும் வாக்னர் தலைவர் பிரிகோஜின் சாடியிருந்தார். இருப்பினும், சற்று நேரத்திலேயே தங்களைத் துரோகிகள் எனச் சொல்லி ரஷ்ய அதிபர் மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாகச் சாடினார்.
இதனால் அங்கே உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இருப்பினும், சில மணி நேரத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் திடீரென அமைதியாகிவிட்டார். மறுபுறம் கிளர்ச்சியை "தேசத்துரோகம்" என்றும் அதில் ஈடுபட்டார்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என புதின் எச்சரித்த பிறகு அவரும் பொதுவெளிக்கு வரவில்லை.
என்ன நடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் பிரிகோஜினின் வாக்னர் குழு ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவை நோக்கி அதிரடியாகச் செல்ல ஆரம்பித்து.. பின்னர் அப்படியே அமைதியாக மாறிவிட்டது. சனிக்கிழமை நள்ளிரவில் நடந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தலைகீழ் மாற்றம் நடந்துள்ளது. இருப்பினும், புதினுக்கு எதிராக யாரும் தலைதூக்கவே முடியாது என்று கருதப்பட்ட நிலையில், அதை இந்த தனியார் ராணுவத்தின் நடவடிக்கை சுக்கு நூறாக உடைத்துள்ளது.
உக்ரைன் போர் ஒரு பக்கம் முடியாமல் நீளும் நிலையில், இந்த சம்பவம் புதின் தலைமைக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி என்பது புதினின் அதிகாரத்திற்கு நேரடியாக விடப்பட்ட சவால் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் புதின் பல்வேறு விஷயங்களுக்குப் பதிலளிக்க வேண்டி இருக்கும் என்றும் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்திருந்தார்.
புதின்: பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்க தான் இந்த கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். இருப்பினும், இது தொடர்பாக புதின் பொதுவெளியில் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் புதின் தான் வாக்னர் தலைவரை பெலாரஸ் செல்ல அனுமதிப்பதாகவும், கிளர்ச்சியில் ஈடுபட்டோர் மீது கிரிமனல் நடவடிக்கை எடுக்கப்படாது என உத்தரவாதம் அளித்தாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை வீழ்த்துவதற்குப் பதிலாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பாதுகாப்பு உத்தரவாதங்களை புதின் அளித்துள்ளது அவர் பலவீனமாக இருப்பதையே காட்டுகிறது என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர். இதுவரை பேச்சுவார்த்தைகளுக்குப் பெரியளவில் முக்கியத்துவம் தராது புதின் இந்த முறை நேர்மாறாக நடந்துள்ளார். மேலும் கிளர்ச்சி முயற்சிக்குப் பின் அமைதியாக இருக்கும் புதின், அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications