"அத்தனையும் பொய்யா கோப்பால்".. போலீசாரையே மிரள வைத்த பெண்.. கடைசியில் "அந்த" ட்விஸ்ட்தான்.. !
போலீசாரையே மிரள வைத்து ஏமாற்றி உள்ளார் ஒரு பெண்
கேப்டவுன்: அத்தனையும் பொய்யா கோப்பால்.. ஏன் இப்படி என்று தாமராவை பார்த்து மக்கள் அதிர்ந்து போய் கேட்டு வருகிறார்கள்..!
தென்னாப்ரிக்காவில் பிரிட்டோரியா நகரை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர், ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.. இந்த செய்தி கடந்த 2 நாட்களாகவே உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆகி கொண்டிருக்கிறது.
அந்த பெண்ணின் பெயர் கோஷியாமே தாமரா சிதோலே... கணவர் பெயர் சோடெட்சி. இந்த தம்பதியருக்கு ஏற்கனவே 6 வயசில் 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.. ரெண்டு பேருமே இரட்டை குழந்தைகள்.

டாக்டர்கள்
இந்நிலையில் தாமரா மறுபடியும் கர்ப்பம் ஆனார்.. இந்த குழந்தையும் இரட்டை குழந்தையாக இருக்குமோ என்ற ஆர்வத்தில் இருந்தார்.. அதனால், ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார்கள்.. அப்போது 8 குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் சொல்லி உள்ளனர். ஆனால், 10 குழந்தைகள் பிறந்துவிட்டது.

சவுக்கியம்
அந்த குழந்தைகளில் பெண்கள் 3 பேர், ஆண்கள் 7 பேர்... குழந்தைகள் எல்லாருமே பூரண சவுக்கியமாக இருக்கிறார்கள்.. ஆனால், தாயின் உடல் நலனை கருத்தில் கொண்டு சில மாதங்கள் குழந்தைகளை இன்குபெட்டரில் வைத்து சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

பேட்டி
இதை பற்றி தாமரா சொல்லும்போது, "எப்படியும் 8 குழந்தைகள் பிறக்கும் என்றுதான் எதிர்பார்த்தேன்.. ஆனால், 10 பிறந்துவிட்டது.. இந்த சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.." என்றார். அதுமட்டுமல்ல, இந்த பிரசவத்துக்காக எந்தவொரு மருத்துவ சிகிச்சையும் தாமரா மேற்கொள்ளவில்லையாம்.. இயற்கை முறையிலேயே கருத்தரித்திருக்கிறார்.

சிசேரியன்
ஆனால், வழக்கத்தை விட வயிறு தான் கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கிறது.. சிசேரியன் முறையில்தான் இந்த 10 குழந்தைகளையும் டாக்டர்கள் வெளியே எடுத்திருக்கிறார்கள்... இந்த சம்பவம்தான் உலகமெல்லாம் வைரலானது.. காரணம், ஹலிமா சிசே என்ற பெண்மணி 9 குழந்தைகளை பெற்றெடுத்திருப்பதுதான் இதுவரை உலக சாதனையாக இருக்கிறது.. இப்போது அந்த சாதனையை தாமரா முறியடித்துவிட்டதாக செய்திகள் பரபரத்தன.

கர்ப்பம்
தாமரா கர்ப்பமாக இருக்கும்போது எடுத்த படமும், பிரசவத்துக்கு பிறகு இன்குபெட்டரில் இருக்கும் குழந்தைகள் படமும் சேர்ந்தே வெளியாகின.. உலக சாதனையிலும் தாமரா இடம்பெற போகிறார் என்ற செய்திகள் மீடியாவை ஆக்கிரமித்தன.. இதனால் ஒரே நாளில் தாமரா ஃபேமஸ் ஆனார்.. ஆனால், அத்தனையும் தூள் தூளாகிவிட்டது.. தாமரா சொன்னதெல்லாம் பொய்யாம்.. இவருக்கு 10 குழந்தைகள் மட்டுமல்ல, ஒரே ஒரு குழந்தைகூட பிறக்கவில்லையாம்.. அப்படி ஒரு ஆபரேஷனும் நடக்கவில்லையாம்.

குழந்தைகள்
ஒரு பெண்ணுக்கு 10 குழந்தைகள் பிறந்துள்ளது என்ற இந்த செய்திகளை பார்த்ததுமே சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியே மிரண்டு போய் உள்ளது.. இப்படி ஒரு பிரசவமே தங்கள் ஆஸ்பத்திரியில் நடக்கவில்லை என்று போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து போலீசார், டாக்டர்கள் உதவியுடன் தாமராவை பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் இது ஒரு புருடா என்பது தெரியவந்தது...

கேமரா
இதைவிட இன்னொரு ட்விஸ்ட் உள்ளது.. 10 குழந்தைகள் பிறந்ததாக சொல்லி, கேமராவில் சிரித்து கொண்டே இருந்தாரே, அந்த தாமரா, மனநிலை பாதிக்கப்பட்டவராம்.. இப்போது மென்ட்டல் ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்துள்ளனர் போலீசார்.. கடைசியில், மனநிலை சரியில்லாத தாமரா, இந்த 2 நாட்களாக நம்மை எல்லாரையும்தான் கிறுகிறுக்க வைத்துள்ளார்..!
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications