ஒரு பாட்டில் பெட்ரோலால் ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆன பிச்சைக்காரர்.. காரணம் அன்பு !
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பிச்சைக்காரர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டி கொடுத்து இருக்கிறார்.
Recommended Video

நியூயார்க் : அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பிச்சைக்காரர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டி கொடுத்து இருக்கிறார். அந்தப் பிச்சைக்காரர் அதற்கு முன்பு அந்த பெண்ணுக்கு மிக முக்கியமான உதவி ஒன்றை செய்து இருக்கிறார்.
அந்தப் பிச்சைக்காரர் செய்த உதவிக்கு கைமாறாக அவருக்கு இப்போது அந்த பெண் ஒரு கோடி உதவி செய்ததுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி உலகம் முழுக்கு பரவி ஒரே நாளில் அந்த பெண்ணும், அந்தப் 'பணக்கார' பிச்சைக்காரரும் வைரல் ஆகி உள்ளனர்.
அந்த பெண் தனக்கு பிச்சைக்காரர் செய்த உதவி குறித்து பல இடங்களில் பேட்டி அளித்து வருகிறார். நேற்றுவரை ஒருவேளை உணவுகூட இல்லாமல் இருந்த அந்த பிச்சைக்காரர் இன்று கோடீஸ்வரர் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோலுக்கு அவசர உதவி
அமெரிக்காவின் நியூயார்க் பகுதியை சேர்ந்த 'கேட் மெக்லூர்' என்ற பெண் சரியாக ஒரு மாதத்திற்கு முன் நெடுஞ்சாலை ஒன்றில் கார் பெட்ரோல் இல்லாமல் நின்று இருக்கிறார். வீட்டில் பணத்தை மறந்து வைத்துவிட்டதால் பெட்ரோல் போட வழி இல்லாமல் முழித்து இருக்கிறார். அப்போது அங்கு இருந்த பிச்சைக்காரர் ஒருவர் தன்னிடம் இருந்த பணத்தைக் கொண்டு அந்த பெண்ணுக்கு கொஞ்சம் பெட்ரோல் வாங்கி கொடுத்து உதவி உள்ளார்.

உதவி செய்ய திட்டம்
இந்த நிலையில் வீட்டுக்கு சென்ற அந்த பெண் எப்படியாது அந்த பிச்சைக்காரருக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார். இதையடுத்து அவருடைய பேஸ்புக் பக்கத்தில் அந்த 'பெட்ரோல் சம்பவம்' குறித்து எழுதி இருக்கிறார். மேலும் அந்த பிச்சைக்காரருக்கு உதவ முடியுமா என்றும் கேட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு உதவ பலரும் முன்வருவதாக கமெண்ட் செய்து இருக்கின்றனர்.

ஒரு கோடி
முதலில் 10 லட்சம் பணம் திரட்டி கொடுக்கலாம் என்றுதான் அந்த பெண் நினைத்து உள்ளார். ஆனால் ஒரே மாதத்தில் அந்த பிச்சைக்காரருக்கு உதவுவதற்காக 1 கோடிக்கும் அதிகமான பணம் அந்த பெண்ணின் வங்கிக் கணக்கில் போடப்பட்டு இருக்கிறது. இன்னும் கூட அவரது கணக்கில் பணம் போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கோடிஸ்வரன் ஆனா பிச்சைக்காரர்
இந்த நிலையில் அவர் தனது கணக்கிற்கு வந்த மொத்த பணத்தையும் அந்த பிச்சைக்காரரிடம் கொடுத்தார். முதலில் அந்த பிச்சைக்காரருக்கு அந்த பெண் யார் என்பதே தெரியவில்லை. பின் அனைத்தையும் விளக்கிய பின்பே அந்த பிச்சைக்காரருக்கு அனைத்தும் நினைவுக்கு வந்து இருக்கிறது. தற்போது அந்த பிச்சைக்காரர் தன்னுடைய பெயர் 'ஜானி' என்று குறிப்பிட்டு இருக்கிறார். அவருக்கு நிறைய பரிசுகளும் குவிந்து வருகிறது.
-
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications