Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென் கொரிய தீவில் சிக்கிய இந்திய யூடியூபர்? "கிரிமினல் போல நடத்துனாங்க!" கதறல்.. என்ன பிரச்சனை?

Subscribe to Oneindia Tamil

சியோல்: ஆசையாகத் தென் கொரியா நாட்டிற்குச் சுற்றுலா சென்ற பிரபல இந்திய டிராவல் விலாகர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இரவு முழுக்க ரூமில் அடைத்த அதிகாரிகள் உடனடியாக அவரை நாட்டை விட்டு வெளியேறச் சொல்லியுள்ளனர். யார் அந்த யூடியூபர் அவர் எதிர்கொண்ட பிரச்சனை என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று தங்கள் பயணத்தை வீடியோ எடுத்து யூடியூபில் பதிவிடும் டிராவல் விலாக் தான் இப்போது டிரெண்டிங்கில் இருக்கிறது. இந்தியாவில் பலரும் இதுபோல டிராவல் விலாக் செய்வார்கள். அப்படி டிராவல் விலாக் செய்பவர் தான் சச்சின் அவஸ்தி! ஆனால், சமீபத்தில் அவருக்கு மிக மோசமான ஒரு அனுபவம் ஏற்பட்டுள்ளது.

Why South Korea Visa Rules Differ in Jeju Island Famous Indian youtuber detained and deported

தடுத்து நிறுத்தம்

அதாவது அவர் தனது மனைவியுடன் விடுமுறைக்காக தென்கொரியாவுக்குச் சொந்தமான ஜெஜு தீவுக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு அவருக்கு மிக மோசமான அனுபவம் நேர்ந்துள்ளது. ஜெஜு தீவில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இரவு முழுக்க தடுப்பு மையத்திலேயே வைக்கப்பட்டனர். பிறகு இறுதியில் நாடு கடத்தப்பட்டனர். அங்குத் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்தும் அவர் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

தங்களை ஜெஜு தீவில் அனுமதிக்காததால் வேறு வழியில்லாமல் உடனடியாகத் திரும்ப வேண்டி இருந்ததாகவும் இதனால் வழக்கமான டிக்கெட் விலையைக் காட்டிலும் 10 மடங்கு அதிக விலைக்கு விமான டிக்கெட் புக் செய்ய வேண்டி இருந்ததாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருந்தார். ஜெஜு தீவில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட என்ன காரணம்? இதுபோன்ற சிக்கலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

ஜெஜு தீவு

ஜெஜு என்பது தென் கொரியாவிலுள்ள சாதாரணச் சுற்றுலாத் தளம் இல்லை. அதிகாரப்பூர்வமாகவே அது 'ஜெஜு சிறப்புத் தன்னாட்சி மாகாணம்'. அதாவது தென்கொரியாவுக்குச் சொந்தமாக இருந்தாலும் கூட அது தன்னாட்சி கொண்ட பகுதி.! சட்ட திட்டங்களை அவர்களே உருவாக்கிக் கொள்ளாலாம். தீவின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் இயற்கைச் சூழல் அவ்வளவு அழகாக இருக்கும். இங்குப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மற்றும் ஒரு சுதந்திர சர்வதேச நகரை உருவாக்க இந்தச் சிறப்பு அந்தஸ்து கடந்த 2006ல் தரப்பட்டது.

சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, ஜெஜு விசா இல்லாத என்ட்ரியை அறிவித்து இருந்தது. அதாவது அங்குச் சுற்றுலா செல்ல உங்களுக்கு விசா தேவையில்லை. நேரடியாகவே சென்றுவிடலாம். அதாவது தென்கொரியா மெயின் தீவுக்குச் செல்லாமல் நேரடியாக ஜெஜு தீவுக்கு வந்து இறங்கினால் விசா தேவையில்லை என்பதே இதன் பொருளாகும்.

உத்தரவாதம் இல்லை

அதேநேரம் விசா இல்லாத என்ட்ரி என்பதாலேயே உங்களுக்கு நிச்சயம் அனுமதி கிடைக்கும் என அர்த்தமில்லை. ஒரு பயணியின் நோக்கம், ஆவணங்கள் திருப்திகரமாக இல்லை என்றால், தீவின் அதிகாரிகள் யாரை வேண்டுமானாலும் தடுத்து நிறுத்தலாம். அவர்கள் திருப்பி அனுப்பவும் முழு அதிகாரம் இருக்கிறது. அதாவது விசா தேவையில்லை என்றாலும் கூட கட்டாயம் அனைவருக்கும் அனுமதி கிடைக்கும் என அர்த்தமில்லை. யாரை வேண்டுமானாலும் திருப்பி அனுப்ப அதிகாரிகளுக்கு உரிமை இருக்கிறது.

நிபந்தனைகள்

  • பயணிகள் ஜெஜுவுக்கு வெளிநாட்டிலிருந்து நேரடியாக வர வேண்டும். தென் கொரிய மெயின் தீவு வழியாக வரக்கூடாது. மெயின் தீவு வழியாக வந்தால் கட்டாயம் விசா தேவை!
  • தங்கும் கட்டுப்பாடு: ஜெஜு தீவில் மட்டுமே தங்க முடியும். தென் கொரியாவின் இதர தீவுகளுக்குச் செல்ல முடியாது.
  • அதிகாரியின் விருப்ப உரிமை: இதுதான் முக்கியம். ஒருவர் வரும் நோக்கம் தெளிவாக இல்லை அல்லது ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்றால் குடிவரவு அதிகாரிகளுக்கு அவர்களை மறுக்கும் உரிமை இருக்கிறது.
  • நிதி ஆதாரம்: அங்குத் தங்கும் அளவுக்கு உங்களிடம் நீதி ஆதாரம் இருக்கிறதா என்பதையும் சரி பார்ப்பார்கள்!

அவஸ்தி தனது வீடியோவில், அதிகாரிகள் அவரது ஆவணங்களைச் சரிபார்க்கவில்லை என்றும் முறையான விளக்கம் தரவில்லை என்றும் கூறியிருந்தார். இருப்பினும், அந்நாட்டின் சட்டப்பட்டி "தெளிவற்ற நோக்கம்" என்று சொன்னாலே போதும். அதிகாரிகள் கூடுதல் விளக்கத்தைக் கொடுக்க தேவையில்லை.

சிக்கல் என்ன

ஜெஜு தீவைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் இந்தத் தீவின் வழியாக நுழைந்து தென் கொரிய மெயின் தீவுக்கு செல்ல முயன்றதாகப் பல புகார்கள் உள்ளனர். மேலும், அனுமதிக்கப்பட்ட காலத்தைக் காட்டிலும் அதிகக் காலம் தங்கியதாகவும் புகார்கள் உள்ளன. இதனால் இந்தியர்களுக்கு அதிகாரப்பூர்வ முழு தடை இல்லை என்றாலும் பெரும்பாலான இந்தியர்களைத் தடுத்து நிறுத்திவிடுவார்களாம். இதுவே அங்குப் பிரதானச் சிக்கலாக உள்ளது.

அதேநேரம் இந்த முறை தென் கொரியாவுக்கு மட்டும் தனித்தன்மை வாய்ந்தது அல்ல. ஜார்ஜியா போன்ற நாடுகளும் விசா இல்லாத அல்லது ஆன் அரைவல் விசா இருக்கும் நாடுகளிலும் இதே சிக்கல் இருக்கிறது. அங்கும் கூட இந்தியப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் பிளானை கவனமுடன் திட்டமிடுங்கள்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+